இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசிற்கும் 6 மாத சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
194

இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசிற்கும் 6 மாத சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2014-ல் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த எண்ணி 7 நாள் என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.

செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளிவந்த பையா, ஆனந்தம், சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார்.

சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதில் தெலுங்கில் மட்டுமே இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் செக் மோசடி செய்த வழக்கில் லிங்குசாமிக்கும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போசிற்கும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ல் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த எண்ணி 7 நாள் என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. இதற்காக, பிவிபி. கேபிடல்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ. 1.03 கோடிகடன்பெற்ற இயக்குனர் லிங்குசாமி, அதனை காசோலையாக அளித்துள்ளார். கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது.

இதையடுத்து பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் லிங்குசாமிக்கும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசிற்கும் 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம்  பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி  தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.