ரத்தம் திரைப்பட விமர்சனம் : ரத்தம் ஏமாற்றமே மிச்சம் | ரேட்டிங்: 2.5/5

0
864

ரத்தம் திரைப்பட விமர்சனம் : ரத்தம் ஏமாற்றமே மிச்சம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் :
விஜய் ஆண்டனி
மஹிமா நம்பியார்
நந்திதா ஸ்வேதா
ரம்யா நம்பீசன்
நிழல்கள் ரவி

தொழில்நுட்பக் கலைஞர்கள் :
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்சயன், பிரதீப் பி மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
இசையமைப்பாளர்: கண்ணன் நாராயணன்
டி ஓ பி: கோபி அமர்நாத்
எடிட்டிங்: டி.எஸ். சுரேஷ்
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
ஒலி வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம் எம்.பி.எஸ்.,
ஒலி கலவை: ஏ எம் ரஹ்மத்துல்லா
கலை: செந்தில் ராகவன்
எழுதும் குழு : அதிஷா, கார்க்கிபவா, தோழர் ஆதி
டிஐ: பி2எச் ஸ்டுடியோஸ்
வண்ணக்கதை: செல்வம்
பாடல் வரிகள்: யுகபாரதி, அறிவு, உமா தேவி, கே.சந்துரு
ஆடை வடிவமைப்பாளர்: சிமோனா ஸ்டாலின்
ஒப்பனை: ஹரி பிரசாத்
ஸ்டில்ஸ்: மகேஷ் ஜெயச்சந்திரன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: பிரதீப் சுப்ரமணியம்
இயக்கம் : சி.எஸ்.அமுதன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா, டிஒன்

ரத்தம் ஒரு ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் செழியனின் கொலையுடன் தொடங்குகிறது. கொலையாளி ஒரு கட்சித் தலைவனின் ரசிகராவார், அவர் தனது தலைவர் மீது வெளியிடப்பட்ட எதிர்மறையான கதையால் கோபமடைந்து இந்த கொலையை செய்கிறார். இங்கிருந்து கட் செய்தால் கொல்கொத்தாவில் முன்னாள் புலனாய்வு பத்திரிகையாளர் ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி) தனது மனைவியின் மரணத்திற்கு பிறகு வேலையை விட்டு விலகி, தனது இளம் மகள் அரும்பாவுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சோகம் காரணமாக அவர் கடந்த கால தொடர்புகளிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். அவர் வாழ்க்கைக்காக குதிரைகளை பராமரிக்கும் வேலையை செய்து வருகிறார். ரஞ்சித் குமார் அந்த சோகத்திலிருந்து விடுபடாமல் குடித்துக் கொண்டே இருக்கிறார். சென்னையில்இ மர்ம நபரால் பத்திரிகை அலுவலகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செழியனின்  தந்தையும் ரஞ்சித் குமார் வளர்ப்புத் தந்தையும் அந்த பத்திரிகை நிறுவன முதலாளியான ரத்தின பாண்டியன் (நிழல்கள் ரவி) கொல்கத்தாவில் ரஞ்சித் குமாரை சந்தித்து சென்னைக்கு வரும்படி வேண்டுகோள் வைக்கிறார். அந்த வேண்டுகோளை ரஞ்சித் குமார் மறுக்கிறார். ஒரு கட்டத்தில் ரஞ்சித் குமார் மீண்டும் சென்னைக்கு வருகிறார், வளர்ப்புத் தந்தை ரத்ன பாண்டியன் மற்றும் குற்றவியல் தலைமை நிருபர் மதுமிதா (நந்திதா ஸ்வேதா) ஆகியோருடன் இணைகிறார். தனது நண்பன் செழியனின் கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்கும்போது, ஒரு மாவட்ட ஆட்சியரும் கொல்லப்படுகிறார்.இந்தக் கொலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது என்பதை உணர்ந்து கொலையை விசாரிக்கிறார். அந்த கும்பல் யார், அந்த சூத்திரதாரியின் நோக்கம் என்ன என்பதை கண்டறிந்து அதை முறியடித்தாரா ரஞ்சித் குமார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் ரஞ்சித் குமாராக விஜய் ஆண்டனியின் நடிப்பு பேசும் படி இல்லை. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் என்றால் ஒரு ஜேம்ஸ் பாண்டு போல் இருக்க வேண்டும் என்று நினைத்து கமிஷனர் அலுவலகத்தில் சுலபமாக நுழைந்து ஹார்டு டிஸ்க்குகளை திருடிக் கொண்டு அங்கு இருந்த குதிரையில் ஏறி தப்பிச் செல்வது போன்ற செயல் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்க்கு உண்டான நம்பகத் தன்மையை கேலி செய்வது போல உள்ளது. அதுவும் போலீஸ் அருகில் இருந்து சுடும் போது ஒரு குண்டு கூட அவர் மீது படாது. அந்த அளவுக்கு தமிழக போலீஸ் சுடும் திறமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது? அவரது கதாபாத்திரத்திற்கு ஓவர் பில்ட்-அப்  கொடுக்கப்பட்டு உள்ளதால் படத்தில் அவரது நடிப்பு முற்றிலும் செயற்கை தன்மையாக தான் உள்ளது.

