ரெய்டு சினிமா விமர்சனம் : ரெய்டு விறுவிறுப்பு குறைவு | ரேட்டிங்: 2.5/5

0
254

ரெய்டு சினிமா விமர்சனம் : ரெய்டு விறுவிறுப்பு குறைவு | ரேட்டிங்: 2.5/5

ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ{டன் எஸ்.கே.கனிஷ்க், ஜி.கே. ஜி.மணிகண்ணன் இயக்கத்தில் கார்த்தி இயக்கி இருக்கும் படம் ரெய்டு. விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தர்ராஜா, டேனியல், ஹரீஷ் பெராடி, வேலு பிரபாகரன் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசை. ஒளிப்பதிவு கதிரவன். படத்தொகுப்பு மணிமாறன். இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு டிஒன்.

பிரபாகரன் (விக்ரம் பிரபு) நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் ஊரில் இருக்கும் ரவுடி கும்பல்களை அடித்து ஒழித்து நகரத்தில் அமைதியை உறுதிப்படுத்த விரும்புகிறார். அப்படி தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகி ரவுடிசம் செய்து வரும் டாலிக்கும் (ரிஷி ரித்விக்) மற்றும் சிட்டுவிடம் (சவுந்தரராஜா) பிரபாகரன் மோதுகிறார். டாலியின் தம்பி காக்ரோச்சை (டேனியல்) பிரபாகரன் அவமானப்படுத்தியது டன் என்கவுண்டர் செய்கிறார். இதனால் கோபம் அடையும் டாலி மற்றும் சிட்டு, பிரபாகரன் மற்றும் அவரது காதலி ஸ்ரீதிவ்யாவை சுட்டு விடுகிறார்கள். இந்த தாக்குதலில் காதலி ஸ்ரீதிவ்யா கொல்லப்படுகிறார். துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிர் தப்பிக்கும் பிரபாகரன், தன் காதலியை கொன்ற ரவுடி டாலி மற்றும் சிட்டுவை பழிவாங்குவதே படத்தின் மீதிக்கதை.

பலவீனமான கதைகளத்தில் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரி பிரபாகரன் கதாபாத்திரத்தில் பொருந்த வில்லை என்று தான் சொல்ல வேண்டும். காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் அவரது நடிப்பு கவரவில்லை. அவரது காதலியாக ஸ்ரீதிவ்யா வந்து மறைகிறார்.

டாலி கதாபாத்திரத்தில் ரிஷி வில்லனாக மிரட்டலான நடிப்பின் மூலம் அனைவரின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார். மற்றும் ரௌடி நண்பன் சிட்டுவாக சவுந்தரராஜா டாலிக்கு இணையாக கதாபாத்திரம் இல்லை என்றாலும் அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் அவரது கதாபாத்திரத்தை மேலும் வலுபடுத்தி சவுந்தரராஜாவின் நடிப்பு திறனை சரியாக பயன்படுத்தி இருக்கலாம்.

அனந்திகா, டேனியல், ஹரீஷ் பெராடி, வேலு பிரபாகரன் மற்றும் துணை கதாபாத்திரங்கள் ஆங்காங்கே வந்து போகிறார்கள்.

சாம்.சி.எஸ். இசை மற்றும் பின்னணி இசையில் புதுமை இல்லை.

ஒளிப்பதிவாளர் கதிரவன் படத்தின் காட்சிகளை ஓரளவிற்கு கேமரா கோணங்கள் மூலம் ஈர்த்துள்ளார்.

மணிமாறன் படத்தொகுப்பு நேர்கோட்டில் அமைக்கப்படாத கதையை ஓர் அளவுக்கு சுவாரஸ்யமாக நகர முயற்சித்துள்ளார்.

வழக்கமான பழைய கதை. இதில் வழக்கம் போல் போலீஸ், ரவுடி, கொலை, துப்பாக்கி சூடு, என்கவுண்டர் ஆகியவை இருந்தாலும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் கார்த்தி.

மொத்தத்தில் ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ரெய்டு விறுவிறுப்பு குறைவு.