ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி… அமைச்சர் எ.வ.வேலு

0
57

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி… அமைச்சர் எ.வ.வேலு

நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகள் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அறிமுகப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது அதேபோல் உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு கூட்டணி மற்றும் திமுக கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என்பது தான் ஆசை அரசியல் கட்சி என்றால் ஆசை படவேண்டும் அதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை கற்று தந்த அண்ணா அவர்களின் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அத்தகைய திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்புகள் ஆகிய நாம் திமுக கூட்டணி தர்மத்த்திற்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், நாம் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் கூடுதலாக ஒருமணி நேரம் பணியாற்றி வெற்றியை பெற வேண்டும் சட்டபேரவையிலே கூட்டணியில் இருக்கும் நமது அன்பு சகோதரர்களுடன் நாம் தற்போதும் இணைந்து இருக்கின்றோம்.

ஆனால் இதே அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்துள்ளார்கள் அவர்களின் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணியில் தான் இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய எ.வ.வேலு, அவர்களுடன் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது கூட்டணியில் இல்லை என்றும், அவர்களுடன் கூட்டணியில் இருந்த மற்ற காட்சிகள் எங்கே என்றும் கடைசியாக பாரதிய ஜனதா கட்சி எங்கே இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், கழகத்தினுடைய தலைவர் (மு.க.ஸ்டாலின்) சமூக நல்லிணக்க கூட்டணியை அமைத்து உள்ளார். ஆகவே தான் நாம் எப்போதும் கூட்டணியில் இருக்கிறோம். இந்த கூட்டணி தர்மம் நிலைதிருக்க தேர்தலில் நமது கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் வெற்றி பெற வேண்டும். அதற்காக கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வேலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன் ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் வாணியம்பாடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி நகராட்சி 36 வார்டு மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி 15 வார்டு சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார்.

அதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். அதை கண்டிப்பாக வழங்குவோம். நான் சொல்கிறேன் எழுதி வைத்து கொள்ளுங்கள் அந்த பணத்தை வழங்குவோம், 10ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் வைத்து விட்டு சென்ற கடந்த ஆட்சியை விட, சிறப்பாக தற்போது வழிநடத்தி செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.