நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம் : திகைக்க வைக்கும் 18+ க்கான அடல்ட் காமெடி படம் ரேட்டிங்: 2.5/5

0
255

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம் : திகைக்க வைக்கும் 18+ க்கான அடல்ட் காமெடி படம் ரேட்டிங்: 2.5/5

‘பூர்வா புரொடக்ஷன்ஸ்’ சார்பில், பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், இசையமைத்து பாடல்களை எழுதி தயாரித்திருக்கும் படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதா ராணி, மினு வாலண்டினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம்: பிரசாத் ராமர்
ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்
இசை: பிரதீப் குமார்
படத்தொகுப்பு : ராதாகிருஷ்ணன் தனபால்
தயாரிப்பாளர்: பிரதீப் குமார்
தயாரிப்பு நிறுவனம்: பூர்வா புரொடக்ஷன்ஸ்
மக்கள் தொடர்பு : டிஒன், சுரேஷ் சந்திரா, நாசர்.

மக்கள் கூட்டம் இல்லாத திரையரங்கில் இளம்பெண்ணை ஒருத்தியுடன் லிப்லாக் -க்குடன் சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறார் கதையின் நாயகன் ரவிச்சந்திரன் (செந்தூர் பாண்டியன்). அவருடைய ஒரு சில நண்பர்களும் அவனைப் போலவே உள்ளனர். படித்து முடித்து விட்டு ஊரை சுற்றி கொண்டு தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் பொழுதை போக்கி பேஸ்புக் தளத்தில் இருக்கும் பெண்களுக்கு ஹாய் மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது முழு நேர வேலையாக செய்வது இவனது வழக்கம். அப்படியே அவனுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த அரசி (ப்ரீத்தி கரண்) என்ற இளம்பெண்ணின் நட்பு பேஸ் புக் தளத்தின் மூலம் கிடைக்கிறது.  அன்று இரவு ரவிச்சந்திரன் அரசியிடம் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருக்கும் போது, அரசி அவனிடம் மறுநாள் அவளுக்கு பிறந்த நாள் என்று கூறுகிறாள். ரவிச்சந்திரன் உடனடியாக அவளுக்கு ஒரு பரிசுடன் பிறந்த நாள் அன்று அவள் இடத்திற்கு வருவதாக கூறினான். அரசி வா பார்க்கலாம் என்று கூறுகிறாள். அரசி உடனான நட்பை காம விளையாட்டில் பயன்படுத்த நினைக்கும் ரவிச்சந்திரன், அரசியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் தர தனது நெருங்கிய நண்பன் காந்தியுடன் (சுரேஷ் மதியழகன்) பைக்கில் மதுரையில் இருந்து மயிலாடுதுறை செல்கிறார் ரவிச்சந்திரன். மயிலாடுதுறை வந்தடைந்ததும், அரசியை தொடர்பு கொண்ட போது வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வா என்று அரசி அழைப்பு விடுகிறாள். இன்று நம் எண்ணம் நிறைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் அவளது வீட்டிற்கு செல்கிறான். வீட்டில் அரசி தன்னுடைய பாட்டியுடன் இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைகிறான். அதன் பின் அரசி, தனது தோழிகள் சோபியா பானு (பூர்ணிமா ரவி), சபீனா பானு (தமிழ்செல்வி) ஆகியோருடன் ரவிச்சந்திரன், காந்தி, சேர்ந்து காபி அருந்துகிறார்கள். அங்கிருந்து ரவிச்சந்திரன் தன் நண்பனை கழட்டி விட்டு அரசியும் ரவியும் தனியாகப் பூம்புகார் செல்கிறார்கள். அங்கு ரவிச்சந்திரன் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஆகிய புதுமுகங்கள் திரையில் தாங்கள் சித்தரிக்கும் கதாபாத்திரங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக செந்தூர் பாண்டியன் கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு இன்றைய ஒரு சில இளைஞர்களின் நகலாக திரையில் தனது கதாபாத்திரத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். நிஜ வாழ்க்கையில் செந்தூர் பாண்டியன் இப்படி தான் என்று எண்ணும் அளவிற்கு அவரது உடல் மொழி இருந்தது. அதே போல் சுரேஷ் மதியழகன் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.

உதய் தங்கவேல் ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் குமார் இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

படத்தில் உள்ள நீளமான காட்சிகள் படத்தொகுப்பாளர் ராதாகிருஷ்ணன் தனபால் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

பருவத்தில் ஒரு சில இளைய தலைமுறையினர்க்கு இடையே இன்றைய கால கட்டத்தில் ஏற்படும் நட்பு, காதல், எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அடல்ட் காமெடியாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பிரசாத் ராமர்.

மொத்தத்தில் பூர்வா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திகைக்க வைக்கும் 18+ க்கான அடல்ட் காமெடி படம்.