80’s Buildup சினிமா விமர்சனம் : 80களின் பில்டப் அய்யோ பாவம் ரசிகர்கள்…! | ரேட்டிங்: 2/5

0
377

80’s Buildup சினிமா விமர்சனம் : 80களின் பில்டப் தொடக்கக் காட்சி முதல் இறுதி காட்சி வரை, வெறும் பில்டப் மட்டும் தான்..! அய்யோ பாவம் ரசிகர்கள்…!! | ரேட்டிங்: 2/5

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து கல்யாண் இயக்கத்தில், ’80களின் பில்டப்’ படத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மயில்சாமி, முனிஷ்காந்த், சுந்தர்ராஜன், தங்கதுரை, ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சுவாமிநாதன், தங்கதுரை, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எஸ்.கல்யாண் – எழுத்தாளர்
செல்வி. ஆனந்த் – தயாரிப்பாளர்
நேஹா ஞானவேல்ராஜா – இணை தயாரிப்பாளர்
ஜிப்ரான் – இசையமைப்பாளர்
ஜேக்கப் ரத்தினராஜ் – டிஓபி
செல்வி. பாரதி – திரைப்படத் தொகுப்பாளர்
ஏ.ஆர். மோகன் – கலை இயக்குனர்
தினேஷ் மாஸ்டர் – நடன இயக்குனர்
ராக் ஷங்கர் – நடன இயக்குனர்
எம்.எஸ் பாரதி – எடிட்டிங்
மக்கள் தொடர்பு – சதீஷ்
80களின் பில்டப் கதை கதிர் சுற்றி வருகிறது. கதிர் (சந்தானம்) மற்றும் அவரது சகோதரி மஞ்ச கிளி (சங்கீதா) எலியும் புனையும் போல எப்போதும் மோதிக்கொண்டு சவால் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜமீன்தார்களின் பரம்பரையில் இருந்து வரும் ரஜினி ரசிகரான அவர்களின் தாத்தா (ஆர் சுந்தரராஜன்) இறக்கும் போது பில்டப் ஆரம்பம் ஆகிறது. சாவு வீட்டுக்கு வரும் உறவினர் பெண்ணான தேவியை (ராதிகா ப்ரீத்தி) பார்த்ததும் காதல் கொள்கிறார் கதிர். இறுதிச் சடங்கிற்கு வந்திருக்கும் தேவியை காரியங்கள் முடிப்பதற்குள் ராதிகாவே  தன்னிடம் வந்து ப்ரொபோஸ் செய்வார் என்று தன் தங்கையிடம் சவால் விடுகிறார் கதிர். இப்போது, கதிரின் ஒரே நோக்கம் தேவியின் மனதை கவர்வது. அதை தொடர்ந்து என்ட்ரி ஆக பல கதாபாத்திரங்கள் காமெடி என்கிற நமக்கு இம்சை தரும் சம்பவங்கள் 80களின் பில்டப் மீதிக்கதை.
கதிர் கதாபாத்திரத்தில் சந்தானம் படத்தில் தான் இருப்பது போல பில்டப் மட்டுமே தந்துள்ளார் தவிர படத்துக்கு எந்த விதத்திலும் உதவ வில்லை.
தேவியாக ராதிகா ப்ரீத்தி அழகாகவும் இருப்பதுடன் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்.
சகோதரி மஞ்ச கிளியாக சங்கீதா கலகலப்பான நடிப்பு வழங்கியுள்ளார்.
ஒரு மருத்துவமனை சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர் மாறு வேடத்தில் இறந்தவரின் முன்னாள் காதலி சுடர் மஞ்ச கிளியின் சாயலில் ஆனந்தராஜ் வந்து ஓர் அளவுக்கு கலகலப்பாக வைக்கிறார். அவர் வரும் அந்த ஒரு சில காட்சிகள் மட்டும் நம்மை ரிலாக்சாக வைக்கிறார்.
குடிகாரன் தந்தையாக ஆடுகளம் நரேன் தன் தந்தையின் சடலம் அருகில் அமர்ந்து அப்பாவின் எக்ஸ் லவ்வர் சுடர் மஞ்ச கிளியிடம் சில்மிஷம் செய்து கீழ்தரமாக நடிக்கும் காட்சிகள் அறுவறுக்கத்தக்கது.  அந்த காட்சி அமைப்புகள் இந்து கலாச்சாரத்தை முற்றிலும் இழிவு படுத்தப்பட்டுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சுவாமிநாதன், தங்கதுரை, மயில்சாமி, சேஷு, ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் இருக்கிறார்கள் என்கிற ‘பில்டப்’ மட்டுமே தவிர அவர்களால் தரம் அற்ற காமெடியால் உருவாக்கப்பட்ட திரைக்கதைக்கு எந்த வகையிலும் பலம் சேர்க்க முடியவில்லை.
80-ல் உள்ள காலகட்டங்களை கண்முன் நிறுத்திய கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகன் உழைப்பை பாராட்டலாம்.
ஜிப்ரான் இசையும், ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.
எடிட்டர் எம்.எஸ் பாரதி முடிந்த அளவுக்கு கதையை நகர்த்த கத்தியை கையாண்டுள்ளார்.
நடிகர் சந்தானத்தை வைத்து விலா எலும்பு நொறுங்கும் வகையில் சிரிப்பினைக் கொண்ட ரோலர் கோஸ்டர் சவாரியாக படைக்கலாம் என்று எண்ணிய இயக்குனர் கல்யாண் முற்றிலும் ஏமாற்றி விட்டார். இறுதிச் சடங்கின் பின்னணியில் உள்ள கதை களத்தில் முகம் சுளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்து 128 நிமிடங்கள் பார்வையாளர்களின் நேரத்தை வீணடித்து விட்டார்.
மொத்தத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள 80களின் பில்டப் தொடக்கக் காட்சி முதல் இறுதி காட்சி வரை, வெறும் பில்டப் மட்டும் தான்..! அய்யோ பாவம் ரசிகர்கள்…!!