தெய்வ மச்சான் திரைவிமர்சனம்: தெய்வ மச்சான் குடும்பத்துடன் காண வேண்டிய காமெடி கலாட்டா | ரேட்டிங்: 3.5/5

0
371

தெய்வ மச்சான் திரைவிமர்சனம்: தெய்வ மச்சான் குடும்பத்துடன் காண வேண்டிய காமெடி கலாட்டா | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் மற்றும் குழுவினர்
விமல் – கார்த்தி
அனிதா சம்பத் – குங்குமத்தேன்
பாண்டியராஜன் – பரந்தாமன்
பாலசரவணன் – முருகன்
ஆடுகளம் நரேன் – பெரிய ஜாமீன்
வேல ராமமூர்த்தி – சாட்டைக்காரன்
வத்சன் வீரமணி – அழகர்
தீபா சங்கர் – மஞ்சுளா
கிச்சா ரவி – மணி மாமா
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : மார்ட்டின் நிர்மல் குமார்
திரைக்கதை : மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி
எடிட்டிங் : இளையராஜா.எஸ்
ஒளிப்பதிவு : கேமில் ஜே அலெக்ஸ்
பின்னணி இசை – அஜீஷ்
கலை : நித்யா
ஒலி கலவை : டி.உதய் குமார்
தயாரிப்பு நிறுவனம் : உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ்
தயாரிப்பு : உதயகுமார் – கீதா உதயகுமார் மற்றும் எம் பி வீரமணி.
PVR பிக்சர்ஸ் வெளியீடு
மக்கள் தொடர்பு : யுவராஜ்தெய்வ மச்சான் கதை: திண்டுக்கல்லில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கார்த்தி (விமல்)  மின்சாதன பொருட்கள் பழுது நீக்கி சரி பார்க்கும் தொழில் செய்யும் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மூத்த சகோதரர், இளைய சகோதரி குங்குமத்தேன் (அனிதா சம்பத்) மற்றும் தந்தை பரந்தாமன் (பாண்டியராஜன்) கூட்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவரது நண்பன் முருகன் (பால சரவணன்) குடும்பத்தில் ஒருவர் போல் உறுதுணையாக இருக்கிறார். தன் தங்கை குங்குமத்தேனுக்கு (அனிதா சம்பத்) பொருத்தமான வரன் தேடுவது மட்டுமே வாழ்க்கையில் தன் பொறுப்பு என்று நம்புகிறான். இருப்பினும், விஷயங்கள் சரியாக நடக்கும் போது, வெளிப்படையான காரணமின்றி சாத்தியமான திருமண திட்டங்கள் தடைப்படும் போது, கார்த்தி நம்பிக்கையை இழக்க தொடங்குகிறார். ஆனால் கார்த்தி வாழ்க்கையில் அவர் எதிர்பார்க்காத ஒரு சிக்கலை எதிர்கொள்கிறார். அதாவது, கார்த்திக்கு ஒரு தனித்துவமான சூப்பர் பவர் உள்ளது, கார்த்தியின் கனவில் வரும் சில விஷயங்கள் நிகழ்காலத்தில் அப்படியே நடக்கிறது. ஒரு ராட்சத வெள்ளை குதிரையுடன் ஒரு மனிதன் சாட்டைக்காரன் (வேல ராமமூர்த்தி) அவனது கனவில் தோன்றி அவனது அன்புக்குரியவர்களின் மரணத்தை எச்சரித்தவுடன்  அப்படியே நடக்கிறது. இதனிடையே பெரிய ஜமீன் (ஆடுகளம் நரேன்) குடும்பத்திற்கும் கார்த்தியின் குடும்பத்திற்கும் பகை ஏற்படுகிறது. மனம் நொந்து குடும்பமே உட்கார்ந்து இருக்கும் நிலையில்தான் நல்ல சம்பந்தம் ஒன்று தேடி வருகிறது. ஆனால் கார்த்தியின் கனவில் வெள்ளைக் குதிரையுடன் தோன்றும் சாட்டைக்காரன் தங்கச்சி புருஷன் மச்சான் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார். கார்த்தி கதி கலங்கி போய் விடுகிறான். கார்த்தியால் தங்கை புருஷன் உயிரை காப்பாற்ற முடிந்ததா? மச்சானை காப்பாற்றும் கார்த்தியின் முயற்சி என்ன ஆனது? பெரிய ஜமீன் குடும்பத்திற்கும் கார்த்தி குடும்பத்திற்கும் எப்படி பகை ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்குக்கான விடையே படத்தின் மீதிக்கதை!கிராமத்து பின்னணியில் நடக்கும் கதையின் மண் மனம் மாறாமல் கிராமத்து இளைஞனாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து ஜாலியான ஒரு திரைப்படமாக ரசிகர்களுக்கு படைத்துள்ளார் விமல். சமீபத்தில் விமல் தனக்கு தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் பாராட்டக்குரியது.

தங்கை குங்குமத்தேனாக அனிதா சம்பத், தந்தை பரந்தாமனாக பாண்டியராஜன், பெரிய ஜமீனாக ஆடுகளம் நரேன், சாட்டைக்காரனாக வேல ராமமூர்த்தி, அழகராக வத்சன் வீரமணி, மணி மாமாவாக கிச்சா ரவி உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தங்களது கதாபாத்திரத்திற்கு நன்றாகவே நியாயம் செய்து இருக்கிறார்கள்.
அத்தை மஞ்சுளாவாக சிரிப்பு சரவெடி தீபா சங்கர் மற்றும் நண்பன் முருகனாக பாலசரவணனின் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.
கிராமத்து அழகை கண் முன் நிறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.
இளையராஜா படத்தொகுப்பு, இசையமைப்பாளர் காட்வின் ஜே கோடன் மற்றும் அஜீஷின் பின்னணி இசை கிராமிய பின்னணியில் பயணிக்கு ஃபேண்டசி ஜானர் கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
தெய்வ மச்சான் ஒரு அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான பந்தத்தை உன்னதமான பழகிய கதையில் புதுப்புது கருத்துக்களை புகுத்தி காமெடி கலந்து, ஏக்கத்தைத் தூண்டும் சில காட்சிகளுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து அந்த மண்ணுக்கே உரித்தான கலாச்சாரத்தோடு பொழுதுபோக்கு திரைப்படமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மார்ட்டின்.
மொத்தத்தில் உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார் – கீதா உதயகுமார் மற்றும் எம் பி வீரமணி இணைந்து தயாரித்திருக்கும் தெய்வ மச்சான் குடும்பத்துடன் காண வேண்டிய காமெடி கலாட்டா.