மூத்தகுடி சினிமா விமர்சனம் : திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் மக்களிடம் சரியாக சென்றடைந்திருக்கும்

0
178

மூத்தகுடி சினிமா விமர்சனம் : திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் மக்களிடம் சரியாக சென்றடைந்திருக்கும்

நடிகர், நடிகைகள் :
தருண்கோபி ( வீரய்யன் )
பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை )
அன்விஷா ( ஜோதி )
கே.ஆர். விஜயா ( மூக்கம்மா )
ஆர்.சுந்தர்ராஜன் ( நச்சாளி )
ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் )
யார் கண்ணன் ( பழையசோறு )
சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி )

தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – கந்தா ரவிச்சந்திரன்
இசை – து.சு. முருகானந்தம்
பாடல்கள் – நந்தலாலா
எடிட்டிங்    – வளர்பாண்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
நடனம் – ரம்யா தேவி
தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
கதை, வசனம் – ஆ.சரக்குட்டி
திரைக்கதை, இயக்கம் – ரவி பார்கவன்.
தயாரிப்பு நிறுவனம் – தி ஸ்பார்க்லேண்ட்
மக்கள் தொடர்பு – மணவை புவன்

மூத்தகுடி கிராமத்து பெரிய குடும்பத்தை சேர்ந்த மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்லுக்கு அந்த ஊரே கட்டுப்பட்டுள்ளது. மூக்கம்மா தன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று பூஜை செய்கின்றார். அங்கு  மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் ஒன்றாக மது அருந்தச் செல்கின்றனர். பின்னர் அவர்கள் லாரி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் பலர் உயிரிழக்கின்றனர். இந்த விபத்தில் மூக்கம்மா, அவரது தம்பி பழையசோறு (யார் கண்ணன்) மற்றும் பேரக்குழந்தைகள் மட்டுமே உயிர் தப்புகின்றனர். பெற்றோரை இழந்த அந்த குழந்தைகளை அவர்கள் எடுத்து வளர்க்கிறார்கள். பல உயிர் பலி வாங்கிய அந்த மோசமான சம்பவத்துக்கு பிறகு மதுவை ஒழித்துக் கட்ட முடிவு செய்து மூக்கம்மா, தனது ஊரில் இனி யாரும் மது குடிக்க கூடாது, அப்படி குடித்தால்  ஊரை விட்டு அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள், என்று கட்டுப்பாடு போடுகிறார். அவருடைய கட்டுப்பாடு படி மூத்தகுடி மக்கள் மது குடிக்காமல் வாழ்ந்து வருவது, ஊருக்குள் மது விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதற்கிடையில், தொழிலதிபர் செந்தூரப்பாண்டியன் (ராஜ்கபூர்) கிராமத்தில் ஒரு மதுபான ஆலையை உருவாக்க திட்டமிட்டு  நகர மக்களை எப்படியாவது குடிக்க வைக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், மூக்கம்மாவின் பேரக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள். அதில், முறைப்பெண் ஜோதியை (அன்விஷா), வீரய்யனுக்கு (தருண் கோபி) திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே வீரய்யனிடம் ஜோதி தான் உன் மனைவி என்று கூறி வந்ததால், வீரய்யன் ஜோதியை தீவிரமாக காதலித்து வருகிறார். ஆனால், ஜோதிக்கு வீரய்யனின் தம்பி அய்யாதுரை (பிரகாஷ் சந்திரா) மீது காதல் மலர்கிறது. தம்பி அய்யாதுரை – ஜோதி காதல் பற்றி வீரய்யனுக்கு தெரிய வரும் போது மூக்கம்மாவின் குடும்பத்தை மட்டுமல்ல, தொழிலதிபர் செந்தூரப்பாண்டி வீரய்யனை தன் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து கிராமத்தில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாட்டை உடைத்து மதுபான ஆலை தொடங்க ஏற்பாடு செய்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
தருண்கோபி வீரய்யன் கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை தருவதாக நினைத்து, பார்வையாளர்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்படும் அளவுக்கு ஓவர் ஆக்டிங் நடிப்பை வழங்கியுள்ளார்.
பிரகாஷ் சந்திரா (தம்பி அய்யாதுரை) நடிப்புக்காக இன்னும் உழைக்க வேண்டும், , அன்விஷா (நாயகி ஜோதி) நடிப்பு சுமார். கே.ஆர்.விஜயா (மூக்கம்மா), ராஜ்கபூர் (தொழிலதிபர் செந்தூரப்பாண்டியன்) மற்றும் யார் கண்ணன் (பழைய சோறு) இவர்கள் மூவரும் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். காமெடி என்ற பெயரில் ஆர்.சுந்தர்ராஜன் (நச்சாளி) மற்றும் சிங்கம் புலி (பஞ்சு பெட்டி) இருவரும் நம்மை கடுப்பேற்றுகிறார்கள்.

பலவீனமான திரைக்கதையால் ஒளிப்பதிவு கந்தா ரவிச்சந்திரன், இசை ஜெ.ஆர்.முருகானந்தம், பாடல்கள் நந்தலாலா, எடிட்டிங் வளர் பாண்டி, ஸ்டண்ட் சரவெடி சரவணன், நடனம் ரம்யா தேவி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய சமூகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல விஷயத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் ரவி பார்கவன் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் மக்களிடம் சரியாக சென்றடைந்திருக்கும்.

** ரேட்டிங்: 2/5