பார்ட்னர் திரைப்பட விமர்சனம் : பார்ட்னர் லாஜிக் பார்க்காமல் குடும்பத்துடன் டைம்பாஸ் படமாக பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
329

பார்ட்னர் திரைப்பட விமர்சனம் : பார்ட்னர் லாஜிக் பார்க்காமல் குடும்பத்துடன் டைம்பாஸ் படமாக பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி பினிசெட்டி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ரோபோ சங்கர், முனிஸ்காந்த், ஜான் விஜய், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பாட்னர்’. ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் ஃபார்டுனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூர்யபிரகாஷ் தயாரித்துள்ளார்.மக்கள் தொடர்பு யுவராஜ்.

கிராமத்தில் ஸ்ரீதர் (ஆதி பினிசெட்டி)  கடன் வாங்கி தொடங்கிய இறால் வளர்ப்பு தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் ஃபைனான்சியர் பணம் கேட்டு தகராறு செய்வதுடன் தொழில் செய்வதற்கு பெற்ற கடன் தொகை ரூபாய் 25 லட்சத்ததை ஸ்ரீதர் தனக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது அவரது சகோதரியை தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுகிறார். தனது சகோதரியை உடனடி ஆபத்தில் இருந்து காப்பாற்ற போதுமான பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையில் தனது சொந்த ஊரிலிருந்து தன் நண்பன் கல்யாணை (யோகி பாபு) சந்திக்க சென்னைக்கு வருகிறார் ஸ்ரீதர். கல்யாண் ஐடி அலுவலகம் போல தோற்றமளிக்கும் திருட்டு மற்றும் மோசடி செய்பவர்கள் கூட்டமாக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதன் உரிமையாளர் விக்கிரவாண்டி வைகுண்டத்தின்  (முனிஸ்காந்த்). ஸ்ரீதரின் கடுமையான பணத்தேவைக்கு அவரை அந்த மோசடி நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்துகிறார் கல்யாண். ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் அவருடன் சேர்கிறார். மறுபக்கம் ஒரு விலங்கின் குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகளை மற்றொரு விலங்குக்கு மாற்றக்கூடிய ஒரு முறையை கண்டறிய அவரது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானி (பாண்டியராஜன்) அதில் வெற்றி கண்டு அந்த பார்முலாவை ஒரு சிப்பில் ரகசியமாக வைத்துள்ளார். அதே போல் ஒரு மனிதனின் டிஎன்ஏ வில் இருந்து இன்னொருவருக்கு குணாதிசயங்களை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் விஞ்ஞானி. இந்த கண்டுபிடிப்பை திருடி சர்வதேச சந்தையில் விற்று பெரும் லாபம் சம்பாதிக்க விஞ்ஞானியின் முன்னாள் கூட்டாளியான ஜான் விஜய் (ஜான் விஜய்) திட்டமிடுகிறார். ஆந்த சிப்பைத் திருட, ரோபோ சங்கர் (சமாதானம்), தங்கதுரை (அன்னதானம்), மற்றும் அகஸ்டின் (பிளாக்பெர்ரி) ஆகிய மூன்று காமெடி பீஸ் களை பயன்படுத்தி அந்த முயற்சி தோல்வி அடைகிறது. அதனால், ஜான் விஜய் அந்த பணியை முடிக்க கல்யாணின் நிறுவனத்தை அணுகுகிறார். ஸ்ரீதர் திட்டமிட்டு விக்கிரவாண்டி வைகுண்டத்தை அந்த டிலை ஏற்க விடாமல் திரும்ப அனுப்பி விடுகிறார். தனது சகோதரியின் கட்டாய திருமணத்தை நிறுத்த பணத்தேவையில் இருக்கும் ஸ்ரீதர், ஒரு அந்த மெகா திருட்டை செய்தால், ரூ.50 லட்சம் கிடைக்கும் என கருதி கல்யாணை தன்னுடன் இந்த முயற்சியில் சேரும்படி சம்மதிக்க வைக்கிறார். ஜான் விஜய் அசைன்மென்ட் அவர்களிடம் வருகிறது.  அதற்காக வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை அரசியல்வாதி ரவி மரியாவிடம், தான் வந்து கேட்டால் மட்டுமே தர வேண்டும் என யோகிபாபு கொடுத்து வைக்கிறார். அவர்கள் பார்முலாவை திருடப் போகும் விஞ்ஞானியின் லேபிள் நடக்கும் குளறுபடியால், கல்யாணுக்கு ஊசி ஒன்று குத்தி விடுகிறது. இருவரும் அங்கிருந்து தப்பி விடுகிறார்கள். மறுநாள், ஆணாக இருந்த கல்யாண், கல்யாணியாக (ஹன்சிகா) ஆகிவிடுகிறார். அதன் பின்னர் நடக்கும் களேபரங்கள் தான் பார்ட்னரின் கதையாகும்.
கதையின் நாயகன் ஆதி பினிசெட்டி, இடைவேளை வரை கல்யாணாக வரும் யோகி பாபு, இடைவேளைக்கு பிறகு கல்யாணியாக வரும் ஹன்சிகா, ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், வில்லனாக வரும் ஜான் விஜய், விஞ்ஞானியாக வரும் ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக வரும் பல்லக் லல்வானி, யோகி பாபுவின் காதலியாக வரும் ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆர் விக்கிரவாண்டி வைகுண்டமாக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்கள் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக செய்து பார்வையாளர்களை முடிந்த அளவுக்கு ரசிக்கவும், சிரிக்கவும் வைத்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்களும், ஷபீர் அகமது ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.

அறிவியல் புனை கதைக்களத்தில் லாஜிக் மீரல்களுடன் காதல் மற்றும் காமெடி புகுத்தி, திரைக்கதை அமைத்து எளிமையான பொழுதுபோக்கு சித்திரமாக படைத்துள்ளார் இயக்குனர் மனோஜ் தாமோதரன்.

மொத்தத்தில் ராயல் ஃபார்டுனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூர்யபிரகாஷ் தயாரித்துள்ள பார்ட்னர் லாஜிக் பார்க்காமல் குடும்பத்துடன் டைம்பாஸ் படமாக பார்க்கலாம் ரசிக்கலாம்.