வட்டார வழக்கு சினிமா விமர்சனம் : வட்டார வழக்கு கிராமத்து வாழ்வியலை கண் முன் நிறுத்தும் | ரேட்டிங்: 3/5

0
68

வட்டார வழக்கு சினிமா விமர்சனம் : வட்டார வழக்கு கிராமத்து வாழ்வியலை கண் முன் நிறுத்தும் | ரேட்டிங்: 3/5

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் வட்டார வழக்கு.

நடிகர்கள்:
சந்தோஷ் நம்பிராஜன் “செங்கை மாறன்”
ரவீனா ரவி “தொட்டிச்சி”
விஜய் சத்யா “போத்தண்ணன்”
பருத்திவீரன் வெங்கடேஷ் “தேசிங்கு”
“கண்ணு சேர்வை”யாக விஜி
சுப்பிரமணியபுரம் விசித்திரன் “தகரு”
“பூபாண்டி”யாக ஜெட் பிரசன்னா
முருகேசன் “தொட்டால்”
ஈஸ்வரன் “ஏனல்”

தொழில்நுட்ப கலைஞர்கள்:
கண்ணுசாமி ராமச்சந்திரன் (எழுத்தாளர், இயக்குனர்- தயாரிப்பாளர்)
இளையராஜா (இசையமைப்பாளர்)
வெங்கட்ராஜன் (எடிட்டிங்)
டோனி சான் (ஒளிப்பதிவாளர்)
சுரேஷ் மணியன் (ஒளிப்பதிவாளர்)
சுதீஷ் (சண்டை மாஸ்டர்)

மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் 1960-களில் உறவினர்களுக்குள் நடக்கும் பிரச்னை பங்காளி குடும்பத்திற்கு இடையே காலம் காலமாக பகை இருந்து வருகிறது. தலைமுறைகளாக தொடரும் இந்த பங்காளி சண்டை, 1985-ல் செங்கை மாறன் (சந்தோஷ் நம்பிராஜன்) குடும்பத்திற்கும் அவருடைய பங்காளி குடும்பத்திற்கும் இடையே விஸ்வரூபம் எடுத்து உயிர் பலியும் ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் செங்கை மாறன் முக்கிய பங்காளியான போத்தண்ணனை (விஜய் சத்யா) கொலை செய்து விடுகிறார். அத்துடன் போத்தண்ணன் மகனின் கையையும் வெட்டி விடுகிறார். இதனால் ஆத்திரத்தில் இருக்கும் போத்தண்ணன் மனைவி, மகன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பழிக்குப்பழியாக செங்கை மாறனை கொல்ல திட்டமிடுகிறார்கள். இதனிடையே செங்கை மாறன் தொட்டிச்சியை (ரவீனா ரவி) கண்டதும் காதல் மலர்கிறது. இருவரும் காதலித்து வரும் நிலையில் தொட்டிச்சி வேலை பார்த்த இடத்தில் ஏற்படும் ஒரு சம்பவம் அவளை மனவேதனை அடைய செய்கிறது. இந்நிலையில் செங்கை மாறனின் காதலி தொட்டிச்சி காணாமல் போகிறாள். காதலி தொட்டிச்சி என்ன ஆனார்? தொட்டிச்சிக்கு  நடந்த சம்பவம் என்ன? அதேபோல் போத்தண்ணன் குடும்பத்தினர்களின் பழிக்குபழி வாங்க துடிக்கும் திட்டத்திலிருந்து செங்கை மாறன் தப்பித்தாரா? போன்ற கேள்விகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் மீதிக்கதை நகர்கிறது.

சந்தோஷ் நம்பிராஜனுக்கு முதன்மையான வேடம். முரட்டுத்தனமான தன்மையுடைய கதாபாத்திரத்தில் அடிதடி, வெட்டுக்குத்து, ஒரு புருவத்தை உயர்த்தி பங்காளிகளை அச்சுறுத்தியும், மௌன மொழியில் காதலியிடம் பேசும் போதும் நடிப்பில் அசத்தி தன்னை ஒரு திறமையான நடிகர் என வெளிப்படுத்தி இருக்கிறார்.

காதலை கண்களால் பேசி கிராமத்து தேவதையாக வலம் வந்து அசத்தலான நடிப்பு தந்து கதையின் திருப்புமுனையாக அமைந்துள்ளது ரவீனா ரவியின் தொட்டிச்சி கதாபாத்திரம். வட்டாரா வழக்கு படத்தில் அவரது சிறப்பான திரை இருப்பு பேசப்படும்.

போத்தண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சத்யாவின் நடிப்பு திறனும் பாராட்டத்தக்கது.

அதே போல் பருத்திவீரன் வெங்கடேஷ் (தேசிங்குவாக), விஜி (கண்ணு சேர்வையாக), சுப்பிரமணியபுரம் விசித்திரன் (தகருவாக), ஜெட் பிரசன்னா (பூபாண்டியாக), முருகேசன் (தொட்டாலாக), ஈஸ்வரன் (ஏனலாக) உட்பட அனைத்து துணைப் பாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே மாறி எதார்த்தமான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

கிராமத்தில் நடக்கும் எதார்த்த வாழ்வியலோடு நம்மை அழைத்து செல்கிறது ஒளிப்பதிவாளர்கள் டோனி ஷான், சுரேஷ் மணியன் இருவரின் ஒளிப்பதிவு.

வெங்கட்ராஜன் எடிட்டிங் மற்றும் சுதீஷ் சண்டை காட்சிகள் கதைக்கு வலு சேர்த்துள்ளது.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பங்களிப்புடன் இசையமைப்பாளர் இளையராஜா இணைந்ததால் படம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

பங்காளிகளுக்குள் நடக்கும் பிரச்சனையை திறம்பட தனித்துவமான முறையில் சொல்லப்பட்ட கதைக்களத்தில் காதல், நட்பு, பழிக்குப் பழி என பங்காளிகளுக்கு இடையே இருக்கும் வெறித்தனமான உணர்வுகளை வர்த்தக ரீதியாக மசாலாக்களை கலக்காமல் யதார்த்தமாக திரைக்கதை அமைத்து திறம்பட தனித்துவமான முறையில் சொல்லப்பட்ட கதைக்களத்தில் நம்மை அழைத்து சென்றுள்ளார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். சமீப காலமாக தமிழ் சினிமாவில் இளைஞர்கள் சீர்அழிந்து போகும் வகையில் காதல் அமைந்து இருப்பார்கள் இன்றைய தலைமுறை இயக்குனர்கள். ஆனால் வட்டார வழக்கு ஒரு விதி விளக்கு. இன்றைய தலைமுறையினர்களுக்கு ஒரு நெத்தியடியாக இருந்தது படத்தில் இடம்பெறும் ரொமான்டிக் டிராக்.

மொத்தத்தில் மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் வட்டார வழக்கு கிராமத்து வாழ்வியலை கண் முன் நிறுத்தும்.