வித்தைக்காரன் சினிமா விமர்சனம் : வித்தைக்காரன் – ஏமாற்றுக்காரன் | ரேட்டிங்: 2.25/5

0
268

வித்தைக்காரன் சினிமா விமர்சனம் : வித்தைக்காரன் – ஏமாற்றுக்காரன் | ரேட்டிங்: 2.25/5

நடிகர்கள்:
சதீஷ், சிம்ரன் குப்தா  ஆனந்தராஜ், மதுசூதனன், ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பவெல் நவகீதன், மாரிமுத்து, சுப்ரமணியம் சிவா மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
பேனர் : ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்
தயாரிப்பு : கே.விஜய் பாண்டி
எழுதி இயக்கியவர் : வெங்கி
இசை : விபிஆர்
ஒளிப்பதிவு : யுவ கார்த்திக்
எடிட்டர் : அருள் இளங்கோ சித்தார்த்
கலை : ஜி.துரைராஜ்
சண்டைக்காட்சிகள் : ஸ்டன்னர் சாம்
ஆடை வடிவமைப்பாளர் : கிருத்திகா சேகர்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எஸ்.என்.அஸ்ரப்
தயாரிப்பு நிர்வாகி : ஹக்கீம் சுலைமான்
ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுரேஷ்
இணை தயாரிப்பாளர் : சு. முரளி கிருஷ்ணன்
இணை இயக்குநர்கள்: ஏ.அபிலாஷ், அனீஷ் ரத்தினம், மாரிஸ்
உதவி இயக்குநர்கள்: ஜி.ஹரிஹரன், ராஜேஷ்வரன்.ஜே, வி.பிரபாகரன், வி.கே.செந்தில் ராஜன், ஸ்ரீராம் ஜி.வி., வசீகரன் தனவேல், சுபேத் சையத்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

மேஜிக் நிபுணரான வெற்றி (சதீஷ்) ஏமாற்றுவது தவறல்ல, ஏமாற்றப்படுவது தான் தவறு என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். அவர் எந்த ஒரு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் சரி, அதை சுலபமாக தனது புத்திசாலித்தனத்தால், வித்தையால் திருடும் திறன் படைத்த வித்தைக்காரன். கடத்தல்காரன் அழகு (ஆனந்தராஜ்) உடன் இணைந்து மற்றும் ஒரு கடத்தல்காரன் மாரி கோல்ட் (சுப்பிரமணிய சிவா) உடைய கடத்தல் தங்கத்தை களவாட முயல்கிறார். அவர்களுக்கு தெரியாமல் சில வேலைகளையும் செய்து தங்கத்தைக் களவாடிய பிறகு அங்கு நடைபெறும் ஒரு சம்பவத்தால், தான் ஆபத்தில் இருப்பதை உணர்கிறான். அப்போது, அவருக்கு தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நாயகி சிம்ரன் குப்தா வெற்றி கொள்ளை அடிக்க தன்னை தவறாக பயன் படுத்தியதாக கோபப்படும் போது, தான் கொள்ளை அடிப்பதற்கு காரணம் அவரிடம் கூறுகிறார். கடத்தல்காரன் அழகு (ஆனந்தராஜ்) வெற்றியை மிரட்டி தங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் போது எனக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை என்று கூறுகிறான். அழகு என்னிடம் விமான நிலையத்தில் கடத்தல்காரன்  கல்கண்டு ரவி (மதுசூதனன் ராவ்) இடம் இருந்து வைரம் தான் கொள்ளை அடிக்கப் போகிறோம் என்று தன்னிடம் பேசியதாக கூறுகிறான். அழகு உடனே நாம் கல்கண்டு ரவி கைக்கு வைரம் கிடைக்காமல் கூட்டாக திருடலாம் என்று கூறி செயலில் ஈடுபடுகிறார். அதன் பிறகு மாஃபியா தலைவர்களான கல்கண்டு ரவி, மாரி கோல்ட், அழகு மூவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் வித்தைகள் எப்படி சிக்கலில் சிக்க வைக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து வந்த சதீஷ் நாயகனாக அடுத்த கட்டத்துக்கு போகும் போது ஒரு நாயகனுக்கு உண்டான வழக்கமான ஓப்பனிங் காட்சியில் ஒரு வித பதட்டத்துடன் காணப்படுகிறார். மேலும் படத்தில் மேஜிக் நிபுணராக பார்வையாளர்களுக்கு மேஜிக் வித்தை காட்டாமல் ஏமாற்றி விட்டார் இந்த வித்தைக்காரன். கேஷுவலாக நடிக்க முயலும் போது, உணர்ச்சிகரமான காட்சிகளில் அவருடைய முகத்தில் அதை அவரால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. தன் உடல் மொழியில் கவனம் செலுத்தி இன்னும் கொஞ்சம் உழைப்பைத் தந்து தன்னை மெருகேற்றிக் கொண்டால் நிச்சயம் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி, நாயகனுக்கு உண்டான அங்கீகாரத்தை அவர் தக்க வைக்க முடியும்.

புலனாய்வு பத்திரிகையாளராக தனி மாஸ் என்ட்ரி உடன் நாயகியாக சிம்ரன் குப்தாவின் அறிமுக காட்சியோடு சரி. அதன் பிறகு படத்தில் அவருக்கு பெரிய அளவில் காட்சி அமைப்பு இல்லை.

ஆனந்தராஜ், சாம்ஸ், ஜப்பான் குமார், பவெல் நவகீதன், காம்போ மட்டும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக விமான நிலையத்தில் நடைபெறும் நகைச்சுவை காட்சி ஒன்று தியேட்டரை கலகலப்பாக வைக்கிறது;
மதுசூதனன், ஜான் விஜய், மாரிமுத்து, சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.

அருள் இளங்கோ சித்தார்த்தின் எடிட்டிங் – விறுவிறுப்பு குறைவு.

யுவ கார்த்திக் ஒளிப்பதிவு – உழைப்பு படத்திற்கு பலம்

விபிஆர் இசை மற்றும் பின்னணி இசை – ஓகே ரகம்.

மேஜிக் நிபுணர் சதீஷ், பெரிய மாஃபியா கும்பல், கடத்தல் மற்றும் திருட்டை கதைக்களமாக கொண்டு திரைக்கதையில் கொஞ்சம் காமெடி கலந்து, முற்றிலும் வித்தைகாரனிடம் எந்த மேஜிக் இல்லாத படைப்பாக வழங்கியுள்ளார் இயக்குனர் வெங்கி.

மொத்தத்தில் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள வித்தைக்காரன் – ஏமாற்றுக்காரன்.