தலைநகரம் 2 சினிமா விமர்சனம் : தலைநகரம் 2  அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
391
தலைநகரம் 2 சினிமா விமர்சனம் : தலைநகரம் 2  அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள்:
சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
கதை, திரைக்கதை, இயக்கம்: துரை வி.இசட்
பேனர்: Right Eye Theatres
தயாரிப்பாளர்கள்: எஸ்.எம்.பிரபாகரன், துரை வி இசட்
இணை தயாரிப்பாளர்: மதுராஜ்
ஒளிப்பதிவு: இ.கிருஷ்ணசாமி
இசை: ஜிப்ரான்
எடிட்டிங்: ஆர்.சுதர்சன்
கலை: ஏ.கே.முத்து
ஸ்டண்ட்: டான் அசோக்
உரையாடல்: மணிஜி
ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம் Mpse
ஒலிக்கலப்பு: ஏ.எம்.ரஹ்மத்துல்லா
ஒலி பொறியாளர்: கே.ஜெகன்
மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்)நஞ்சுண்டா, மாறன் மற்றும் வம்சி ஆகிய மூன்று சக்தி வாய்ந்த கேங்ஸ்டர்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் எப்படி அந்த வரிசையில் மேலே உயர்ந்தார்கள் என்பதைப் பற்றியும் சுருக்கமாக படத்தின் ஆரம்பத்தில் கூறப்படுகிறது. சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என மூன்று பகுதிகளையும் இந்த மூன்று பெரிய ரவுடிகள் கைவசம் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் ஒரு நாள், நஞ்சுண்டாவின் அடியாட்கள் வம்சியுடன் உறவில் இருக்கும் நடிகை சித்தாராவை (பாலக் லால்வானி) கடத்துகிறார்கள். நஞ்சுண்டா சிதாராவை பாலியல் வன்கொடுமை செய்கிறார். தன் வாழ்க்கையை பாழாக்கிய அவர்களை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியில் சித்தாரா வம்சியிடம் கூறுகிறாள். ஆனால் அவனால் பழிவாங்க முடியவில்லை. நஞ்சுண்டாவின் ஆலோசகர், அவரது போட்டி கும்பல் தலைவன் மாறன் மற்றும் வம்சியை  அழிக்க வழிகள் தேடுகிறார்கள், நஞ்சுண்டா தனது போட்டியாளர்களை குழப்புவதற்காக ஒரு புதிய யுக்தியை கையாளுகிறான். அது தான் ரைட்டின் (சுந்தர் சி) என்ட்ரி. ஒரு காலத்தில் பெரிய கேங்ஸ்டராக இருந்த ரைட் (சுந்தர் சி) இப்போது சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் மற்றும்  பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கிறார். அப்போது குண்டர்களின் உதவியாளர் ரைட் (சுந்தர் சி) நாய்க்குட்டியைக் கடத்த முயற்சிக்கிறார். இது அவரை கோபப்படுத்துகிறது. அத்துடன் ரைட்டின்  நெருங்கிய நண்பரான மாணிக் பாய் (தம்பி ராமையா) கருப்புப் பண வழக்கில் சிக்கியதும் புதிய விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ரைட் மாணிக்கைக் காப்பாற்றுகிறார். அதை தொடர்ந்து ஒவ்வொரு வில்லன்களால் ஏற்படும் தொல்லைகளை சந்தித்து அதை கடக்கிறார். ரைட் நஞ்சுண்டா, மாறன் மற்றும் வம்சி என்ற மூன்று வில்லன்களுக்கு முக்கிய எதிரியாக மாறுகிறார். அதன்பிறகு இந்த மூவரையும் எதிர்க்க மீண்டும் பழைய ரைட்டாக களம் இறங்குகிறார். அதன் பின் மூன்று கேங்ஸ்டர்களையும் மற்றும் இந்த குழுவை சேர்ந்த அனைவரையும் ரைட் அழித்தாரா? பாலியல் கொடுமைக்கு ஆளான சித்தாராவின் பழிவாங்கும் திட்டம் எப்படி நிறைவேறியது? போன்ற கேள்விகளுக்கு தலைநகரம் 2 விவரிக்கும்.

தலைநகரம் முதல் பாகத்தில் வட சென்னையின் மிகப் பிரபலமான ரவுடியாக ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுந்தர் சி, இந்தப் படத்தில் இறுக்கமான முகத்தோடு கம்பீரமான நடையுடன் பழைய ரைட்டாக வலம் வர முயற்சித்துள்ளார். ஆனால் தலைநகரம் முதல் பாகத்தில் இருந்த அந்த ரைட்டின் கம்பீரம் இதில் மிஸ்ஸிங். சண்டை காட்சிகளில் அவருடைய உடம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று தோன்றுகிறது.
பல்லக் லால்வானி திரையில் கவர்ச்சியாகவும் அழகாகவும் தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்க்கிறார்.
யதார்த்த நடிகர் தம்பி ராமையா, தம்பிராமையாவின் மகளாக வரும் ஆயிரா, வில்லன்கள் ‘பாகுபலி’ பிரபாகரன், ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ், என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்கள்.
தெறிக்க விட்டிருக்கிற டான் அசோக் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி அற்புதமாக காட்சி படுத்தியுள்ளார். அத்துடன் ஜிப்ரானின் பின்னணி இசையும் ஒன்று சேர்ந்து கேங்ஸ்டர் படத்தின் தரத்தை உயர்த்த முயற்சித்துள்ளது.சுந்தர் சி நடித்து 2006-ல் வெளியான தலைநகரம் (சுராஜ் இயக்கியவர்) திரைப்படத்தின் தொடர்ச்சி. இம்முறை தலைநகரம் 2 தலைப்பில் வழக்கமான கேங்ஸ்டர் ஃபார்முலாவை தான் தேர்தொடுத்து முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் வன்முறையை மட்டும் வைத்து  வி இசட் துரை இயக்கியுள்ளார். திரைக்கதையில் வன்முறை காட்சிகளை அதிகம் புகுத்தி காமெடிக்கு கொஞ்சம் கூட வைக்காமல்;  பாகம் 3 க்கான லீடை மட்டும் வைத்து திரையில் விறுவிறுப்பாக படைக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் வி இசட். துரை. தலைநகரம் முதல் பாகத்தின் அபார வெற்றிக்கு காரணமான வைகைப்புயல் வடிவேலு-சுந்தர் சி காமெடி சீன்ஸ், தலைநகரம் 2 படத்தில் வைகைப்புயல் வடிவேலு இடம் பெற்றிருந்தால் படம் வேற லெவலுக்கு போயிருக்கும்.

மொத்தத்தில்  Right Eye Theatres   பேனரில் எஸ்.எம்.பிரபாகரன், துரை வி.இசட் இணைந்து தயாரித்திருக்கும் தலைநகரம் 2  அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்.