சிங்கப்பூர் சலூன் சினிமா விமர்சனம்: சிங்கப்பூர் சலூன், தியேட்டரில் குடும்பத்துடன் சும்மா ஜாலியா டைம் பாஸ் செய்யலாம் ரேட்டிங்: 3.5/5

0
363

சிங்கப்பூர் சலூன் சினிமா விமர்சனம்: சிங்கப்பூர் சலூன், தியேட்டரில் குடும்பத்துடன் சும்மா ஜாலியா டைம் பாஸ் செய்யலாம் ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, ஆன் ஷீடல், சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஒய்.ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், சின்னி ஜெயந்த், ஜான் விஜய்
இயக்குனர்: கோகுல்
தயாரிப்பாளர்: டாக்டர் ஐசரி கே கணேஷ்
ஒளிப்பதிவாளர் : எம்.சுகுமார்
இசை: விவேக்-மெர்வின்
எடிட்டர்: செல்வா ஆர்.கே
பின்னணி இசை : ஜாவேத் ரியாஸ்
கலை இயக்குனர்: ஜெயச்சந்திரன்
நடன இயக்குனர்: பூபதி
ஒலி வடிவமைப்பு : சுரேன்.ஜி – அழகியகூத்தன்
ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா நாகராஜன்
ஸ்டண்ட்: பிரபு
டைரக்ஷன் டீம்: செந்தில் விநாயகர், அமீர் ஜமால் கான், வருண் ராஜேந்திரன், சுரேஷ் குரு, ஸ்டீபன், சதீஷ்
தயாரிப்பு நிர்வாகி: என். விக்கி, மகா காளி சிவா, வி. பாலமுருகன்
பாடல் வரிகள்: உமா தேவி, அறிவு
ஸ்பெஷல் மேக்கப்: ரோஷன்
ஒப்பனை: பிரகாஷ்
ஸ்டில்ஸ்: ராஜ்
பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா
ஹீரோவின் சிறு வயது ஃப்ளாஷ் பேக்குடன்  படம் தொடங்குகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பியாய் பழகும் ஒரு கிராமத்தில் கதிரவன் (ஆர் ஜே பாலாஜி) மற்றும் பஷீர் (கிஷன் தாஸ்) ஆகியோர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். அங்கு ஒரு சிகையலங்கார நிபுணர் சாச்சாவின் (லால்) சிங்கப்பூர் சலூன் சேவையை அருகில் வசிப்பவர்கள் அடிக்கடி நாடுகிறார்கள். முடியை வெட்டுவதில் சாச்சாவின் திறமையால் ஈர்க்கப்பட்ட கதிரவன், தான் வளரும் போது ஒரு நாள் புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்கிறான்.பள்ளி படிப்பை முடித்ததும் அவனது கவனம் சிகையலங்கார நிபுணர் ஆக வேண்டும் என்ற பாதையில் பயணப்பட முயலும் போது அவனது தந்தை அவன் கல்லூரி படிப்பை முடித்த பின் முடிவெடுக்கும் பக்குவம் வரும். அப்போது அவனது கனவின் பாதையில் பயணிக்க சம்மதிக்கிறார். காலப்போக்கில் கதிரவன், பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருந்தும், சொந்தமாக சலூன் அமைக்க வேண்டும் என்ற சிறுவயது கனவை விட மறுப்பது, அவனது தாயாரை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. ஒரு கட்டத்தில், தனக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் சமாதானப்படுத்தி, தனது சிறு வயதில் அடிக்கடி சென்ற சாச்சாவின் கடையின் பெயரை சூட்டி, சிங்கப்பூர் சலூன் என்று அழைக்கப்படும் தனது சொந்த சலூனை அமைக்கும் கனவை தொடர முடிவு செய்கிறான். அவன் தனது கனவை நனவாக்க முயற்சிக்கும் போது அவன் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலை வரை செல்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
புத்திசாலித்தனமான கதைகள் தோந்தெடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தின் மூலம் நடிப்பில் முன்னேறி இருக்கிறார். தனது கனவுகளை அடைய போராடும் ஒரு கதிரவன் கதாபாத்திரத்தை அவர் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழங்கியதுடன் எமோஷனல் காட்சிகளிலும் சிரத்தையுடன் நடித்துள்ளார்.
கதையின் இரண்டாவது நாயகன் சத்யராஜ் தான் என்று அடித்து சொல்லலாம். கஞ்சத்தனம் மிகுந்த மாமனாராக அவரது திரை எண்டரிக்குப் பிறகு தான் தியேட்டரே சிரிப்பலையில் மிதக்கிறது. தன்னுடைய நகைச்சுவை திறனால் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் சத்யராஜ். அவரது காமெடி காட்சிகள் தான், இந்த படத்துக்கு பெரிய பலம். சத்யராஜ், ரோபோ சங்கர் இருவரின் லூட்டி முதல் பாதியை கலகலப்பாக வைத்துள்ளனர்.
சிகையலங்கார நிபுணர் சாச்சா கதாபாத்திரத்திற்கு லால் கச்சிதமாக பெருந்தியுள்ளார். இயல்பான நடிப்பை ஸ்டைலிஷ்சாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகியாக மீனாட்சி சவுத்ரி. நண்பன் பஷீராக கிஷன் தாஸ், சத்யராஜ் மூத்த மாப்பிள்ளையாக ரோபோ ஷங்கர், நாயகன் தந்தையாக தலைவாசல் விஜய், கதிரவனை விலைக்கு வாங்க நினைக்கும் போட்டியாளராக ஜான் விஜய், ஆன் ஷீடல், ஒய்.ஜி மகேந்திரன், சின்னி ஜெயந்த், உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கின்றனர்.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தில் சிறப்பாக உள்ளது.
ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை மற்றும் விவேக் – மெர்வின் இசை கதையோடு பயணித்துள்ளது.
சமீப காலத்தில் தொடர் வெற்றி படங்கள் தந்த எடிட்டர் செல்வகுமார் கத்தரியும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
சிங்கப்பூர் சலூன் கடை செட்டப்பை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் ஜெயச்சந்திரன்.
உலகம் ஒருவரைப் பார்க்கும் விதத்தை ஒரு சிகையலங்கார நிபுணர்  மாற்ற முடியும் என்ற முதல் கருத்தை சிறப்பாக நகைச்சுவையுடன் சொல்ல ஆரம்பித்தது அதில் பயணப்படும்போது இரண்டாம் பாதி சீரியஸ் மூடுக்கு கொண்டு போகும் திரைக்கதை அமைத்து கொஞ்சம் தடுமாற்றத்துடன் செல்வதை, தவிர்த்து இடைவேளைக்கு பிறகு நகைச்சுவையுடன் திரைக்கதையை நகர்த்தி இருக்கலாம் இயக்குனர் கோகுல்.மொத்தத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில்  டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கும் சிங்கப்பூர் சலூன், தியேட்டரில் குடும்பத்துடன் சும்மா ஜாலியா டைம் பாஸ் செய்யலாம்.