நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் : நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எந்த தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை | ரேட்டிங்: 1.5/5

0
439

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் : நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எந்த தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை | ரேட்டிங்: 1.5/5

நடிகர்கள் : வைகைப்புயல் வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ராவ் ரமேஷ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு
எடிட்டிங்: செல்வா ஆர்.கே
தயாரிப்பு : சுபாஸ்கரன் அல்லிராஜா
தயாரிப்பு நிறுவனம் : லைகா நிறுவனம்
இயக்கம் : சுராஜ்

வருடக்கணக்கில் குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதி ஒன்று குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு ஒரு சித்தரின் வயிற்றுப்பசியை அந்த தம்பதி ஆற்றுகிறது. இதனால் மனம் குளிர்ந்து போன அந்த சித்தர், அந்த தம்பதிக்கு ஒரு அதிர்ஷ்ட நாய் ஒன்றை கொடுக்கிறார். அந்த நாய் வந்த நேரம், அவர்களுக்கு ஒரு பக்கம் குழந்தையாக நாய்சேகர் (வடிவேலு) பிறக்க, இன்னொரு பக்கம் செல்வம், புகழ் எல்லாம் வந்து சேர்கிறது. அப்படியே கட் பண்ணினால் பெண்களை கடத்தும் தாஸ் (ஆனந்த் ராஜ்), மற்றும் நாய்களை  கடத்தும் நாய் சேகர் (வடிவேலு) இருவரும் பணத்திற்காக கடத்துகிறார்கள். இந்நிலையல் எதிர்பாராத விதமாக நாய் சேகர் தாஸின் விருப்பமான செல்ல நாயை கடத்திச் செல்லும்போது சிக்கல் தொடங்குகிறது. தாஸிடமிருந்து தப்பித்து செல்லும் போது அவரது குடும்பத்தின் கடந்த காலத்தைப் பற்றி அவரது பாட்டி கூறுகிறார். அதாவது அவர்களது அந்த வீட்டில் வேலைக்காரன் மேகநாதனாக சேரும் ராவ் ரமேஷ் அந்த அதிர்ஷ்ட நாயை பற்றி தெரிந்து கொண்டு, அதனை திருடிக்கொண்டு சென்று விடுகிறார். அதனால் அவர் கோடிஸ்வரனாகி விட, நாய்சேகரின் குடும்பம் வறுமையின் கோடிக்கு சென்றதை பற்றி கூறுகிறார். இதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தில் இப்போது செல்வாக்கு மிக்க பணக்காரன் மேக்ஸிடம் இருந்து தனது அதிர்ஷ்ட நாயை மீட்பதற்காக நாய்சேகர் தனது குழுவை அழைத்துக்கொண்டு செல்கிறார். அதே வேளையில் தாஸ் நாய்சேகரை கொலை செய்ய தேடிக் கொண்டிருக்கும் போது, நாய்சேகர் ஹைதராபாத்தில் இருப்பது அறிந்து அங்கு தன் கூட்டாளிகளுடன் செல்கிறான். அதேபோல் நாய்சேகரால் பாதிக்கப்பட்ட போலீஸும் (முனீஸ்காந்த்) நாய்சேகரை தேடி ஹைதராபாத்திற்கு செல்கிறார். ஹைதராபாத் செல்லும் நாய்சேகருக்கு அங்க என்ன ஆகிறது? யார் அந்த மேக்ஸ்? நாய்சேகர் தனது குழந்தைப் பருவத்தில் கடத்தப்பட்ட செல்ல அதிர்ஷ்ட நாயைப் மேக்ஸிடமிருந்து எப்படி மீட்டார்? தாஸும், போலீஸும் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் திரையரங்கத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் கம்பேக்கை காண உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அவருடைய டயலாக் டெலிவரி மிஸ்ஸிங், பாடி லோங்வேஜ் மிஸ்ஸிங். ஆக நம்முடைய வைகைப்புயலை நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் டோட்டலா மிஸ்ஸிங்.

ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, முனிஷ்காந்த் மற்றும் கேபிஒய் பாலா உட்பட நகைச்சுவை நடிகர்கள் பங்கு பெற்ற நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் காமெடி இருக்கு ஆனால் சிரிப்பு வரவில்லை. குறிப்பாக கிங்ஸ்லியும் நடிப்பிலும் பெரிதான எந்த புதுமையும் இல்லை. சளிப்பை ஏற்படுத்தும் ஓரே விதமான பாடி லேங்வேஜ். நிலைத்து நிற்க நடிப்பில் மாறறம் தேவை ரெடின் கிங்ஸ்லி.

ஆனால் பெண்களை கடத்தி பணம் சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் ராஜ் தான் நம்மை ஓர் அளவுக்கு சீட்டில் உட்கார வைக்கிறார், நடிப்பின் மூலம் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார்.

மேக்ஸ் மற்றும்  மேகநாதனாக வரும் ராவ் ரமேஷ், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உட்பட மற்ற அனைத்து நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாரயணனின் இசை, விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு கொஞ்சம் ஆறுதல் தருகிறது.

செல்வா ஆர்.கே கத்திரியை கொஞ்சம் சரியாக பணன்படுத்தி இருக்கலாம்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் வைகைப்புயல் வடிவேலுவின் கம்பேக்குக்காக காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயக்குனர் சுராஜ் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுத எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றே சொல்லலாம். மேலும் ஒரு குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை மாற்றும் நாய்க்குட்டியைப் பற்றிய இனிமையான ஃப்ளாஷ்பேக்குடன் படம் தொடங்கினாலும், அதற்குண்டான முக்கியத்துவம் படத்தில் துளிகூட இல்லை. இயக்குனர் சுராஜின் பழைய படங்களில் இருந்த காமெடி முத்திரை இதில் இல்லாதது பெரும் ஏமாற்றம்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எந்த தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை.