அவள் பெயர் ரஜ்னி சினிமா விமர்சனம் : அவள் பெயர் ரஜ்னி சஸ்பென்ஸ் நிறைந்த பரபரப்பான இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
472

அவள் பெயர் ரஜ்னி சினிமா விமர்சனம் : அவள் பெயர் ரஜ்னி சஸ்பென்ஸ் நிறைந்த பரபரப்பான இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி.
நடிகர்கள்:
நவீனாக காளிதாஸ் ஜெயராம்
கௌரியாக நமீதா பிரமோத்
ஷில்பாவாக ரெபா மோனிகா ஜான்
திருநங்கையாக பிரியங்கா சாய்
பால் செல்வராஜ் வேடத்தில் அஸ்வின் குமார்
அபிஜித் வேடத்தில் சைஜு குருப்
செல்வமாக கருணாகரன்
ரமேஷ் கண்ணா
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: வினில் ஸ்கரியா வர்கீஸ்
தயாரிப்பாளர்கள்: ஸ்ரீஜித் கே.எஸ், பிளெஸ்ஸி ஸ்ரீஜித் (நவரச பிலிம்ஸ்)
ஒளிப்பதிவு: சுசு விஷ்ணு
இசை: 4 மியூசிக்
எடிட்டர்: தீபு ஜோசப்
வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் கே ராஜன்
கலை இயக்குனர்: ஆஷிக் எஸ்
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன்
ஸ்டண்ட் நடன இயக்குனர்: ஆக்ஷன் நூர், கே கணேஷ் குமார், அஷ்ரஃப் குருக்கள்
இணை தயாரிப்பாளர்: அபிஜித் எஸ் நாயர்
தயாரிப்பு நிர்வாகி: ஷமீஜ் கொயிலாண்டி ஃ சக்திவேல்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
அபிஜித் (சைஜு குருப்) அவரது மனைவி கௌரி (நமீதா பிரமோத்) நண்பரின் வீட்டிற்கு சென்று இரவு திரும்பிக் கொண்டிருந்த போது கௌரியின் சகோதரர் நவீன் (காளிதாஸ் ஜெயராம்) உடன் மொபைலில் பேசிக் கொண்டு இருக்க இருட்டில் கார் ஹைவேஸ் பகுதியில் பெட்ரோல் இல்லாமல் நின்று போகிறது. தன் மனைவி கௌரியை காரில் விட்டுவிட்டு அபிஜித் பெட்ரோல் வாங்கச் செல்கிறார். அப்பொழுது காரின் மேற்பகுதியில் என்ன நடக்கிறது என்று கௌரி புரியாமல் அதிர்ச்சியில் இருக்கும் போது அபிஜித் கொல்லப்படுகிறார். இந்த சம்பவத்தை அவரின் மனைவி கௌரி மற்றும் சிலர் பார்க்கிறார்கள். ஒரு சிலர் கொலையை செய்தது ஒரு பெண் என்றும், சிலர் பேய் என்று கூறுகிறார்கள். தன்னுடைய மாமா மர்மமான முறையில் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் நவீன். நவீன் (காளிதாஸ் ஜெயராம்) மற்றும் இன்ஸ்பெக்டர் பால் (அஷ்வின் குமார்) இருவரும் இணைந்து கொலையாளியை தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். அந்த தேடுதல் வேட்டையின் போது அவருக்கு பல விஷயங்கள் தெரிய வருகின்றன. தேடுதல் வேட்டையின் போது கொலைக்கான காரணத்தையும், கொலையாளி யார் என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதை விவரிக்கிறது.
காளிதாஸ் ஜெயராம் நவீன் கதாபாத்திரத்தில் மாமா அபிஜித்தின் கொலைக்கான தேடுதல் வேட்டையுடன் தன் சகோதரி கௌரியை கொலையாளியிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இன்ஸ்பெக்டர் பால் கதாபாத்திரத்தில் அஷ்வின் குமார் கச்சிதமாக பொருந்தி மிடுக்காக வலம் வந்து காளிதாஸ் ஜெயராம் உடன் சேர்ந்து கொலையாளியை வேட்டையாடி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
நமிதா பிரமோத், ரெபா மோனிகா, சைஜு குருப், கருணாகரன், ரமேஷ் கண்ணா, மறைந்த ‘பூ’ ராமு உட்பட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு அளவான நடிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த திரைக்கதைக்கு பலம் சேர்த்து மிரட்டலான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் திருநங்கையாக நடித்த பிரியங்கா சாய். அப்பாவி, கோபம், ஆக்ரோஷம், கம்பீரம் என அனைத்தையும் உடல் மொழியில் வெளிப்படுத்தி அனைவரின் மனதில் நிற்கிறார்.
கதைக்களம் இரவில் நடப்பதால் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.விஷ்ணு திறம்பட பட கையாண்டு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
படத்தொகுப்பாளர் தீபு ஜோசப்பின் த்ரில்லிங்கான எடிட்டிங் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.
‘4 மியூசிக்’ இசை மற்றும் பின்னணி இசையில் மிரட்டி கூடுல் பலம் சேர்த்துள்ளது.
தற்காலத்தில் பெரும்பாலும் விவாதிக்கப்படும் தங்கள் சொந்த விருப்பங்கள் மூலம் வாழ்வதற்கான உரிமைகள் கொண்ட ஒரு சமூகத்தின் போராட்டங்கள் மற்றும் அவர்கள் சமூகம் மரியாதையாக நடத்த வேண்டியதை இந்த படத்தில், அதை திறமையாக கையாண்டு பரபரப்பான திரைக்கதை அமைத்து நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை த்ரில்லராக படைத்துள்ளார் இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ்.
மொத்தத்தில் நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் அவள் பெயர் ரஜ்னி சஸ்பென்ஸ் நிறைந்த பரபரப்பான இன்வெஸ்டிகேசன் த்ரில்லர்.