ஒரு நொடி சினிமா விமர்சனம் : ஒரு நொடி விறுவிறுப்பான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
405

ஒரு நொடி சினிமா விமர்சனம் : ஒரு நொடி விறுவிறுப்பான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5

தமன் குமார் – பருதி இளமாறன்
வேல. ராமமூர்த்தி – கரிமேடு தியாகு
எம். எஸ். பாஸ்கர் – சேகரன்
ஸ்ரீ ரஞ்சனி – சகுந்தலா
பழ. கருப்பையா – திரு ஞான மூர்த்தி (எம்.எல்.ஏ)
தீபா சங்கர் – பொன்னாத்தா
நிகிதா – பார்வதி
அருண் கார்த்திக் – ஜீவா
விக்னேஷ் ஆதித்யா – விநாயகம்
கஜராஜ் – யோக லிங்கம்
கருப்பு நம்பியார் – மாணிக்கம்

எழுத்து மற்றும் இயக்கம் : பி. மணிவர்மன்
ஒளிப்பதிவு : கே. ஜி. ரத்தீஷ்
படத்தொகுப்பு : எஸ். குரு சூர்யா
இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்
கலை இயக்குனர் : எஸ்.ஜே. ராம்
பாடலாசிரியர்கள் : சிவசங்கர் – ஜெகன் கவிராஜ் – உதயா அன்பழகன்
சண்டை பயிற்சி : மிராக்கள் மைக்கில்
தயாரிப்பு நிறுவனம்: மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்கள்: அழகர்.ஜி மற்றும் கே.ஜி.ரத்தீஷ்.
வழங்குபவர் : ஜி. தனஞ்ஜெயன் (கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்நெர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்)
மக்கள் தொடர்பு: பி.ஸ்ரீவெங்கடேஷ்

மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக திமிர்பிடித்த மற்றும் ஊழல் நிறைந்த எம்.எல்.ஏ திருஞான மூர்த்தியின் (பழ கருப்பையா) பாதுகாப்பின் கீழ் செயல்படும் பிரபல பைனான்சியர் சுறா கரிமேடு தியாகு விடம் (வேல ராமமூர்த்தி) தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் புகைப்படக் கலைஞர் சேகரன் (எம்.எஸ். பாஸ்கர்) குறித்த காலத்திற்குள் பணத்தை தயார் செய்து கரிமேடு தியாகுவிடம் திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போகிறார். இதுதொடர்பாக சேகரன் மனைவி சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி) காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பருத்தி இளமாறன் (தமன் குமார்) விசாரிக்கும் போது, ஆரம்பக்கட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ஒரு குற்ற கும்பல் மற்றும் ஊழல் அரசியல்வாதி நோக்கிச் ஆழமாக ஆராயும் போது, அவர் ஒரு இளம் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கொலையை எதிர்கொள்கிறார். தென்னந்தோப்பில் ஒரு இளம்பெண் பார்வதி (நிகிதா) கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். சிக்கலான இந்த இரண்டு சம்பவங்களிலும் சுற்றியுள்ள மர்மத்தை கண்டறிந்து, இரண்டு வழக்குகளையும் தீர்க்கும் பொறுப்பில் இருக்கும் இளமாறனுக்கு அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. அது என்ன? குற்றங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைக் குற்றவாளிகளை எதிர்கொண்டு அவர் எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தமன் குமார் நேர்மையான புத்திசாலித்தனமான இன்ஸ்பெக்டர் பருத்தியாக , கம்பீரமான உடல் அமைப்பு மூலம் ஈர்க்கக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, போன்ற குணச்சித்திர நடிகர்கள் கதாபாத்திரங்களை சரியாக சித்தரிக்கப்படவில்லை. அவர்கள் நடிப்புத்திறனை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை மாறாக வீண் அடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ரஞ்சினி, தீபா சங்கர், நிகிதா மற்றும் தயாரிப்பாளர் அழகர் உள்ளிட்ட துணை நடிகர்கள் திரைப்படத்தை உயிர்ப்புடன் கொண்டு வர தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கே ஜி ரதீஷின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பாளர் எஸ். குரு சூர்யாவின் எடிட்டிங், சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை ஆகியோரின் பங்களிப்பு நம்பகமான த்ரில்லராக திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.

இரண்டு வெவ்வேறு சம்பவங்களிடையே உள்ள தொடர்பை மையப்படுத்தி ஒரு புலனாய்வு குற்றவியல் திரில்லராக திரைக்கதை அமைத்து காட்சிகளை மிகைப்படுத்தாமல் பார்வையாளர்களை இருக்கையில் அமர வைத்துள்ளார் இயக்குனர் பி மணிவர்மன். திரைக்கதையில் வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா ஆகியோரின் கதாபாத்திரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ஒரு நொடி விறுவிறுப்பான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர்.