பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்: பிரியமுடன் ப்ரியா உணர்வுபூர்வமான சைக்கோ த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
249

பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்: பிரியமுடன் ப்ரியா உணர்வுபூர்வமான சைக்கோ த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:
அசோக் குமார் பாலகிருஷ்ணன் மார்க்
பிரியாவாக லீஷா எக்லேயர்ஸ்
புரோக்கராக ஜீவா
கிஷோர் எப் ஃஎம் எம்டி (குஅ ஆன) ஆக தலைவாசல் விஜய்
ராகினியாக குழந்தை வேதிகா
எஸ்ஐயாக கார்த்திக் யெஸ்கே
ரோகினியாக குழந்தை மீரா
ஆர்ஜெ ஆக மஞ்சுவாக ஷாசானா ரோஸ்
இன்ஸ்பெக்டர் ஜெகனாக சுரேஷ்
நரேந்திரன் ஆர்ஜெ ஆக சிவாவாக
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு- ஷா
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – காதல் மதி, ஜீவன் மயில்
எடிட்டிங் – இதிரிஸ்
நடனம் – ரவிதேவ்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – வெங்கட்
தயாரிப்பு நிர்வாகம் – கஞ்சனூர் வெங்கட்
இணை தயாரிப்பு- கே.லட்சுமி காந்த்
லைன் புரொடியூசர்- ஆர்.எம்.பாபு
பி.ஏ.ஜார்ஜ் ரத்தினம்
தயாரிப்பு- ஏ.ஜெ.சுஜித், ஏ.பானு
வசனம் – பாலு
கதை திரைக்கதை இயக்கம் – ஏ.ஜெ.சுஜித்

எஃப் எம்மில் ரேடியோ ஜாக்கியான ப்ரியா (லீஷா) பிரபலமான பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சி தொகுப்பாளர். தனது சகோதரி மற்றும் சகோதரி யின் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ப்ரியா தனது கடைசி நிகழ்ச்சிக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாடு செல்ல உள்ளார். அநாதையாக பிறந்தவன் அன்பான குரலுக்கு ஏங்கும் மார்க் (அசோக்குமார்), ‘பிரியமுடன் ப்ரியா’ நிகழ்ச்சியில் பேசும் ப்ரியாவின் குரலுக்கு தன் மனதை பறிகொடுக்கிறான். அது காதலும் இல்லை, காமமும் இல்லை ஆனால் அந்த குரலுக்கு ஒரு வெறித்தனமான சைக்கோ ரசிகன். ஒரு நாள் அவன் ப்ரியாவின் சகோதரியை வீடு புகுந்து பிணைக் கைதியாக கட்டிப் போடுகிறான். தான் நேசிக்கும் குரலுக்கு சொந்தமான ப்ரியா தனக்கு மட்டுமே நிகழ்ச்சியின் மூலம் தன்னிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று மிரட்டுகிறான். அவன் கூறுவது போல் செயல்பட வாய்ப்பில்லை என்று ப்ரியா கூற, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் அவளது சகோதரியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறான். அந்த சமயத்தில் விஷயம் அறிந்து அவனை பிடிக்க நெருங்கிய போலீசார் இருவரையும் கொன்று விடுகிறான். ஒரு கட்டத்தில் அவனது வெறியாட்டத்தின் மூலம் அவன் அவளது சகோதரியை அடித்து தள்ளி விட அவள் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்குகிறாள். பிரியமுடன் ப்ரியா, தன் சகோதரி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறாள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
எப் ஃஎம்’மில் ஒரு குறிப்பிட்ட ரேடியோ ஜாக்கியான குரலை நேசித்து, அவர் விடைபெறும் போது, தான் நேசித்த அந்த இனிய குரல் இனி கிடைக்காது என அறிந்து, அதுவே சைக்கோ தனமான மனிதனாக மாறும் கதாபாத்திரத்தில் அசோக் மிரட்டலான நடிப்பு வழங்கியுள்ளார்.
பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியில் ரேடியோ ஜாக்கி ப்ரியாவாக லீஷா முக்கிய கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அசோக் மற்றும் லீஷா இருவரும் போட்டி போட்டு சிறப்பான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலுசேர்த்தது போல் இன்னொரு பேசப்பட வேண்டிய சைலண்டான கதாபாத்திரமும் உண்டு. பேசும் திறனற்ற மூத்த குழந்தை ராகினி வீட்டில் சைக்கோ மனிதனிடம் தன் தாய் சிக்கிய பின் அந்த ஆபத்தான சூழலில் இருந்து தன் தங்கையை காப்பாற்ற முயற்சி செய்யும் போது முகபாவங்களில் அற்புதமான நடிப்பின் மூலம் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது பேபி வேதிகா.
எஃப் எம் சேனல் எம்டியாக தலைவாசல் விஜய், இன்ஸ்பெக்டர் ஜெகனாக சுரேஷ்,  புரோக்கராக ஜீவா,  எஸ் ஐ யாக கார்த்திக் யெஸ்கே, ரோகினியாக பேபி மீரா, ஆர்ஜே மஞ்சுவாக ஷாசானா ரோஸ், நரேந்திரன் ஆர்ஜெ சிவாவாக தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து அனைவரும்  கதையோட்டம்   நகர்விற்கு வலு சேர்த்துள்ளனர்.
இது ஸ்ரீகாந்த் தேவாவின் 100-வது படம். காதல் மதி எழுதி பிரேம்ஜி அமரன், ஸ்ரீகாந்த் தேவா பாடிய பிம்பிளிக்கி பிளாப்பி, ஜீவன் மயில் எழுதி ஆதித்யா.ஆர்.கே, பிரியங்கா.என்.கே. பாடிய அகில உலக அழகி, காதல்மதி எழுதி சிவாங்கி பாடிய நைட்டிங்கேல்…நைட்டில் நானே.., ஜீவன் மயில் எழுதி எல்.ஆர்.ஈஸ்வரி – வாணிஜெயராம் பாடிய அதிகாலையிலிருந்து…  வழக்கம் போல் அவரது துள்ளளான இசையில் உற்சாக அதிர்வலைகளை தந்து அவர் எப்போதும் ஜெயிக்கிறோம் என்று கூறுவது போல் பெருமைக்குரிய மூத்த பாடகர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி – வாணிஜெயராம் ஆகியோரின் குரல்களை இவரது 100-வது படத்தில் பாட வைத்த பெருமையை பெற்று வெற்றி கண்டுள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவாளர் ஷாவின் கேமரா கோணங்கள் மற்றும் ஸ்டண்ட்  டேஞ்சர் மணியின் பரபரப்பான கார் சேஸிங் காட்சிகள், எடிட்டர் இதிரிஸின் விறுவிறுப்பான எடிட்டிங் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
அன்புக்கு ஏங்கும் ஒருவன், ஒரு குரல் மூலம் அவனுக்கு அந்த அன்பு  கிடைத்து அதில் அவன் அப்படியே தீவிரமாக மூழ்கி இருக்கும் சமயத்தில் இனி அந்தக் குரலை கேட்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அவன் அந்த குரலை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவன் எடுக்கும் முடிவுகள் அவனை ஒரு சைக்கோவாக மாற்றுவதை திரைக்கதையாக அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.ஜெ.சுஜித்.
மொத்தத்தில் ஏ.ஜெ.சுஜித், ஏ.பானு இணைந்து தயாரித்துள்ள பிரியமுடன் ப்ரியா உணர்வுபூர்வமான சைக்கோ த்ரில்லர்.