டீமன் திரைப்பட விமர்சனம் : டீமன் ஹாரர் பிரியர்களுக்கான படம் | ரேட்டிங்: 2.5/5

0
259

டீமன் திரைப்பட விமர்சனம் : டீமன் ஹாரர் பிரியர்களுக்கான படம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்
விக்னேஷ் சிவனாக சச்சின்
கார்த்திகாவாக அபர்நதி
அஸ்வினாக கும்கி அஸ்வின்
ஜெஸ்ஸியாக சுருதி பெரியசாமி
பிரபாவாக கேபிஒய் பிரபாகரன்
மஹிமாவாக ரவீனா தாஹா
நவ்யாவாக நவ்யா சுஜி
தரணி என தரணி
அபியாக அபிஷேக்

தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு : ஆர்.எஸ்.ஆனந்தகுமார்
இசை: ரோனி ரபேல்
எடிட்டர்: எம்.ரவிக்குமார்
கலை வடிவமைப்பு: விஜய் ராஜன்
ஒப்பனை: ஏ.பி.முகமது
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்
தயாரிப்பு மேலாளர்: குமார் வீரப்பசாமி
தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன்
தயாரிப்பு : ஆர். சோமசுந்தரம்
வெளியீடு : பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் டி.யுவராஜ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திர, ரேகா

விக்னேஷ் சிவன் (சச்சின்) இயக்குனராக ஆக வாய்ப்பு தேடும் போது, ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது திகில் திரைக்கதையை உருவாக்குவதற்காக ஒரு அபார்ட்மெண்டில் குடியேறுகிறார். ஒரு அபார்ட்மெண்டில் குடியேறிய பிறகு விசித்திரமான நிகழ்வுகளை சந்திக்கிறார். அந்த வீட்டில் தூங்கும்போது அவருக்கு கெட்ட கனவுகள் வந்து அவருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு இரவும் பயத்தை ஏற்படுத்தும் வித்தியாசமான கனவுகள் அனுபவிக்கிறார், அவரது வாழ்க்கையை உருக்குலைக்கிறது. அவர் மருத்துவரிடம் இந்த விஷயத்தை பற்றி ஆலோசனை கேட்கும்போது,மருத்துவர் இது சாதாரண மனபிரம்மை தான் என்று சொல்லி மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கிறார். வீட்டை வாடகைக்கு விட்டவரிடம் மிரட்டலான முறையில் அவர் விசாரணை செய்யும் போது, அந்த வீட்டில் உள்ள ரகசிய கதவு தான் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை தெரிந்து கொள்கிறார். வீட்டில் உள்ள மர்ம கதவின் பின்னால் உள்ள இருண்ட ரகசியங்கள் என்ன? அமானுஷ்ய சக்திகள் இடம் இருந்து சச்சின் எப்படி தப்பிக்கிறார்? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகன் விக்னேஷ் சிவனாக சச்சின் ஒரு தனித்துவமான நடிப்பை வழங்கியுள்ளார். பேய்களால் மிரட்டப்படும் காட்சிகள் நம்மையும் பயமுறுத்துகிறார்.

சச்சினின் அழகிய காதலி கார்த்திகாவாக அபர்நதி சில காட்சிகளில் வந்து போகிறார்.

அஸ்வினாக கும்கி அஸ்வின், ஜெஸ்ஸியாக சுருதி பெரியசாமி, பிரபாவாக கேபிஒய் பிரபாகரன், மஹிமாவாக ரவீனா தாஹா, நவ்யாவாக நவ்யா சுஜி, தரணி என தரணி, அபியாக அபிஷேக் மற்றும் காவல் அதிகாரியாக வரும் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு நடிப்பின் மூலம் கதையோடு பயணித்துள்ளனர்.

ஹாரர் படங்கள் என்றாலே விஷுவல், பின்னணி இசை, கலை வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் விறுவிறுப்பான படத்தொகுப்பு தான் படத்திற்கு ஆணிவேர். ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார், இசையமைப்பாளர் ரோனி ரபேல், எடிட்டர் எம்.ரவிக்குமார், கலை இயக்குனர் விஜய் ராஜன், ஒப்பனையாளர் ஏ.பி.முகமது ஆகியோர் நேர்த்தியாக வேலை பார்த்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஒன்றாக இணைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையில் பல்வேறுபட்ட மர்ம நிகழ்வுகள் புகுத்தி பரபரப்பான நகரத்தில் ஒரு அபார்ட்மெண்டில் உள்ள வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள் உடன், சஸ்பென்ஸ் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.

மொத்தத்தில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் டீமன் ஹாரர் பிரியர்களுக்கான படம்.