கார்டியன் சினிமா விமர்சனம் : கார்டியன் – பயமுறுத்தவில்லை | ரேட்டிங்: 2.5/5

0
242

கார்டியன் சினிமா விமர்சனம் : கார்டியன் – பயமுறுத்தவில்லை | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:
ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை ‘ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா (அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – குரு சரவணன் மற்றும் சபரி
கதை, திரைக்கதை, வசனம் – குரு சரவணன்
தயாரிப்பாளர் – விஜய் சந்தர்
தயாரிப்பு நிறுவனம் – ஃபிலிம் ஒர்க்ஸ்
இசை – சாம் சி.எஸ்
படத்தொகுப்பு – எம்.தியாகராஜன்
ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல்
கலை – ‘லால்குடி’ என்.இளையராஜா
சண்டைப் பயிற்சி – ‘டான்’ அசோக்
பாடல்கள் – விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி
மக்கள் தொடர்பு – ரியாஸ்

சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்கிற அவப்பெயருடன் வளரும் இன்டீரியர் டிசைனரான அபர்ணா (ஹன்சிகா மோத்வானி) வேலை தேடி சென்னைக்கு வருகிறார். திறமை இருந்து பல முறை இன்டர்வியூவில் தோல்வியே சந்திக்கிறார். இந்நிலையில் ஒரு இன்டர்வியூவில் சரியாக  பதில் சொல்ல முடியாமல் இருந்ததும் அபர்ணாவுக்கு வேலை கிடைக்கிறது, அடுத்தடுத்து அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடப்பதுடன், அவர் நினைப்பது எல்லாம் நடக்கிறது. கூடவே கெட்டதும் நடைபெற்று பல துரதிஷ்ட சம்பங்களும் நிகழ்கிறது. இது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்து வரும் அபர்ணாவுக்கு ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணின் ஆவிதான் இதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது. மேலும் நல்லது செய்யும் இந்த ஆவியின் உதவி யிலிருந்து விடுபட அவர் முயற்சிக்கும் போது, அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆவியின் கதையை அறிந்து கொண்ட பிறகு அதற்கு அபர்ணா அந்த ஆவிக்கு உதவி செய்ய சம்மதிக்கிறார். அதன் பின் நடப்பது படத்தின் மீதிக்கதை.

அபர்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரொம்ப சுமாரான திரைக்கதைக்கு பலம் சேர்க்க முயற்சி செய்தது சற்று ஆறுதலான விஷயம்.

புதுமுக நடிகை தியா முக்கியமான ஆடிட்டர் கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு தந்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) நிறைவான நடிப்பு தந்துள்ளார்.

சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் வழக்கமான வில்லத்தனத்தை பதிவு செய்துள்ளனர்.

நாயகன் பிரதீப் ராயன் வந்து போகிறார்.

‘மொட்டை’ ராஜேந்திரன், தங்கதுரை இருவரின் காமெடி காட்சிகள் எடுபடவில்லை.

விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு  சாம் சி.எஸ் இசை மற்றும் பின்னணி இசை ஒகே.

எம்.தியாகராஜன் படத்தொகுப்பு, கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு ‘டான்’ அசோக் சண்டைப் பயிற்சி மற்றும் ‘லால்குடி’ என்.இளையராஜா கலை ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு  பலவீனமானதிரைக்கதையை நகர்ந்து செல்ல உதவி உள்ளது.

வழக்கமான பழிவாங்கும் பேய் கதையில், பார்வையாளர்களை பயமுறுத்தாக விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன், படத்தின் முதல் பாதியில் பேய் இருக்கு ஆனால் திரையில் பேயை சரியாக பதிவு செய்ய தவறிவிட்டனர் இயக்குனர்களான சபரி மற்றும் குரு சரவணன். திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ஓர் அளவுக்கு அமானுஷ்யம் பார்வையாளர்களை பயமுறுத்தி இருக்கும்.

மொத்தத்தில் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் விஜய் சந்தர் தயாரித்திருக்கும் கார்டியன் – பயமுறுத்தவில்லை.