ஐமா திரைப்பட விமர்சனம் : ஐமா சர்வைவல் திரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
237

ஐமா திரைப்பட விமர்சனம் : ஐமா சர்வைவல் திரில்லர் | ரேட்டிங்: 2.5/5

தமிழ் மற்றும் மலையாளத்தில் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களை தயாரித்த ராகுல் ஆர் கிருஷ்ணா ஐமா திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

யூனுஸ், எவ்லின் ஜூலியட், அகில் பிரபாகரன், சிசிரா, மேக மாலு மனோகரன் மற்றும் ஷாஜி ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை: கே ஆர்.ராகுல்
ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன்
கலை : ஜீமன்
எடிட்டிங் : அருண் ராகவ்
ஸ்டண்ட் : அஷ்ரஃப் குருக்கள்
இயக்கம் : ராகுல் ஆர்.கிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்

தற்கொலைக்கு முயன்ற மரியா (எல்வின் ஜூலியட்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள். அங்கே ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை அதே மருத்துவமனையில்  சேர்க்கிறான். மரியா நலமாகி வீடு திரும்புகிறாள். திடீரென தன் சகோதரனின் மரணத்தால் பாதிக்கப்பட்ட அவள் அந்நியர்களால் கடத்தப்பட்டுகிறாள். மறுபக்கம் உடல் நிலை சரியில்லாமல் உயிருக்குப் போராடும் தாயைக் காப்பாற்ற தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார் ஆதாம். மரியாவை போல ஆதாமும் அந்நியர்களால் கடத்தப்பட்டுகிறான். இருவரும் ஒரே இடத்தில் வெவ்வேறு அறைகளில் கை கால் கட்டப்பட்டு கிடக்க அவர்கள் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு ஓன்று சேர்ந்து அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அப்போது ஒரு குரல், “உங்கள் உடலில் விஷம் கலந்துள்ளது, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நீங்கள் தப்பிக்கவில்லை என்றால், நீங்கள் இறந்துவிடுவீர்கள்” என்று எதிரொலிக்கிறது. மேலும் இருவரும் உயிர் பிழைக்க கொடுக்கும் புதிரை கண்டுபிடித்து ஒரு அறைக்கு வரச் சொல்கிறது.  அங்கிருக்கும் மர்மம் என்ன? இருவரையும் யார், ஏன் கடத்தினார்கள்  துன்புறுத்துகிறார்கள்? யார் அந்த மர்ம மனிதன்? என்பது படத்தின் மீதிக்கதை.

அறிமுக நடிகர் யூனுஸ், பல ஆங்கிள்களில் அப்படியே விஜயை போல் தெரிகிறார். அது மட்டுமின்றி நடிப்பு, உரையாடல், உடல் மொழியிலும் என அனைத்திலும் விஜயை பின்பற்றுவது அப்பட்டமாக தெரிகிறது. உடல் மொழி, உரையாடல், அனைத்திலும் தனக்கு என்று தனி பாணியை கடைபிடித்தால் தொடர்ந்து திரையுலகத்தில் சிறப்பாக பயணிக்க முடியும். அதற்குண்டான பயிற்சியை சிரத்துடன் அவர் எடுக்க வேண்டும்.

எல்வின் ஜூலியட் மரியாவாக கதாபத்திரத்தில் அசத்தலான நடிப்பை வழங்கி கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி வில்லனாக வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டி கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

அகில் பிரபாகரன், சிசிரா, மேக மாலு மனோகரன் மற்றும் ஷாஜி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்,,,.

இசையமைப்பாளர் கே.ஆர்.ராகுல், ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன், கலை இயக்குனர் ஜீமன் மற்றும் எடிட்டர் அருண் ராகவ் ஆகியோரின் பங்களிப்பு திரில்லர் கதை களத்துக்கு முக்கியமான அங்கம் வகிக்க வேண்டும். ஐமா வின் வெற்றிக்கு இந்த தொழில் நுட்பகலைஞர்களின் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும்.

‘ஐமா’ என்றால் கிரேக்க மொழியில் இரத்தம் என்று பொருள். இந்தப்படம் உயிர்வாழும் விளையாட்டைச் சுற்றி இருவரின் போராட்டங்களுக்கு இடையே வெற்றி பெற்றாலும் தோற்றாலும் மரணம் நிச்சயம் என்பதை டைட்டில்க்கு சம்மதமே இல்லாத திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார். இயக்குனர் ராகுல் ஆர்.கிருஷ்ணா. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சஸ்பென்சை கூட்டியிருந்தால் படம் வேகமாவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து இருக்கும்.

மொத்தத்தில் தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் சண்முகம் ராமசாமி தயாரித்திருக்கும் ஐமா சர்வைவல் திரில்லர்.