பத்திரிகை நிறுவன முதலாளியான ரத்தின பாண்டியன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியின் அனுபவ நடிப்பை இயக்குனர் சரியாக பயன்படுத்த வில்லை.

குற்றவியல் தலைமை நிருபர் மதுமிதாவாக நந்திதா ஸ்வேதா தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிஸ் செய்துள்ளார். தனது உடல் மொழியில் செயல்திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், இருவருடைய கதாபாத்திரம் அழுத்தம் இல்லாமல் பெரிய பில்டப் இருப்பது போல திரையில் காட்டப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் கண்ணன் பின்னணி இசையும், பாடல்களும் ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் முடிந்த அளவுக்கு சுமாரான திரைக்கதைக்கு தனது கேமரா கோணங்கள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

க்ரைம் திரில்லிங்கான கதை களத்திற்கு டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங் விறுவிறுப்பாக அமைய வில்லை.

இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட், கதையை வித்தியாசமாக சொல்லாம் என்று நினைத்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் வேறு ஜானரில் சொல்ல முயன்றுள்ளார். ஆனால் அவருடைய படைப்பு எந்த தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. ஆரம்பம் முதலே எந்த ஒரு ஒற்றுமையும் சுவாரசியமும் இல்லாமல் பயணிக்கும் திரைக்கதைஇ இயக்குனரிடம் பல கேள்விகளை கேட்க தூண்டுகிறது. முதல் காட்சி செயற்கையானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தும் பத்திரிகை அலுவலகத்தில் சுலபமாக உள்ளே நுழைய முடியுமா? அதே போல கமிஷனர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் போது முக்கிய சாட்சி பொருட்களை சும்மா ஈஸியா எடுத்துவிட்டு, அதை போலீஸ் பார்வையில் பட்ட பிறகு அங்கிருந்து சுலபமாக தப்பிக்க முடியுமா? அதுவும் துப்பாக்கி சுடுதலில் இருந்து..? தமிழக போலீசின் துப்பாக்கி சுடும்   திறன் இயக்குனர் நினைத்தது போல் இருந்திருந்தால், தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் உயிர் சேதம் இருந்திருக்காது? இதுபோன்ற கேள்விகளுக்கு இயக்குனருக்கு சரியான பதில் தெரிந்திருந்தால் நிச்சயம் அவர் க்ரைம் த்ரில்லருக்கான அழுத்தமான திரைக்கதை அமைத்திருப்பார். மாறாக காத்து வாக்கில் கிடைத்த தகவல்களை வைத்து அமெச்சூர் தனமான ஸ்கிரிப்ட்டை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்சயன், பிரதீப் பி மற்றும் பங்கஜ் போஹ்ரா இணைந்து தயாரித்துள்ள ரத்தம் ஏமாற்றமே மிச்சம்.