நந்திவர்மன் சினிமா விமர்சனம் :  நந்திவர்மன் உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
140

நந்திவர்மன் சினிமா விமர்சனம் : நந்திவர்மன் உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்
| ரேட்டிங்: 3/5

ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் படம் நந்திவர்மன்.
நடிகர்கள்
சுரேஷ் ரவி – குரு வர்மன்
ஆஷா வெங்கடேஷ் – இலக்கியா
போஸ் வெங்கட் – போஸ் வெங்கடாசலம்
நிழல்கள் ரவி – சக்கரவர்த்தி
கஜராஜ் – தர்மராஜ்
மீசை ராஜேந்திரன் – பழனிவேல் ராயன்
ஆடுகளம் முருகதாஸ் – ஜேசிபி மணி
அம்பானி சங்கர் – கால்சட்டை
கோதண்டம் – கோதண்டம்
ஜே.எஸ்.கே.கோபி – எஸ்.வி.பசுபதி
தொழில்நுட்ப வல்லுநர்கள்:
தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்: ஏகே பிலிம் பேக்டரி
தயாரிப்பாளர்: அருண்குமார் தனசேகரன்
இயக்குனர்: ஜி.வி. பெருமாள் வரதன்
எடிட்டர்: சான் லோகேஷ்
இசை: ஜெரார்ட் பெலிக்ஸ்
ஒளிப்பதிவு: சேயோன் முத்து
ஸ்டண்ட்: சுதேஷ்
கலை இயக்குனர்: முனிகிருஷ்ணன்
பாடலாசிரியர்கள்: மதன் கார்க்கி, கு.கார்த்திக்
ஆடை வடிவமைப்பாளர்: சிவகார்த்திக்
ஒப்பனை: ரகுராமன்
நடனம்: ஸ்ரீகிரிஷ்
கணினி வரைகலை: Hocus Pocus, EL visual effects & BusyBees Animation studios
DI: பீஷ்மா ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை: ஹரி பிரசாத் எம்.ஏ
வடிவமைப்புகள்: நரி கண்
ஸ்டில்ஸ்: ராஜேந்திரன்
பிஆர்ஓ: சுரேஷ் சுகு, தர்மதுரை, சதீஷ் (AIM)
தயாரிப்பு மேலாளர்: ரமேஷ் மற்றும் ஹரி வெங்கட்
நிர்வாக தயாரிப்பாளர் : ஆர்.பாலகுமார்
பல்லவ வம்சத்தை பற்றி இரண்டு நிமிட 2டி அனிமேஷன் காட்சியுடன் படம் தொடங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவப் பேரரசர் நந்திவர்மன் கோரா மற்றும் அவரது கூட்டாளிகள் அனுமந்தீஸ்வரர் கோயிலில் இருந்து புதையல் கொள்ளையடிப்பதை தடுக்க முயன்றபோது கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊர் பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் மேற்படி கோவிலை அகழ்வாராய்ச்சி செய்வதற்காக சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு குழுவினர் போஸ் வெங்கட் தலைமையில்  அந்த இடத்திற்கு வருகிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சியால் அனுமந்தபுரம் கிராமத்தில்  பேரழிவு ஏற்படும் என்று கூறி கிராம மக்கள் போஸ் மற்றும் அவரது குழுவினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் போஸ் மற்றும் அவரது குழுவினர் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவர்மனின் பாதுகாப்பில் அகழ்வாராய்ச்சியை தொடங்குகின்றனர். அகழ்வாராய்ச்சி தொடங்கியதும், இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் மற்றும் பல திகிலூட்டும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுகின்றன. அந்த கிராமத்தில் ஒருவர் பின் ஒருவராக அமானுஷ்யமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதே போல தொல்லியல் துறையினர்களிலும் இழப்பு ஏற்படுகிறது. இந்த மர்மத்திற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன அனுமந்தீஸ்வரர் கோவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரு வர்மனாக நடித்திருக்கும் நாயகன் சுரேஷ் ரவி, அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். அதே நேரத்தில் சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். இந்த கதைகளத்திற்கு காதல் காட்சிகள் அவசியம் தேவை தானா என்ற கேள்வி எழுகிறது.
போஸ் வெங்கடாசலமாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் தன் அனுபவ நடிப்பால் கவனம் பெறுகிறார்.
மற்றும் நாயகி இலக்கியாவாக ஆஷா வெங்கடேஷ், வில்லன் சக்கரவர்த்தியாக நிழல்கள் ரவி, ஊர்தலைவர் தர்மராஜாகவும் மற்றும் ஒரு வில்லனாகவம் கஜராஜ், உயர் போலீஸ் அதிகாரி பழனிவேல் ராயனாக மீசை ராஜேந்தர், ஜேசிபி மணியாக ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோரின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு கச்சிதமாக அமைந்துள்ளது. அதே போல அவர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
எடிட்டர் சான் லோகேஷ் இறுதி காட்சியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.
ஜெரார்ட் பெலிக்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும், ஓளிப்பதிவாளர் சேயோன் முத்து மற்றும் கலை இயக்குனர் முனிகிருஷ்ணன், அவர்கள் பங்களிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
நந்திவர்மனின் சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்போடு, பரபரப்பு நிறைந்த திருப்பங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பெருமாள் வரதன்.
மொத்தத்தில் ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் நந்திவர்மன் உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்.