ஃபைட் கிளப் விமர்சனம் : ஃபைட் கிளப் விறுவிறுப்பான ஆக்சன் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3.5/5

0
446

ஃபைட் கிளப் விமர்சனம் : ஃபைட் கிளப் விறுவிறுப்பான ஆக்சன் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3.5/5

ரீல் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்க, முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கும் “ஃபைட் கிளப்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபாஸ் அ.ரஹ்மத்.

உறியடி விஜய்குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர்தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-கோவிந்த வசந்தா, எழுத்தாளர்-சசி, ஒளிப்பதிவு-லியோன் பிரிட்டோ, படத்தொகுப்பாளர் கிருபாகரன், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

ஃபைட் கிளப் ஒரு சில மாணவர்களைத் தாக்கும் நோக்கத்துடன், விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய மற்றும் முகமூடி அணிந்த ஒரு கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களை தாக்கும் காட்சியுடன் தொடங்குகிறது.
வட சென்னையில் ஒரு பகுதியில் சிறந்த குத்துச்சண்டை  பயிற்சியாளராக வலம் வரும் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் நல்ல மரியாதை பெற்றவர்.தனது ஏரியாவில் உள்ள சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்படும் அவருக்கு ஒரு நேர்மாறான எண்ணம் படைத்த தம்பி ஜோசப் (அவினாஷ்). தம்பி ஜோசப் போதைப்பொருள் வியாபாரி கிருபாவுடன் (ஷங்கர் தாஸ்) சேர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்கும் வியாபாரியாக மாற விரும்புகிறார். ஒரு கால்பந்து வீரராக வேண்டும் என்று கனவுகள் கொண்ட ஒரு இளைஞன் செல்வாவை (விஜய்குமார்) போல உள்ள இளையவர்களை நிலையை உயர்த்த முயற்சி செய்கிறார். பெஞ்சமினின் உதவியுடன் செல்வாவின் கனவு நிறைவேறும் நேரத்தில், ஜோசப்பும் கிருபாவும் சேர்ந்து தங்களுடைய முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் பெஞ்சமின்னை கொன்று விடுகின்றனர். இந்த கொடூர கொலை வடசென்னையில் செல்வா மற்றும் பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. கிருபாவின் சூழ்ச்சியில் சிக்கி ஜோசப் சிறை செல்கிறார். அத்துடன் கிருபா பெரிய அரசியல்வாதியாகிறார். சிறையில் இருந்து வெளிவந்ததும், தன்னை ஏமாற்றிய கிருபாவை பழி வாங்க திட்டம் தீட்டுகிறார். நேரடியாக ஜோசப், களத்தில் இறங்க தைரியம் இல்லாததால் ஃபுட்பால் பிளேயர் ஆக வேண்டும் என கனவோடு சுற்றித் திரியும் செல்வாவையும் அவனது நண்பர்களையும் தூண்டிவிட்டு, தனது பழிவாங்கும் சூட்சமத்தில் இவர்களை பயன்படுத்துகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை ரத்தம் தெரிக்க கதை நகர்கிறது.

ஒரு கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுகளைக் கொண்ட பள்ளி, கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் விஜய்குமார் கச்சிதமாக பெருந்தியுள்ளார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

காதலியாக வரும் மோனிஷா மோகனுக்கு படத்தில் ஸ்கோர் செய்ய பெரிய அளவில் திரையில் இடம் இல்லை.

பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன், அரசியல்வாதி மற்றும் வில்லன் கிருபாவாக வரும் சங்கர் தாஸ், வில்லனாக ஜோசஃப் அவினாஷ் ரகுதேவன், சரவண வேல், சங்கர்தாஸ், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா ஆகியோர் கதாபாத்திரத்துக்கு உணர்ச்சி ரீதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அது போன்ற கதை களத்தில் பல படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ஒரு சில படங்கள் தொழில் நுட்பகலைஞர்களின் சிறப்பான பங்களிப்பு மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் சசியின் கதைக்கும், அபாஸ் அ.ரஹ்மத் இயக்கத்துக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்தொகுப்பு கிருபாகரன் ஆகியோரின் அற்புதமான பங்களிப்பு விறுவிறுப்பை கூட்டி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது. அத்துடன் ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளன.
வெற்றிமாறனின் வட சென்னையை அப்படியே ஃபைட் கிளப் பின்தொடர்கிறது. என்ன வட சென்னையில் கேரம் விளையாட்டை ஊக்குவிக்கிறார். ஃபைட் கிளப்பில் ஒரு கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுகளைக் கொண்ட ஒரு இளைஞன், அவனது வட்டாரத்தில் உள்ள பலம் பொருந்திய நபர்களுக்கு மத்தியில், தலைமுறை தலைமுறையாக சண்டையிடும் இரண்டு கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் வலையில் சிக்கிக் கொள்கிறான். ஃபைட் கிளப் மிகவும் யூகிக்கக்கூடிய கதைக்களத்தில் இரத்தக்களரி வன்முறை ஆக்ஷன் என திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் அபாஸ் அ.ரஹ்மத்.

மொத்தத்தில் ரீல் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ஃபைட் கிளப் விறுவிறுப்பான ஆக்சன் என்டர்டெய்னர்.