ஜிகிரி தோஸ்து சினிமா விமர்சனம் (Jigiri Dosthu Movie Review) : ஜிகிரி தோஸ்து விறுவிறுப்பு குறைவு | ரேட்டிங்: 2/5

0
194

ஜிகிரி தோஸ்து சினிமா விமர்சனம் : ஜிகிரி தோஸ்து விறுவிறுப்பு குறைவு | ரேட்டிங்: 2/5

நடிகர்கள்:
ஷரீக் (ரிஷி), அரண் வி (விக்கி), ஆஷிக் (லோகி), அம்மு அபிராமி (திவ்யா), பவித்ரா லட்சுமி (சஞ்சனா), சீவம் (அர்ஜுனன்), KYP சரத் (மாரி).
இயக்குனர்: அரண் வி
தயாரிப்பு: லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல், விவிகே என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள்: பிரதீப் ஜோஸ்.கே, அரண் வி
இணை தயாரிப்பாளர்கள் : ஏஸ் பி அர்ஜுனர்,  ஹாக்கா.ஜெ
ஒளிப்பதிவாளர்: ஆர்.வி.சரண்
இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி
படத்தொகுப்பாளர்: அருள் மொழி வர்மன்
சண்டை பயிற்சி : மகேஷ் மாத்யூ
கலை: கிஷோர்
பாடலாசிரியர்: சுதன் பாலா
மக்கள் தொடர்பு:  பி. ஸ்ரீ வெங்கடேஷ்
விக்கி, ரிஷி மற்றும் லோகி ஆகிய மூன்று நண்பர்களுடன் கதை தொடங்குகிறது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ரிஷிக்கு அவனது காதலி திவ்யா (அம்மு அபிராமி) சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அதற்கான ஏற்பாட்டையும் செய்கிறார். மற்றும் நண்பர்கள் விக்கி (அரண் வி) மற்றும் லோகி (ஆஷிக்) நட்பை துண்டிக்க வேண்டும் என்கிறார். விக்கி தான் கண்டுபிடித்த டெரரிஸ்ட் ட்ராக் என கூடிய ஒரு கருவியை கல்லூரியில் பேராசிரியர்கள் முன்னிலையில் விளக்கும் போது அப்போது அந்த கருவி சரியாக இயங்காததால் தோற்றுவிடுகிறார். அந்த வேதனையில் இருக்கும் போது, நண்பர்கள் ரிஷி மற்றும் லோகி கல்லூரிக்கு வருகிறார்கள். அப்போது லோகி நாம் அனைவரும் மகாபலிபுரம் போகலாம் என்று சொல்ல மற்ற நண்பர்கள் வேறு இருப்பதால் அவர்கள் வரவில்லை என்று கூறுகிறார்கள். லோகியின் வற்புறுத்தலின் பேரில் ரிஷியும், விக்கியும் சம்மதம் தெரிவித்து அனைவரும் மகாபலிபுரம் நோக்கி பயணம் செய்கிறார்கள். வழியில் அர்ஜுன் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி கொண்டு போகும் போது, எதிர்பாராத விதமாக, இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று குறுக்கே இடிப்பது போல் நிற்கிறது. அப்போது சிறு வாக்குவாதம் ஏற்படும் போது எதிரில் உள்ள காரில் ஒரு பெண் கடத்தப்படுவதை அறிகிறார்கள். மூன்று நண்பர்களும் ஒன்று கூடி, கடத்தப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.  நண்பர்கள் காரில் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். அப்போது விக்கி கண்டுபிடித்திருக்கும் டெரரிஸ்ட் டிராக்கர் பயன்படுத்தி, அவளை மீட்பதற்கான பணியில் மூவரும் இறங்குகின்றனர், கடத்தல்காரன் அர்ஜுன் போன் பேசுவதை ஒட்டுக் கேட்கின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷரீக் (ரிஷி), அரண் வி (விக்கி), ஆஷிக் (லோகி), அம்மு அபிராமி (திவ்யா), பவித்ரா லட்சுமி (சஞ்சனா), சீவம் (அர்ஜுனன்), KYP சரத் (மாரி) ஆகியோர் நாடகத்தன்மையுடன் நகரும் கதை களத்தில் அவர்கள் நடிப்பு திறன் பெரிய அளவில் எடுபட வில்லை. அம்மு அபிராமியின் பங்கு படத்தில் மிக குறைவே.
ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், இசை – அஸ்வின் விநாயகமூர்த்தி, படத்தொகுப்பு – அருள் மொழி வர்மன், சண்டை பயிற்சி – மகேஷ் மாத்யூ, கலை – கிஷோர், பாடல்கள் – சுதன் பாலா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு விறுவிறுப்பு இல்லாத திரைக்கதையை தூக்கி நிறுத்த முடியவில்லை.
தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் த்ரில்லர் கதைகள் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக காட்சி படுத்தல் மூலம் அந்த த்ரில்லர் கதையை பார்வையாளர்களின் மத்தியில் வெற்றி அடைய செய்ய முடியும். ஜிகிரி தோஸ்து படத்தின் திரைக்கதையில் இயக்குனர் அரண் வி கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் பார்வையாளர்களை கவர்ந்து இருக்கும்.
மொத்தத்தில் லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல், விவிகே என்டர்டெயின்மென்ட்; தயாரித்திருக்கும் ஜிகிரி தோஸ்து விறுவிறுப்பு குறைவு.