ருத்ரன் திரைவிமர்சனம் : ருத்ரன் – ரசிகர்களை மகிழ்விக்கவோ, மிரட்டவோ இல்ல | ரேட்டிங்: 2/5

0
375

ருத்ரன் திரைவிமர்சனம் : ருத்ரன் – ரசிகர்களை மகிழ்விக்கவோ, மிரட்டவோ இல்ல | ரேட்டிங்: 2/5

வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞனான ருத்ரா (ராகவா லாரன்ஸ்) தனது பெற்றோர்களான நாசர் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார். அவர் அனன்யாவை (ப்ரியா பவானி சங்கர்) காதலிக்கிறார், அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். தந்தை நாசர் ஒரு டிராவல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். ரூ.6 கோடி கடன் வாங்கி கம்பெனியை வளர்க்க நினைக்கும் போது நாசரின் நண்பர் அந்த பணத்தை எடுத்து தலைமறைவாகிவிடுகிறார். இதனால் கடன் சுமையில் சிக்கிய நாசர் வருத்தம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிடுகிறார். இதனால், ருத்ராவின் குடும்பம் நிதி பிரச்சனைகளை எதிர்கொள்கிறது, மேலும் அவர் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில், அவரது தாயார் இறந்துவிடுகிறார், மனைவி அனன்யா காணாமல் போகிறார். பேரழிவிற்கு ஆளான ருத்ரா அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய வீடு திரும்புகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராகவா லாரன்ஸ் தலைமறைவாக இருந்து பூமி (சரத்குமார்) அடியாட்கள் ஒவ்வொருவரையும் கொன்று வருகிறார். பூமி (சரத்குமார்) கதையுடன் எவ்வாறு தொடர்புடையது? ருத்ரா அடுத்து என்ன செய்வார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ருத்ரா வேடத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ் ஆடியன்ஸ் விரும்பும் நகைச்சுவை, நடன அசைவுகள், ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பு என அனைத்திலும் புதுமையாக எதுவும் வழங்க வில்லை.

ப்ரியா பவானி சங்கர் திரையில் சிறிது நேரம் தோன்றுகிறார், குறிப்பாக முதல் பாதியில். ராகவா லாரன்ஸ{டனான அவரது காதல் காட்சிகள் அருமையாக உள்ளன
சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், அபிஷேக் வினோத், சச்சு, சிவாஜித், ரெடின் கிங்ஸ்லி, காளி வெங்கட், ஷியாம் பிரசாத் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.

சாம் சிஎஸ்-ஸின் பின்னணி இசை மிகவும் சத்தமாக உள்ளது, குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில். ஒலிக்கலவை நன்றாக செய்திருக்க வேண்டும். எடிட்டர் ஆண்டனி, முதல் பாதியில் பல தேவையற்ற காட்சிகளை ட்ரிம் செய்திருக்க வேண்டும். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். முழுக்கதையையும் எளிதில் கணிக்க முடியும். இந்த மாதிரியான கதையை பல ஆண்டுகளாக பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். கதைக்களத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்க வேண்டும். பலவீனமான திரைக்கதையில் ஈர்க்காத பழிவாங்கும் பழயை டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கிறார்.

மொத்தத்தில் ருத்ரன் – ரசிகர்களை யாரையும் மகிழ்விக்கவோ, மிரட்டவோ இல்லை.