சூரகன் விமர்சனம் : சூரகன் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர்

0
271

சூரகன் விமர்சனம் : சூரகன் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர்

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் சூரகன் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ் கீதா குமார்.
இதில் கார்த்திகேயன் விநாயகம் – ஈகை வேந்தன், சுபிக்ஷா கிருஷ்ணன் – இலக்கியா, சுரேஷ் மேனன் – தேவராஜ், பாண்டியராஜன் – சிதம்பரம், ரேஷ்மா பசுப்புலேடி – லக்ஷ்மி அக்கா, வின்சென்ட் அசோகன் – சேது, மன்சூர் அலிகான் – மாமாமியா, வினோதினி – சித்திரைச் செல்வி, நிழல்கள் ரவி – வரதராஜன், மிப்புசாமி – பிரபா என்று அனைவரும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- கூடுதல் திரைக்கதை – கார்த்திகேயன், ஒளிப்பதிவு- சதீஷ் கீதா குமார் மற்றும் ஜேசன் வில்லியம்ஸ் ,  இசை – அச்சு ராஜாமணி, பின்னணி இசை – யனமந்திர ராகவ் , பாடல் வரிகள் – கு.கார்த்திக்,  திரவ் , எடிட்டர்: ராம் சுதர்ஷன், கலை இயக்குனர் : தினேஷ் மோகன், நடன இயக்கம் :கலைமாமணி ஸ்ரீதர்,  ஆடை வடிவமைப்பாளர் : கீர்த்திவாசன், ஆக்ஷன்-டேஞ்சர் மணி, பிஆர்ஒ- ஏய்ம் சதீஷ்.
ஈகை வேந்தன் (கார்த்திகேயன்  விநாயகம்) போலீஸ் அதிகாரியாக பணி புரிகிறார். அக்கா (வினோதினி வைத்யநாதன்) மாமா (பாண்டியராஜன்) உடன் இருக்கும் அவர், நடந்த ஒரு விபத்தில் பார்வையில் தலைகீழ் உருவ பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் இவர் ரவுடிகளிடம் சண்டை போட்டு சுடும் போது எதிர்பாராமல் தவறுதலாக ஒரு பெண்ணை சுட்டு விடுகிறார், அந்த பெண் இறந்து விடுகிறாள். இதனால் அவர் வேலையில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஒரு நாள் பைக்கில் செல்லும் போது சாலை ஓரமாக உயிருக்கு போராடும் ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். பெண்ணை பற்றி விசாரிக்கவும் செய்கிறார். உயர் அதிகாரிகள் ஈகை வேந்தனை பார்த்து பணி இடைநீக்கத்தில் இருக்கும் உனக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்த பெண் உயிர் விடும் போது ஈகை வேந்தனை பார்த்து ஏதோ சொல்ல வருகிறார், அந்த பெண்ணும் இறந்து விடுகிறாள். அந்த மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அவர் சந்தேகப்படுகிறார். இறந்த அந்த பெண் நிழல்கள் ரவியின் பேத்தி என்பது தெரிய வருகிறது. ஈகை வேந்தனிடம் தன் பேத்தி இறப்பிற்கு யார் காரணம் என தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்க சொல்கிறார். அதை தொடர்ந்து மற்றொரு பெண் மர்மமான முறையில் இறக்கிறார்.தன் நண்பன் ஒருவன் பணியாற்றும் மதுபான பார் ஒன்றில் இந்தப் பெண் இருந்தது தெரியவர, அவளோடு உடன் இருந்த பெண்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்போது கொடூரமான ஒருவன்; (வின்சென்ட் அசோகன்) காரில் இருந்து பெண்ணை உருட்டி விட்டது தெரிய வருகிறது. அதே போல் இன்னொரு பெண்ணும் அந்தக் கொடூர நபரால் கொல்லப்பட இருப்பதை அறிந்து அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சி ஈடுபடுகிறார். இடைநீக்கம் செய்யப்பட்டு தனிப்பட்ட முறையில் ஈகை வேந்தன்,  விசாரணையில் ஈடுபடும் போது விஐபிகள் சம்பந்தப்பட்ட பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.அது என்ன? தொடர் கொலைக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தான் படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக ஈகை வேந்தன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயன்  விநாயகம் அந்த அளவுக்கு தன் உழைப்பை வழங்கியுள்ளார். அவர் ஒரு தேர்ந்த தற்காப்பு கலைகள் கற்றவர் என்பதால் சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார்.
வித்தியாசமான கெட்டப்பில் வில்லனாக வின்சென்ட் அசோகன், சுபிக்ஷா கிருஷ்ணன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஸ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி உட்பட அனைவரும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மிகவும் சுமாரான  திரைக்கதைக்கு தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களால் முடிந்த உழைப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக எடிட்டர் ராம் சுதர்ஷன் எடிட்டிங்கில் விறுவிறுப்பை கூட்ட திணறுகிறார்.
தேர்ந்தெடுக்கும் கதைகள் வெற்றி பெற வேண்டும் என்றால் விறுவிறுப்பான திரைக்கதையும், காட்சியமைப்பும் தேவை. இந்த இரு முக்கிய அம்சங்களில் இயக்குனர் சதீஷ் கீதா குமார் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் சூரகன் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் தான் என நம்புவோம்.