ரூட் நம்பர் 17 சினிமா விமர்சனம் : ரூட் நம்பர் 17 விறுவிறுப்பான ஆக்சன்-பேக் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
238

ரூட் நம்பர் 17 சினிமா விமர்சனம் : ரூட் நம்பர் 17 விறுவிறுப்பான ஆக்சன்-பேக் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

நேநி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ரூட் நம்பர் 17’.

 நடிகர்கள் :
ஜித்தன் ரமேஷ் – ஜான் ஃப்ரெடி மற்றும் ஃப்ரெடி
அகில் பிரபாகர் – கார்த்திக்
அஞ்சு ஓடியா – அஞ்சனா
மதன் குமார் – கான்ஸ்டபிள் திக்னேஷ்
ஹரீஷ் பேரடி மந்திரி குருமூர்த்தி
டாக்டர்.அமர் ராமச்சந்திரன் – இன்ஸ்பெக்டர் முகமது
ஜெனிபர் – ஜெனி ஜான் மனைவி
மாஸ்டர் நிஹல் – ஃப்ரெடி
டைட்டஸ் ஆபிரகாம் – நடராஜன் நிருபர்
ஃப்ரோலிக் ஜார்ஜ் – ஹாஷிம் இப்ராஹிம்தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : அமர் ராமச்சந்திரன்
இயக்கம் : அபிலாஷ் ஜி தேவன்
இசை : அவுசேப்பச்சன்
ஒளிப்பதிவு : பிரசாந்த் பிரணவம்
படத்தொகுப்பு : அகிலேஷ் மோகன்
சவுண்ட் கிராபிக்ஸ் : காந்தாரா டீம்
சவுண்ட் டிசைன் : ராஜாகிருஷ்ணன் (காந்தாரா டீம் )
ஆக்சன் காட்சிகள் : ஜாக்கி ஜான்சன்
ஒப்பனை : ரஷீத் அகமது (தேசிய விருது)
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்

முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது.  இதனிடையே முன்னாள் அமைச்சர் குருமூர்த்தியின் (ஹரிஷ் பேரடி) மகன் கார்த்திக் (அகில் பிரபாகர) தன் காதலி அஞ்சனாவோடு (அஞ்சு ஓடியா) தென்காசி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு டேட்டிங் போகிறார்கள். காட்டுப்பகுதியில் போகும் போது வழியில் ஒரு பிரிவில் மாலை ஆறு மணிக்கு மேல போகாதீர்கள் என்று அறிவிப்பு பலகை உள்ள ரூட் நம்பர் 17 பாதையில் அவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள். அப்போது இருட்டில்  அவர்களை ஒரு உருவம் தாக்குகிறது. கண்விழித்து பார்த்தால் ஒரு குகையில் இருவரும் தாக்கப்பட்டு இருப்பதை உணர்கிறார்கள். அப்போது எதிரில் அந்த உருவம் வருகிறது. பரட்டை தலை முடியும், தாடியும் ஃப்ரெடி (ஜித்தன் ரமேஷ்) பயமுறுத்தும் பார்வையுடன் அவர்கள் முன்  பாய்ந்து காதலனை தாக்குகிறான். அந்த குகையில் அவர்களை எதற்காக சிறைபிடித்தான் என்று யாருக்கும் தெரியாத நிலையில் காதலனும் அவரது காதலியின் தப்பிக்க முயல்கிறார்கள். இப்போது இருவரையும் ஃப்ரெடி கொலை வெறியுடன் தாக்கி குகைக்குள் தள்ளி விடுகிறான். கார்த்திக் குகையில் உள்ள ஒரு கல்லில் மோதி ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுகிறான். இவர்கள் இருவரும் காணாமல் போன தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் முகமது  (டாக்டர்.அமர் ராமச்சந்திரன்) மற்றும் கான்ஸ்டபிள் விக்னஷ்  (மதன் குமார்) அவர்களை தேடி செல்கிறார்கள். ரூட் நம்பர் 17 பாதையில் சென்ற இருவரும்  இருட்டி விட்டதால் திரும்பி சென்று விடுகிறார்கள். இரவில் குழப்பத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் முகமது மீண்டும் தனியாக புறப்பட்டு ரூட் நம்பர் 17 பாதைக்கு செல்கிறார். அவரும் தாக்கப்பட்டு குகையில் அடைக்கப்படுகிறார். இந்நிலையில் காணாமல் போன கார்த்திக், அஞ்சனா, இன்ஸ்பெக்டர் முகமது தேடி கான்ஸ்டபிள் விக்னேஷ் பயணிக்கும் போது நிருபர்  நடராஜன் (டைட்டஸ் ஆபிரகாம்) மூலம் முப்பது வருடங்களுக்கு முன் பொறியாளர் ஜான் ஃப்ரெடி (ஜித்தன் ரமேஷ்) ரூட் நம்பர் 17 பாதையில் குடும்பத்துடன் கொல்லப்பட்ட விவரத்தை அவர் பார்வையில் கூறுகிறார். இந்த கொலை சம்பவத்தில் இருந்து  ஃப்ரெடி (மாஸ்டர் நிஹல்) மட்டும் தப்பித்து விட்டதாக சொல்கிறார். 30 வருடங்களாக காட்டில் மிருகங்கள் மத்தியில் போராடி வளர்ந்து தன் அப்பாவையும் அம்மாவையும் கொன்றவர்களை பழிவாங்க மகன் ஃப்ரெடி (இப்போது ஜித்தன் ரமேஷ்)  அவர்களை கடத்தியிருக்கலாம் என்று சொல்ல மீண்டும்  அவர்களை தேடி காட்டுக்குள் செல்கிறார் கான்ஸ்டபிள் விக்னேஷ். மயங்கி விழுந்த காதலன் என்ன ஆனார்? பொறியாளர் ஜான் ஃப்ரெடி கொலைக்கும் முன்னாள் மந்திரி குருமூர்த்திக்கு என்ன தொடர்பு? கான்ஸ்டபிள் விக்னேஷ், அஞ்சனா மற்றும் இன்ஸ்பெக்டர் முகமதுவை கண்டுபிடித்தாரா? ஃப்ரெடி பழிவாங்கும் எண்ணம் நிறைவேறியதா? போன்ற கேள்விகளுக்கு ரூட் நம்பர் 17 விடை சொல்லும்.
ஜித்தன் ரமேஷ் அவர்தான் வில்லன் ஹீரோ வேற லெவல்ல பண்ணிருக்கார். பொறியாளர் ஜான் ஃப்ரெடி கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் அமைதியான நடிப்பு வழங்கியுள்ளார்.
மகன் ஃப்ரெடி கதாபாத்திரத்தில் பரட்டை தலைமுடி மற்றும் நீண்ட தாடியுடன் கதைக்கு உணர்ச்சிகரமான ஆழத்தை கொண்டு ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார் ஜித்தன் ரமேஷ்.
காதல் ஜோடியாக நடித்திருக்கும் அகில் பிரபாகர் மற்றும் அஞ்சு ஓடியா, வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பேரடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருவி மதன், ஜான் ஃப்ரெடி மனைவியாக ஜெனிபர், மகன் சிறு வயது ஃப்ரெடியாக மாஸ்டர் நிஹல், நிருபராக டைட்டஸ் ஆபிரகாம், ஃப்ரோலிக் ஜார்ஜ் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கி  திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளனர். குறிப்பாக அஞ்சு ஓடியா நடிப்பு அற்புதம். படம் முழுவதும் அழுக்கு படிந்த உடலோடு நடித்திருப்பதோடு, விழுவது, ஓடுவது, அடி வாங்குவது என அவரது உழைப்பு திரையில் தெரிகிறது.
இசை அவுசேப்பச்சன், ஒளிப்பதிவு பிரசாந்த் பிரணவம், படத்தொகுப்பு அகிலேஷ் மோகன், சவுண்ட் கிராபிக்ஸ் காந்தாரா டீம், சவுண்ட் டிசைன் ராஜாகிருஷ்ணன் (காந்தாரா டீம்), ஆக்சன் காட்சிகள் ஜாக்கி ஜான்சன், ஒப்பனை  ரஷீத் அஹமது என தொழில்நுட்ப கலைஞர்களின் நேர்த்திக்கு மேலும் வலு சேர்த்து உள்ளது.
ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த சூழலை உருவாக்கி, உணர்ச்சிகரமான திரைக்கதையில் மர்மத்தை சமநிலைப்படுத்தி விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன்.
மொத்தத்தில் நேநி எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள ரூட் நம்பர் 17 விறுவிறுப்பான ஆக்சன்-பேக் த்ரில்லர்.