“900 கோடி எங்கே?; முதல்வரே இந்த ஃபைல முதல்ல எடுங்க” – இயக்குநர் சேரனின் கோரிக்கை!

0
40

“900 கோடி எங்கே?; முதல்வரே இந்த ஃபைல முதல்ல எடுங்க” – இயக்குநர் சேரனின் கோரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரித படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முழுவேகத்தோடு பணியாற்றி வருகின்றனர். முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை பாதிப்பை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் தூர்வாரும் பணி, சாலைகளில் வடிகால் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டிருந்தார். அதனால் அதற்போது சென்னை நகரம் பெரும் மழை பாதிப்பின் சேதரங்களில் இருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த பணியை கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.கவினர் துளியளவும் மேற்கொள்ளாததன் விளைவே தற்போது சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீருக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கடந்த கால ஆட்சியாளர்கள் சென்னை நகரின் வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசிடம் இருந்து பெற்ற பணத்தையும் பங்கு போட்டு பிரித்துக்கொண்டதாகவும், இதில் பெரும் ஊழல் முறைகேட்டைச் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் முன்னணி திரைப்பட இயக்குநரும் நடிகருமான சேரன் இதுதொடர்பாக ட்விட்டர் தனது கருத்தை பதிவிட்டு முந்தைய ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் ஒன்றிய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்… இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதலமைச்சர் அய்யா. என்று தனியும் இந்த…” எனத் தெரிவித்துள்ளார்.