பர்த் மார்க் சினிமா விமர்சனம் : பர்த் மார்க் தெளிவற்ற மிஸ்ட்ரி த்ரில்லர்  | ரேட்டிங்: 2.25/5

0
173

பர்த் மார்க் சினிமா விமர்சனம் : பர்த் மார்க் தெளிவற்ற மிஸ்ட்ரி த்ரில்லர்  | ரேட்டிங்: 2.25/5

நடிகர்கள்:
ஷபீர் கல்லரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி

தொழில்நுட்ப குழு:
இயக்குனர்: விக்ரம் ஸ்ரீதரன்
எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் : ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : உதய் தங்கவேல்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்
எடிட்டர் : இனியவன் பாண்டியன்
ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ருதி கண்ணத்
கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் : அனுசுயா வாசுதேவன்
தயாரிப்பு நிர்வாகி : ரவிக்குமார்
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

1999 இல் அமைக்கப்பட்டது, லெப்டினன்ட் டேனியல் (ஷபீர் கல்லரக்கல்) போர் மண்டலத்தில் கடத்தப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்புகிறார். டேனியல் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி ஜெனிபருடன் (மிர்னா) தாவந்திரி இயற்கை பிறப்பு கிராமத்தில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றெடுக்க செல்கிறார்கள். மலைப்பாதையில் அவர்களை ஒரு ஊமைப் பராமரிப்பாளர் மலைக்கு கூட்டி செல்கிறார், அப்போதிலிருந்தே ஊமைப் பராமரிப்பாளருடன் தொடர்ந்து டேனியல் சண்டையிடுகிறார். தம்பதிகள் கிராமத்திற்குள் நுழைந்ததும், கிராமத்தை விட்டு வெளியேறும் மற்றொரு ஜோடி, புதிதாகப் பிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி இருப்பதைக் காண்கிறார்கள். அந்தத் தம்பதியர் தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தாலும், அவர்கள் சோகத்துடன் வெளியேறுவது போல் ஜெனிபர் உணர்கிறார். அந்த கிராமத்தில் ஏதோ தவறு நடப்பதாக ஜெனிபர் சந்தேகம் அடைகிறார். அங்கு பிரசவத்தின் மருத்துவச்சி ஜென்னியை சில பூஜைகளில் கலந்து கொள்ளச் செய்து, கிராமத்தில் தயாரிக்கப்பட்ட உணவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த கிராமத்தில் அலோபதி மருந்துகளுக்கு இடமில்லை, நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லை. ஜெனிபர் உடனடியாக அசௌகரியம் அடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புகிறாள். ஆனால், தன் குழந்தையை அங்கேயே பிரசவிக்க வேண்டும் என்பதில் அவரது கணவர் டேனியல் உறுதியாக இருக்கிறார். எனவே, தயக்கத்துடன் ஜெனிபர் ஒப்புக்கொண்டு தொடர்ந்து அங்கே தங்குகிறார். டேனியலுக்கு இது நம் குழந்தை தானா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருக்கிறது. அதனால் எப்போதும் கோபமும் சந்தேக பார்வையுடன் இருக்கிறார். இந்நிலையில் ஜெனிபர் தனது கணவனை முழுவதும் நம்புகிறார். அதே சமயத்தில் பிரசவ விடுதியில் உதவியாளர்களை சந்தேகிக்கிறார். ஆனால் பிரசவ நாட்கள் நெருங்க, பிரச்சனை அவர்கள் வந்த இடத்தில் அல்ல, கணவர் டேனியல் இடம் தான் உள்ளது என்பதை ஜெனிபர் உணர்கிறாள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

மெதுவாக நகரும் கதைக்களத்தில் ஷபீரும் மிர்னாவும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்ய தங்களால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளனர். குறிப்பாக மிர்னா, ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க நிறைமாத கர்ப்பிணியாக, ஒரு கர்ப்பிணி பெண் நடப்பதற்கும், உட்காருவதற்கும் எவ்வளவு சிரமப்படுகிறாரோ அதே வலியும் கஷ்டத்தையும் தனது உணர்வுபூர்வமான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.

அமுலுவாக தீப்தி, ஆஷாவாக போர் கொடி, ஊமைப் பராமரிப்பாளர் செபஸ்டினாக இந்திரஜித் மற்றும் தாவந்திரி மருத்துவ அம்மாவாக பி.ஆர்.வரலட்சுமி என அனைத்து துணை கதாபாத்திரங்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், வளர்ச்சி அடையாத அவர்களது கதாபாத்திரத்தால் அவர்களது பங்களிப்பு வீணடிக்க பட்டுள்ளது.

கண்களுக்கு விருந்தளிக்கும் உதய் தங்கவேலின் அற்புதமான அழகிய காட்சி கோணங்களும், விஷால் சந்திரசேகரின் ஒலிப்பதிவு மற்றும் இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு படத்திற்கு ப்ளஸ்.

இயற்கையான முறையில் குழந்தை பெற்றெடுக்கும் முக்கியதுவத்தை பற்றி சொல்ல வந்த கருத்தை மேலோட்டமாக சொல்லி பலவீனமான திரைக்கதை அமைத்து ஆவணப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி உள்ளார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.

மொத்தத்தில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணை தயாரிப்பில் பர்த் மார்க் தெளிவற்ற மிஸ்ட்ரி த்ரில்லர்.