பைண்டர் சினிமா விமர்சனம் : ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
305

பைண்டர் சினிமா விமர்சனம் : ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரிப்பில், வினோத் ராஜேந்திரன், சார்லி, நிழல்கள் ரவி, சென்ட்ராயன், தரணி ரெட்டி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், நடிப்பில் வினோத் ராஜேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் பைண்டர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
எடிட்டர் – தமிழ்குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
இசை – சூர்ய பிரசாத்
மக்கள் தொடர்பு – ராஜா

மீனவரான பீட்டர் (சார்லி), மனைவி மற்றும் மகள் ரூபியுடன் (பிரானா) மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகிறார். அவர் ஊரில் இருக்கும் மீனவ குடும்பத்தினர்களிடம் பணம் வாங்கி சீட்டு கட்டி வருகிறார். சீட்டு கம்பெனி நடத்தியவர் பீட்டரை ஏமாற்றி விட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விடுகிறார். ஆனால் ஊரில் இருக்கும் மக்கள் அனைவரும் பீட்டரிடம் பணத்தை திருப்பி கேட்டு அழுத்தம் தருகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் கடன் சுமையால் இருக்கும் பீட்டர், பணம் தேவைக்காக உறவினர் ராயன் (சென்றாயன்) யோசனைப்படி செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்கிறார். 6 மாதத்தில் வெளியே வந்து விடலாம் என்று ஜெயிலுக்கு செல்லும் சார்லிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஜெயிலில் ராயனும் தண்டனை அனுபவித்துக் கொண்டே இறந்து விட வக்கீல் மூலம் பணம் கிடைக்காத நிலையில் பீட்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போக, தகப்பனை காப்பாற்ற தவியாய்த் தவிக்கும் ரூபி தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் வினோத் (வினோத் ராஜேந்திரன்) மற்றும் பல்லவி (தரணி ரெட்டி) உதவியை நாடி 8 வருடங்களாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் தன் தந்தை பீட்டரை மீட்டு தருமாறு கேட்கிறார். பீட்டர் குற்றமற்றவர் என்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட வினோத்தும் பல்லவியும் எட்டு வருடத்திற்கு முன் முடிந்த வழக்கை மீண்டும் திறக்கிறார்கள், பல மறைக்கப்பட்ட தடயங்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படுத்தும் போது நடைபெறும் சம்பங்களே படத்தின் மீதிக்கதை.

கதையின் ஒரு திருப்புமுனையாக சார்லியின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ளது. தனது அனுபவ நடிப்பால் பீட்டர் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

அதே போல ராயன் கதாபாத்திரத்திற்கு சென்ட்ராயன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கதையின் நாயகனாக வினோத் ராஜேந்திரன், அவரது பார்ட்னராக தரணி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், மற்றும் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் ஸ்டைலிஷ் ஆக்டர் நிழல்கள் ரவி உட்பட அனைவரும் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு, தமிழ்குமரன் எடிட்டிங், அஜய் சம்பந்தம் கலை இயக்கம் மற்றும் சூர்ய பிரசாத் இசை ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஒரு புலனாய்வு திரில்லரை சலிப்பில்லாமல் ரசிக்க வைத்துள்ளது.

ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, செய்யாத குற்றங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து, அவர்கள் நிரபராதி என்று நிரூபித்து அவர்களுக்கு விடுதலை கிடைக்க போராடி வெற்றி பெறும் கதைகளத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் படி திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன். திரைக்கதையில் அழுத்தம் இல்லாத வில்லன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்புடன் நகர்ந்திருக்கும்.

மொத்தத்தில் ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்.