சைத்ரா விமர்சனம் : சைத்ரா பேய் பட வரிசையில் புது முயற்சி ஆனால் ஒரு காட்சியில் கூட பயமுறுத்தவில்லை | ரேட்டிங்: 2/5

0
138

சைத்ரா விமர்சனம் : சைத்ரா பேய் பட வரிசையில் புது முயற்சி ஆனால் ஒரு காட்சியில் கூட பயமுறுத்தவில்லை | ரேட்டிங்: 2/5

மார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன் தயாரித்திருக்கும் சைத்ரா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எம். ஜெனித்குமார். படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இதில் யாஷிகா ஆனந்த் (சைத்ரா) அவிதேஜ் (கதிர்) சக்தி மகேந்திரா (திவ்யா), பூஜா (மதுமிதா) கண்ணன் (இன்ஸ்பெக்டர்), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சதீஷ் குமார், இசை – பிரபாகரன் மெய்யப்பன், பாடல்கள் – மணிகண்டன் விஜயலட்சுமி, எடிட்டிங் –  எலிஷா, தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி,இணை தயாரிப்பு – கண்ணன் வரதராஜ்,  மக்கள் தொடர்பு – மணவை புவன்.
ஒரு சாலை விபத்தில் சைத்ராவின் (யாஷிகா ஆனந்த்) தோழி இறந்துவிட்டதால் தோழி தன்னையும் அவளுடன் வரச் சொல்வதாக கூறி அவரும் சாக முயற்சிக்கிறார். மொட்டை மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் சைத்ரா. இதனால் சைத்ராவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால், இதனை சரி செய்ய அவரது கணவர் கதிர் (அவிதேஜ்) அவரை மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். இருப்பினும் சைத்ரா அடிக்கடி மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார். ஒரு நாள் சைத்ராவின் கணவர் கதிர் தன் நண்பன் தோழிக்கு பரிசு வாங்குவதற்கு உதவி செய்ய போகிறார். அப்போது கதிரின் பெண் நண்பர் அவர்கள் வீட்டிற்கு வருகிறார். அதற்கு முன் சைத்ராவை தேடி அவரது தோழியும் அந்த வீட்டிற்கு வருகிறார். அப்போது பல மர்மங்கள் நடக்கிறது. இதனை பார்த்த கதிர் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று கூறி தன் நண்பரிடம் பேயை ஓட்ட மந்திரவாதியை வரச் சொல்கிறார். ஆனால் அந்த நண்பன் கதிர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான். அதை தொடர்ந்து மர்ம கொலைகள் நடக்கிறது. இறுதியில் அவர்கள் எப்படி கொல்லப்படுகிறார்கள்;? அந்த வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறதா? என்பதே சைத்ரா படத்தின் கதை.
நடிகை யாஷிகா தன் கண்களால் யாரையும் பயமுறுத்த முடியவில்லை. கதையே அவரை சுற்றி தான் நகர்கிறது. ஆனால் அவரால் சிறப்பான நடிப்பை வழங்க முடியவில்லை என்பது தான் நிஜம்.
அதே போல அவிதேஜ் (கதிர்) சக்தி மகேந்திரா (திவ்யா), பூஜா (மதுமிதா) கண்ணன் (இன்ஸ்பெக்டர்), ரமணன், லூயிஸ், ஆகியோரின் நடிப்பு நாடகத்தன்மையுடன் இருந்ததால் அவர்கள் நடிப்பு ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆனால் படத்தில் மொசை குட்டியின் நடிப்பு மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுதலையும் பெறுகிறார்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு, பிரபாகரன் மெய்யப்பனின் இசை மற்றும் பின்னணி இசை திகில் படங்களுக்கு ஏற்றபடி எந்த ஒரு காட்சியிலும் திக்திக் ஏற்படுத்த வில்லை.
எலிசாவின் படத்தொகுப்பு தெளிவில்லாத திரைக்கதையை ஓர் அளவுக்கு நகர்த்த முயற்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இதுவரை இறந்து போனவர்கள் பேயாக வேறொரு உடம்புக்குள் புகுந்து பழி வாங்குவார்கள், ஆனால் இந்த படத்தில் இறந்த அவர்கள் தாங்கள் இன்னும் இறக்க வில்லை என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் மனித ரூபத்தில் வந்து பழி வாங்குகிறார்கள். அதே போல அவர்களை நேரில் பார்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள்.  இப்படி ஒரு சுவாரசியம் நிறைந்த கதையை, புதுவிதமாக சொல்ல முயற்சித்துள்ளார் ஜெனீத் குமார். ஆனால் தெளிவில்லாத குழப்பும் திரைக்கதை இந்த புது முயற்சியின் வெற்றிக்கு தடையாக இருக்கிறது. அதேபோல் அனைத்து நடிகர்களிடம் உள்ள நடிப்புத் திறமையை இன்னும் சரியாக வெளிக் கொண்டு வந்திருக்கலாம்.
மொத்தத்தில் மார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன் தயாரித்திருக்கும் சைத்ரா பேய் பட வரிசையில் புது முயற்சி ஆனால் ஒரு காட்சியில் கூட பயமுறுத்தவில்லை.