ரோமியோ விமர்சனம்: ரோமியோ நேர்த்தியான உணர்ச்சிகரமாக காதல் கதை | ரேட்டிங்: 3.5/5

0
498

ரோமியோ விமர்சனம்: ரோமியோ நேர்த்தியான உணர்ச்சிகரமாக காதல் கதை | ரேட்டிங்: 3.5/5

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்  சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் ரோமியோ படத்தை எழுதி இயக்கியுள்ளார் விநாயக் வைத்தியநாதன்.

இதில்  விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி,  யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, ஷா ரா, ரோஜு, ஷாலினி விஜயகுமார், அத்வைத் , ஜெய சம்ரிதா,  முரளி  ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஃபரூக் .ஜே பாஷா- ஒளிப்பதிவாளர், பரத் தனசேகர் – இசையமைப்பாளர், விஜய் ஆண்டனி – எடிட்டர், ஷிமோனா ஸ்டாலின் -ஆடை வடிவமைப்பாளர், கமலநாதன் – கலை இயக்குநர், மக்கள் தொடர்பு- ரேகா.

மலேசியாவில் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் 35 வயது நிரம்பிய மனிதர் அறிவு (விஜய் ஆண்டனி), இந்தியாவுக்குத் திரும்பி விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட  நினைக்கிறார். பெரும்பாலான ஆண்களைப் போலவே அறிவும் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார். இளமையாக இருந்தபோது நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும், தீர்க்க வேண்டிய கடன்கள் இருந்ததால் காதலிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்போது, பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைந்த பிறகு, நேரம் கடந்துவிட்டதை அவர் உணர்கிறார். இருப்பினும், அவர் காதலிக்க கூடிய ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில்தான், ஒரு குடும்ப நிகழ்வில், ஒரு நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் லீலாவை (மிருணாளினி ரவி) சந்திக்க நேர்கிறது. கண்டிப்பு நிறைந்த  தந்தை தன்னை திரையுலகில் நுழைய விடமாட்டார் என்பதை அறிந்த லீலா, சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பெற்றோரிடம் பொய் சொல்கிறார். லீலாவின் பெரிய ரகசியம் வீட்டில் தெரியவர, தந்தை அவரது விருப்பத்திற்கு கடுமையாக எதிர்க்கிறார். அதன் விளைவாக குடும்பத்தினர் அழுத்தத்தின் காரணமாக அவளது விருப்பத்திற்கு மாறாக அறிவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அறிவும் லீலாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். தனது ஆசை நிறைவேறாத கோபத்தில் இருக்கும் லீலா, இப்போது தன் கணவனாக இருக்கும் அறிவு மீது தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அவள் தன் நோக்கங்களை தெளிவாக்குகிறாள். இருந்தாலும் தனது மனைவியை முழு மனதுடன் நேசிக்கும் அறிவு  தனது மனைவியை எல்லா வழிகளிலும் கவர்ந்திழுக்க முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

புதிய அவதாரத்தில் பல வகை உணர்ச்சிகள், அடக்கமான மற்றும் அளவிடப்பட்ட விஜய் ஆண்டனி நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

மிருணாளினி ரவி லீலாவாக தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

யோகி பாபு, வி.டி.வி கணேஷ், இளவரசு மற்றும் ஷரா ஆகியோர் திரைக்கதை நகர்வுக்கு உதவுகிறார்கள்.

பரத் தனசேகரின் இசை மற்றும் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவாளர் ஃபாரூக் ஜே பாஷாவின் அற்புதமான காட்சி அமைப்பு படத்துடன் ஒன்ற வைக்கிறது.

விஜய் ஆண்டனியே எடிட்டர் என்பதால் நீண்ட காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.

காதலுக்கு ஏங்கும் நாயகன், கனவைத் துரத்தும் நாயகிக்கான முரணை முன்வைத்து உணர்ச்சிப்பூர்வமான மையத்துடன் கூடிய பொழுதுபோக்கு ரொம்காம்மாக சுவாரஸ்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் முதல் வெற்றியுடன் களமிறங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் ரோமியோ நேர்த்தியான உணர்ச்சிகரமாக காதல் கதை.