பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும்- குஷ்பு

0
61

பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும்- குஷ்பு

சென்னை: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி ஒன்று தடைவிதித்தது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிரான மற்றொரு பிரிவு மாணவ- மாணவிகள் காவித்துண்டு அணிந்து பள்ளிக்கு வந்தனர். இந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தீர்ப்பு வரும்வரை மதம் சார்ந்த உடைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவரிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில் ‘‘ஹிஜாப் அணிந்து வருவது அவர்களுடைய தனிப்பட்ட தேர்வு. ஆனால் பள்ளிக்கூடத்திற்குள் சீருடையில்தான் வரவேண்டும். பள்ளிக்கூடத்திற்கு வெளியில் வரை ஹிஜாப் அணிந்து வரலாம். பள்ளிக்குள் நுழையும்போது சீருடையில்தான் செல்ல வேண்டும்.

ஹிஜாப் அணிவது தவறு என்றால், காவித்துண்டு அணிவதும் தவறுதான். இந்த விவகாரம் குறித்து அரசியல் செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறது. நாங்களும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என தெரிவிக்கிறோம். தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றியதாக குற்றச்சாட்டுகிறீர்கள். காவிக்கொடி ஏற்றியது எம்.டி. கம்பத்தில்தான். இருந்தாலும் அது தவறுதான். பள்ளிக்கூடத்திற்குள் ஜாதி, மதத்தை கொண்டு செல்லக்கூடாது. சீக்கியர்கள் குறித்து பேசுகிறீர்கள். தற்போதுள்ள விவகாரம் இந்து- முஸ்லிம் இடையிலானது’’ என்றார்.