வரலாறு முக்கியம் விமர்சனம் : வரலாறு முக்கியம் – பாலியல் நகைச்சுவை | ரேட்டிங்: 2/5

0
409

வரலாறு முக்கியம் விமர்சனம் : வரலாறு முக்கியம் – பாலியல் நகைச்சுவை | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் : ஜீவா, கஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு  : சக்தி சரவணன்
படத்தொகுப்பு  : என்.பி. ஸ்ரீகாந்த்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் : சந்தோஷ் ராஜன்

வரலாறு முக்கியத்தின் ஆரம்பக் காட்சி 2050 இல் நடைபெறுகிறது, கோயமுத்தூரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா (கார்த்திக்) பிரபலமாக வேண்டும் என்றும், அவரது நண்பர் அடைக்கலம் (வி.டி.வி கணேஷ்) அரசியல்வாதி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்பா கே.எஸ்.ரவிக்குமார், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் அதே தெருவிற்கு கேரளாவில் இருந்து வந்த காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் குடியேறுகிறார்கள். புதிதாக வருகை தந்தவுடன், அவர்களது வீட்டின் இளைய மகள் (பிரக்யா நாக்ரா) அந்த தெருவில்  உள்ள அனைத்து வீட்டிற்கும் இனிப்பு வழங்கி அந்த வீட்டில் வாலிப வயதுள்ள ஆண்கள் இருக்கிறார்களா.! இல்லையா..! என்று கண்டறிந்து தன் தந்தையிடம் கூறும் போது ஜீவா விஷயத்தை மறைத்து விடுகிறாள். ஜீவாவை கண்டதும் அவருக்கு காதல் மலர்கிறது. ஜீவாவும் பிரக்யா நாக்ராவை தன் வீட்டில் கண்டவுடன் அவளை காதலிக்க தொடங்கி, அவளுக்காக அவளது வீட்டின் வாசலில் காத்திருக்கும் போது, அவளை விட அழகான அவளது அக்கா காஷ்மீரா பார்த்தவுடன், இவளைத்தான் காதலிக்க வேண்டும் என தீர்மானித்து கஷ்மீராவை சுற்றி வலம் வந்து காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் ஜீவாவுக்கும் காஷ்மீராவுக்கும் காதல் வருகிறது. இந்த விஷயம்  இளைய மகள் (பிரக்யா நாக்ரா) விஷயம் தெரிந்தும் ஜீவா தன்னை தான் காதலிக்க வேண்டும் என்று கூறி அவனையே சுற்றி வருகிறாள். ஆனால் காஷ்மீரா அப்பாவுக்குத் துபாய் மாப்பிள்ளை ஒருவருக்குத்தான் தன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஜீவா, காஷ்மீரா காதல் விவகாரம் காஷ்மீரா அப்பாவுக்கு தெரிய வருகிறது. அவர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன் பின் ஜீவா, காஷ்மீரா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? ஜீவா மீது காதல் வயப்பட்ட பிரக்யா நாக்ராவின் காதல் என்ன ஆச்சு என்பது தான் படத்தின் மீதி கதை.

கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா படம் முழுக்க ஜாலியாக கொண்டு செல்ல தன்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளார். இதில் அவர் வெற்றி பெற்றாரா என்பது தான் கேள்வி குறியாக இருக்கிறது. ஜீவா உங்களுக்கு வரலாறு முக்கியம், ஆனால் ஸ்கிரிப்ட் தேர்வு அதை விடா முக்கியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கதையை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஓகே சொன்னார் என்பது தான் ஆச்சரியம்!

கதாநாயகி காஷ்மீரா தங்கையாக பிரக்யா நாக்ரா இருவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பை படத்திற்கு தேவையான அளவு வழங்கியுள்ளனர்.

இரட்டை அர்த்தம் காமெடி ஸ்பெஷலிஸ்ட் வி.டி.வி கணேஷ் ஜீவாவுடன் காமெடி என்ற பெயரில் ஆபாச வசனங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

ஷான் ரஹ்மான் இசை, சக்தி சரவணன் ஒளிப்பதிவு மற்றும் என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு, அவர்களது பங்களிப்பு இந்த அர்த்தமற்ற ஆபாச காமெடி கதைக்கு பெரிய அளவில் இல்லை என்பது தான் நிஜம்.

இரண்டரை மணி நேரம் இரட்டை அர்த்தம் அடல்ட் காமெடியுடன் நகர்த்த மந்தமான மற்றும் நகைச்சுவையற்ற பலவீனமான சுவாரஸ்யமில்லா திரைக்கதையில் மோசமான கேமரா காட்சிகள் அமைத்து இயக்கியுள்ளார் சந்தோஷ் ராஜன்.

மொத்தத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள வரலாறு முக்கியம் – பாலியல் நகைச்சுவை