சில நொடிகளில் விமர்சனம் : சில நொடிகளில் சஸ்பென்ஸ் நிறைந்த மிஸ்ட்ரி த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
255

சில நொடிகளில் விமர்சனம் : சில நொடிகளில் சஸ்பென்ஸ் நிறைந்த மிஸ்ட்ரி த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கொயர் புரொடக்ஷன்ஸ் சார்பில் புன்னகை பூ கீதா தயாரித்திருக்கும் சில நொடிகளில் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினய் பரத்வாஜ்.
இதில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை- மசாலா காஃபி, பிஜோன் சுராரோ, தர்ஷன்கே.டி, ஸ்டக்காடோ மற்றும் ரோஹித் மாட், ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், பின்னணி இசை – ரோஹித் குல்கர்னி, எடிட்டிங் – ஷைஜல் பிவி, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா டிஒன்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ராஜ் வரதன் (ரிச்சர்ட்) மாடல் அழகியான மாயா பிள்ளை (யாஷிகா) கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. இருவரும் பாரில் போதைப்பொருள் உட்கொண்டு நடனமாடி மகிழ்கிறார்கள். தன் மனைவி மேதா  (புன்னகை பூ கீதா) வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி ராஜ் வரதன் மாயா பிள்ளையுடன் வீட்டுக்கு வந்து, மாயா பிள்ளையின் வற்புறுத்தலின் பேரில் இருவரும் மீண்டும் போதைப்பொருள் உட்கொண்டு உல்லாசமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் மனைவி மேதா தன் தோழிகளுடன் வீட்டுக்கு வருவதாக ரிச்சர்ட்டுக்கு தொலை பேசியில் தகவல் தெரிவித்ததும்,  என்ன செய்வது என்று தெரியாமல் மாயா பிள்ளையை உடனே பின் வாசல் வழியாக கிளம்பும்படி சொல்கிறார் ராஜ் வரதன். வீட்டை சுத்தம் செய்து விட்டு சமையல் அறை வந்த போது அங்கு, எதிர்பாராத விதமாக மாயா பிள்ளை இறந்து கிடக்கிறாள்;. பயந்து போன ராஜ் வரதன் தன் மனைவி மேதாவுக்கு தெரியாமல் மாயா பிள்ளை சடலத்தை விட்டில் உள்ள ஒரு பெட்டிக்குள் மறைத்து வைத்து விடுகிறார். மனைவியின் தோழிகள் வந்து சென்ற பின், தன் மனைவிக்கு தெரியாமல் அந்த பெட்டியை கொண்டு போய் புதைத்து விடுகிறார். மாடல் அழகி மாயா பிள்ளையுடனான அவரது தீவிரமான உறவு அவரது அகால மரணத்தால் திடீரென உடைந்து போகிறார் ராஜ் வரதன். துக்கத்தாலும் குற்ற உணர்ச்சியாலும், தன் மனைவியிடமிருந்து தனது கடந்த காலத்தை மறைத்து, சரியாக பேசாமல் தொழிலிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் ராஜ் வரதன். இந்நிலையில் மாயா பிள்ளையின் உறவுக்கார பெண் ரிப்போர்ட்டர் ஒருவர், ராஜ் வரதனை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார். அதன் பின் நடக்கும் சஸ்பென்ஸ் கலந்த சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், ஸ்டைலிஷ் லுக்குடன்; ரொமான்ஸ், பயம், பதற்றம், கவலை என ஒரு நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
புன்னகை பூ கீதா மேதா வரதனாக உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வழங்கியதுடன் நடனத்தில் அசத்தியுள்ளார்.
கவர்ச்சி நாயகி யாஷிகா வழக்கம்போல் கவர்ச்சியில் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.
இசை- மசாலா காஃபி, பிஜோன் சுராரோ, தர்ஷன்கே.டி, ஸ்டக்காடோ மற்றும் ரோஹித் மாட், ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், பின்னணி இசை – ரோஹித் குல்கர்னி, எடிட்டிங் – ஷைஜல் பிவி, ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட சில நொடிகளில் படத்தின் வேகத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
கள்ளக்காதல், கொலைகள், அதை சுற்றி நடக்கும் மர்மம் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் என மூன்று பேரை சுற்றி சூழலும் கதை களத்தில் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ்.
மொத்தத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கொயர் புரொடக்ஷன்ஸ் சார்பில் புன்னகை பூ கீதா தயாரித்திருக்கும் சில நொடிகளில் சஸ்பென்ஸ் நிறைந்த மிஸ்ட்ரி த்ரில்லர்.