நாயாடி சினிமா விமர்சனம் : நாயாடி பார்வையாளர்களை கவரவில்லை | ரேட்டிங்: 1.5/5

0
319

நாயாடி சினிமா விமர்சனம் : நாயாடி பார்வையாளர்களை கவரவில்லை | ரேட்டிங்: 1.5/5

அத்விக் விஷுவல் மீடியா, வாரியர் ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா, ஃபுடர்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் ஆதார் மதிகாந்தம் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் நாயாடி.
இப்படத்தில் காதம்பரி, ஆதர்ஷ் மதிகாந்தம், ஃபேபி, அரிவிட் சுவாமி, ஷிபு சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கி இருக்கிறார். பிரபல யூடியூபர் ஃபேபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருண் இசையமைக்க, மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பு செய்துள்ளார். மோகன்தாஸ் புல்லாணிகாட்டில், மணி சுரேஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் ஆகியோர் தயாரித்துள்ளனர். பிஆர்ஓ: நிகில் முருகன்.
நாயாடி கதை பண்டைய இந்தியா 1000 ஆண்டுகளுக்கு முன்பு மர்மம் நிறைந்தது மற்றும் மாந்திரீகம் பில்லி சூனியம் மற்றும் சூனியம் பண்டைய இந்தியாவில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. பல வருடங்களாக துன்பப்பட்டு வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்து விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள மாந்திரீகம் மற்றும் சூனியம் ஆகியவற்றை கற்று, அதை இருண்ட கடவுள்களை வழிபடுவது, மனித பலிகளைச் செய்வதிலும் பயன்படுத்தினர்.
தற்போது ஒரு தம்பதியினர் காட்டுப் பகுதியில் 200 வருடங்கள் பழமையான ஒரு பங்களாவை வாங்கி ரிசார்ட்டாக மாற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் திகிலூட்டும் வகையில் அந்த எஸ்டேட்டில் இயற்கைக்கு அப்பாற்பட்ட பொருள் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். அமானுஷ்ய இருப்பைப் பற்றி மேலும் அறிய இளம் யூடியூபர்கள் ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி ஆகியோரின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். அவர்களிடம் தாங்கள் வாங்கியுள்ள பழமையான அந்த பங்களாவில் பேய் இருப்பதாக அனைவரும் கூறுவதால், அது உண்மையா என்று தெரிய அவர்கள் வீடியோ எடுத்து பதிவிட வேண்டும் என்று கூறி பணம் கொடுத்து அழைத்து செல்கிறார். இந்த ஐந்து பேரும் அந்த காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு, ஏதோ ஒரு தீய சக்தி தங்களை பின் தொடர்வது போன்று அவர்கள் உணர்கிறார்கள். இருப்பினும் அவர்கள் அந்த பழமையான அந்த பங்களாவுக்குள் நுழைந்ததும் அவர்கள் அங்கு ஏதோ அமானுஷ்ய உருவம் இருப்பதை காண்கிறார்கள். விசித்திரமான மற்றும் திகிலூட்டும் விஷயங்களை அனுபவிக்கிறார்கள். அந்த அமானுஷ்ய உருவத்தின் பின்னணி என்ன? காட்டுக்குள்  அவர்கள் சந்தித்த ஆபத்து என்ன? இறுதியில் அந்த அமானுஷ்யத்திடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன் என படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள். என்றாலும் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை உணர்ந்து உறுதியான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இது போன்ற திகில் கதையை பார்வையாளர்களிடம் அழுத்தமாக கொண்டு செல்வது ஒளிப்பதிவும், இசையும், எடிட்டிங் தான். அதை இந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சரியாக செய்ய தவறிவிட்டார்கள். படத்தில் மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவு மட்டும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் அருண் ஒரே இரைச்சலான பின்னணி இசையை அமைத்து நம் காதை செவிடாக்கி ஒட்டு மொத்த படத்தையும் சொதப்பிவிட்டார். அதே போல சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பு படத்திற்கு பெரிதாக உதவ வில்லை.
நாயாடிகள் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்படும்) அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பின்தங்கிய மலைவாழ் பழங்குடியினர். நாயாடிகள் மற்றும் அவர்களின் வரலாறு பற்றிய கதையை ஒரு ஹாரர், திரில்லர், சஸ்பென்ஸ், பேண்டஸி படமாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம். கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத திருப்பம் ஒன்றை அமைத்த இயக்குனர் ஆதர்ஷ் திரைக்கதையிலும், பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் அத்விக்  விஷுவல் மீடியா, வாரியர் ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா, ஃபுடர்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் ஆதார் மதிகாந்தம் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நாயாடி பார்வையாளர்களை கவரவில்லை.