மிஷன் சாப்டர் 1 சினிமா விமர்சனம் : அருண் விஜய்யின் ஒன் மேன் ஷோ மிஷன் சாப்டர் 1 | ரேட்டிங்: 2.5/5

0
365

மிஷன் சாப்டர் 1 சினிமா விமர்சனம் : அருண் விஜய்யின் ஒன் மேன் ஷோ மிஷன் சாப்டர் 1 | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் :
அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் :
இயக்குனர்: விஜய்
ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ்: ஜி.கே.எம். தமிழ் குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன்,
தயாரிப்பாளர்கள்: எம். ராஜசேகர், எஸ். சுவாதி,
இணை தயாரிப்பு: சூர்ய வம்சி பிரசாத் கொத்தா-ஜீவன் கொத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்,
கதை – திரைக்கதை: ஏ. மஹாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
படத்தொகுப்பு: ஆண்டனி,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா.
மக்கள் தொடர்பு டிஒன் சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர்.

இஸ்லாமிய தீவிரவாதியான உமர் பாய் தலைமையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் . இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினை தடுக்க வேண்டும் என்பது தான். அவர்களின் சதி திட்டம் இந்திய ராணுவத்துக்கு தெரிந்து விட இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனிலிருந்து செயல்படுத்த திட்டம் தீட்டுகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நாயகன் குணசேகரன் (அருண் விஜய்) மகள் சனாவுக்கு (பேபி இயல்) விபத்தில் உடல் நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதை சரி செய்ய லண்டன் மருத்துவமனைக்கு சென்று ஆபரேஷன் செய்ய வேண்டும். தனது குழந்தையின் மருத்துவ தேவைக்காக பணம் தேவைப்படும் நிலையில் தன் வேலையை விட்டுட்டு ஹவாலா மூலம் பணத்தை எடுத்துக்கொண்டு லண்டன் செல்கிறார். அங்கு ஒரு மருத்துவமனையில் குணசேகரன் வைத்திருக்கும் ஹவாலா பணத்திற்கு ஆசைப்பட்டு மருத்துவ ஊழியர் ஒருவர் தன் கூட்டாளியின் உதவியுடன் குணசேகரன் ஹவாலா பணத்தை பெற வைத்திருக்கும் ஒரு பத்து ரூபாய் நோட்டை திருட முயற்சிக்கிறார்கள். அப்போது சண்டை நடக்கிறது. போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த இடத்திற்கு செல்கிறது. அந்த திருட்டை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸாரை தவறுதலாக குணசேகரன் அடித்து விட அவர் லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறைக்கு செல்கிறார். அங்கு சிறையின் ஜெயிலர் சான்ட்ரா (எமி ஜாக்சன்) உள்ளார். இந்நிலையில் லண்டன் வந்த இஸ்லாமிய தீவிரவாதியான உமர் பாய் சிறையில் இருக்கும் சிலரை மீட்க முயற்சிக்கிறார். சிறை முழுவதும் ஹேக் செய்து தீவிரவாதிகள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதை அறிந்த குணசேகரன் அவர்களை தடுக்க முயற்சி செய்கிறார். அதை தடுக்க போராடும் எமி ஜாக்சனுக்கு துணையாகவும் நிற்கிறார். அதன் பின் நடப்பது படத்தின் மீதிக்கதை.
 
அருண் விஜய், பரிதவிப்பு, ஆக்ரோஷம் என அனைத்தையும் உடல் மொழி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரித்துள்ளார்.

ஆக்சனுடன் பெரிய பில்டப்போடு தோன்றும் எமி ஜாக்சன் படம் உச்சகட்டத்தை அடையும் போது அருண் விஜய் கதாபாத்திரம் பேசப்பட வேண்டும் என்பதற்காக அப்படியே எமி ஜாக்சன் கதாபாத்திரத்தை டம்மியாக ஆக்கப்பட்டுள்ளது.

அதே போல பரத் போபண்ணாவுக்கு வில்லனுக்கான பங்களிப்பு மிக குறைவு. பெரிய அளவில் அவருடைய திறமையை வெளிப்படுத்த காட்சி அமைப்பு இல்லை.
நிமிஷா சஜயன், அபி ஹாசன், பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் அனைத்து துணை கதாபாத்திரங்கள் தங்களது பணியை நேர்த்தியாக செய்துள்ளனர்.

இசை ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு சந்தீப் கே விஜய், படத்தொகுப்பு ஆண்டனி, சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் ஆன்மாவாக திகழ்கிறது.

மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் பயணத்தின் பின்னணியில் மிகவும் சாதாரணமான மற்றும் யூகிக்கக்கூடிய கதையை ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் திரைக்கதையில் அதிரடி, அப்பா-மகள் உறவு என எதிர்பாராத திருப்பங்களுடன் அமைத்து பார்வையாளர்களை ஈர்க்க முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜய்.

மொத்தத்தில் அருண் விஜய்யின் ஒன் மேன் ஷோ மிஷன் சாப்டர் 1.