தி வாரியர் விமர்சனம்: ‘தி வாரியர்’ இன்றைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் | ரேட்டிங் – 2.25/5

0
518

தி வாரியர் விமர்சனம்: ‘தி வாரியர்’ இன்றைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் | ரேட்டிங் – 2.25/5

நடிகர்கள்: ராம் பொதினேனி, ஆதி பினிஷெட்டி, கிருத்தி ஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா மற்றும் பலர்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: சுஜீத் வாசுதேவ்
கலை : டி ஒய் சத்தியநாராயணா
சண்டை காட்சி : விஜய் மாஸ்டர் அன்பு அறிவு
தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன்
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாஸ் சித்தூரி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : என் லிங்குசாமி
மக்கள் தொடர்பு: சுரேஷ்சந்திரா, ரேகா

சத்யா (ராம் பொதினேனி) தனது தந்தையின் விருப்பத்திறக்காக மருத்துவர் ஆகிறார். எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு, ஹவுஸ் சர்ஜனாக மருத்துவப் பணியைத் தொடங்க மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகச் சேருகிறார். சேரும் நாளில், மதுரையில் பிரபல ரௌடியாக வலம் வரும் குருவின் (ஆதி பினிஷெட்டி) ஆட்கள், சாலையில்; வைத்து ஒருவரை வெட்டிச் சென்று விட, அவரை டாக்டரான சத்யா (ராம் பொத்தினேனி) மருத்துமனைக்கு கொண்டு வந்து காப்பாற்றுகிறார். இதை தெரிந்து கொண்ட குருவின் ஆட்கள் மருத்துவனைக்குள் வைத்தே வெட்டப்பட்டவரை கொன்று விட்டு செல்கின்றனர். ஆதாங்கத்தின் உச்சிக்கு செல்லும் சத்யா, எதிர்த்து கேட்க முயற்சிக்கும் போது மருத்துவமனை டீன் ராபர்ட் (ஜெய பிரகாஷ்) அவரை தடுத்தி நிறுத்தி சத்யாவிடம் குரு (ஆதி பினிஷெட்டி) எவ்வளவு கொடூரமானவர் என்பதை விளக்குகிறார். சத்யா ஒரு உயிரைக் காப்பாற்றினால் மறுபிறவி எடுப்பதாக உணரும் நபர். ஆனால் குருவால் (ஆதி பினிஷெட்டி) தான் காப்பாற்றியவரின் உயிரை ஒரு ரவுடி எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல்; போலீஸில் புகார் அளிக்கிறார். காவல்துறையில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை மாறாக அது அப்படியே குருவிடம் தகவலாக போகிறது. இதனிடையே, சத்யா ரேடியோ ஜாக்கியான விசில் மகாலட்சுமியை (கிருத்தி ஷெட்டி) காதலிக்கிறார். சத்யா பணிபுரியும் மருத்துவமனையில், போலி சலைன் பாட்டில்களால் சில குழந்தைகள் இறக்கின்றனர். சலைன் சப்ளை செய்யும் நிறுவனம் குரு பினாமி என்பதை சத்யா அறிந்து கொள்கிறார். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நிறுவனத்தை மூடுகிறார். இதனால், குரு சத்யாவை சாலையில் வைத்து கொடூரமாக அடித்து தொங்க விடுகிறார். குருவிடம் இருந்து தப்பிய டாக்டர் சத்யா இரண்டு வருடங்களுக்குப் பிறகு மதுரைக்கு டிஎஸ்பியாக வருகிறார். அதன் பிறகு சத்யா என்ன செய்தார்? குருவை எப்படி எதிர்கொண்டார்? குருவை அடக்கினாரா? காவல்துறையை எப்படி மாற்றினார்? டாக்டராக செய்ய முடியாத ஆபரேஷனை போலீஸ்காரராக எப்படி செய்தார்? என்பதே மீதிக்கதை.

டாக்டராக, போலீஸ்காரராக, காதலனாக ராம் பொதினேனி சிறப்பாக நடித்துள்ளார். இரண்டு வேடங்களின் மாறுபாடுகளையும், இரண்டு கெட்அப்களில் உள்ள வித்தியாசத்தையும் மிகச் சிறப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார். நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக செய்துள்ளார்.

விசில் மகாலட்சுமியாக கிருத்தி ஷெட்டி படத்திற்கு அழகு சேர்கிறார்.

வில்லன் கேரக்டருக்கான மாஸ் லுக்கில் ஆதி பினிஷெட்டி மாஸ் நடிப்பில் கொடுரத்தை காட்டி மாஃபியா டான் குருவாக மிரட்டுகிறார்.

சத்யாவின் அம்மாவாக நதியா, ஜெயபிரகாஷ், அக்ஷரா கவுடா ஆகியோரின் வேடங்களும் கதை ஓட்டத்திற்கு உதவுகிறது.

இசை அமைப்பாளர் தேவஸ்ரீ பிரசாத் கவர்ந்தாலும், பின்னணி இசை ஓகே ரகம்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு, ஆக்ஷன் பிரம்மாண்டத்தை அதிரடியாக காட்டுகிறது.

இயக்குனர் லிங்குசாமி எழுதிய கதையில் புதுமை இல்லை வழக்கமான ரவுடி, போலீஸ் கதை. லிங்குசாமி தன் முந்தைய படங்களிலிருந்து பல சீன்களை எடுத்து கோர்வையாக்கி மீண்டும் பழைய கலவையையே கொடுத்து ஏமாற்றி விட்டார். காட்சிகள், வண்ண வண்ண நிற உடைகள், என தெலுங்கு சினிமாவை பிரதிபலித்து ஒட்டுமொத்த படம் தெலுங்கு படம் போன்ற உணர்வே கொடுக்கிறது. குறிப்பாக மதுரைக்கான செட் ரசிகர்களை முட்டாளாக்கி இருக்கிறது. இன்று சினிமா வேறு கட்டத்திற்கு சென்று விட்டது. இன்றைய இளைஞர்களின் நாடித் துடிப்பை யூகிக்க இயக்குநர் லிங்குசாமி தவறவிட்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

மொத்தத்தில், ‘தி வாரியர்’ இன்றைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.