ரணம் அறம் தவறேல் விமர்சனம் : ரணம் அறம் தவறேல் சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
176

ரணம் அறம் தவறேல் விமர்சனம் : ரணம் அறம் தவறேல் சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு திரில்லர் | ரேட்டிங்: 3/5

மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்திருக்கும் ரணம் அறம் தவறேல் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ஷெரீஃப்.

இதில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரணிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்ரமணியம், பத்மன், விலங்கு கிச்சா ரவி, தசரதி, தயாளன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை: அரோல் கொரெல்லி, ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா, நிர்வாக தயாரிப்பாளர்: உதயகுமார் பாலாஜி, எடிட்டர்: முனீஸ், கலை இயக்குனர்: மணிமொழியன் ராமதுரை, பாடகர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரேயா கோஷல், மதிச்சியம் பாலா, பிரணிதி, ரகோதம், ஷெரீஃப், பாடல் வரிகள்: விவேக் – ஷெரீஃப் – அரோல் கொரேல்லி, நடனம்: அமீர் ஆட்ஸ், ஸ்டண்ட்: பில்லா ஜெகன் ஓம் பிரகாஷ், ஒலி வடிவமைப்பு: ராண்டி ராஜ்,  மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்

ரணம் அறம் தவறேல் படத்தின் தொடக்கத்தில், அடுத்தடுத்த இடங்களில் எரிக்கப்பட்ட நிலையில் கால், கை, உடம்பு என தனித்தனியாக கண்டு எடுக்கப்படுகின்றன. அந்த குற்றம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீசாருக்கு எந்த துப்பும் இல்லை. ஒரு போலீஸ் அதிகாரி சிவாவை (வைபவ்) அழைக்கிறார். சிவா ஒரு இணை இயக்குனராக இருந்து, அதன்பின் முக புனரமைப்பு கலைஞராக உள்ளார், அவர் சிதைந்த இறந்தவர்களின் முகங்களை புனரமைப்பது மட்டுமல்லாமல், போலீஸ் அதிகாரிகளுக்கு முழுமையற்ற விசாரணைகளை முடிக்கும் குற்றக் கதைகள் எழுதுகிறவர். கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ள முகத்தை ஸ்கெட்ச் செய்து உண்மையான முக அம்சங்களை ஒரு ஓவியமாக காட்சிப்படுத்தி குற்ற வழக்குகளை தீர்க்க உதவுவதற்காக காவல்துறையினரால் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் காணாமல் போகிறார். இதனால் வழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்துஜா (தான்யா ஹோப்) கைக்கு வருகிறது. இவரும் சிவாவும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயலும் போது நகரின் பல்வேறு பகுதிகளில் மனித உடல் உறுப்புகள் அடங்கிய மூன்று அட்டைப் பெட்டிகள் கண்டெடுக்கப்படுகின்றன. நகரின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட கைகள், கால்கள் மற்றும் உடற்பகுதி உண்மையில் மூன்று வெவ்வேறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமானது என்ற திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் மர்ம கொலைகள் செய்தது யார்? எதற்காக செய்தனர்? உண்மையான கொலையாளியை கண்டுபிடித்தார்களா? சிவாவால் எப்படி கரிகட்டையாக உள்ள பாகத்தை வைத்து சரியான முகத்தை ஸ்கெட்ச் செய்கிறார்? சிவாவுக்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு விடையே படத்தின் மீதிக்கதை.

சிவாவாக வைபவ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவான நடிப்பை வழங்கி படம் முழுவதும், வைபவ் தீவிரமான, சால்ட் அண்டு பெப்பர் தோற்றத்துடன், எப்போதும் சிந்தனையில் மூழ்கி முற்றலும் மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்துள்ளார்.

படத்தில் இரண்டாம் பாதியில் மட்டுமே தோன்றும் நந்திதா ஸ்வேதா கதாபாத்திரம் தான் படத்தின் ஒட்டு மொத்த ஹைலைட். கல்கி கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இன்ஸ்பெக்டர் இந்துஜாவாக தன்யா ஹோப் இன்ஸ்பெக்டரின் பாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளார்.
கான்ஸ்டபிளாக நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி வழக்கமான நடிப்பில் இருந்து விலகி, ஈர்க்கக்கூடிய நடிப்பை தந்து தனது பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

சரஸ் மேனன், ப்ரணிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்ரமணியம், பத்மன், விளங்கு கிச்சா ரவி, தசரதி, தயாளன் உட்பட அனைவரும் கதைக்களத்தில் தேவையான பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

அரோல் கொரெல்லி இசை மற்றும் பின்னணி இசை – பலம்.

பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு – காட்சி கோணங்கள்  விறுவிறுப்பை கூட்டுகிறது.

முனீஸ் படத்தொகுப்பு – நேர்த்தியாக எடிட் செய்ய முயற்சித்துள்ளார்.

கலை இயக்குனர்: மணிமொழியன் ராமதுரை உழைப்பு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பழிவாங்கும் க்ரைம் த்ரில்லர் கதையை விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்த இயக்குனர் ஷெரீப், முதல் பாதி போலவே, இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை கொஞ்சம் கூட்டி இருக்கலாம்.

மொத்தத்தில் மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்திருக்கும் ரணம் அறம் தவறேல் சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு திரில்லர்.