சித்தா விமர்சனம் : சித்தா அனைவரின் தூக்கத்தை கலைத்து மனதைக் கவரும் குடும்பத் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
322

சித்தா விமர்சனம் : சித்தா அனைவரின் தூக்கத்தை கலைத்து மனதைக் கவரும் குடும்பத் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’.
நடிகர்கள்:
சித்தார்த்
நிமிஷா சஜயன்
அஞ்சலி நாயர்
சஹஷ்ரா ஸ்ரீ
ஆபியா தஸ்னீம்
பாலாஜி

எழுத்து – இயக்கம் :  எஸ்.யு. அருண் குமார்
முகப்பு பாடல் – சந்தோஷ் நாராயணன்
இசை – திபு நைனன் தாமஸ்
பின்னணி இசை – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – பாலாஜி சுப்ரமணியம்
படத்தொகுப்பு – சுரேஷ் ஏ பிரசாத்
கலை இயக்குனர் – சி.எஸ். பாலச்சந்தர்
பாடல் வரிகள் – விவேக், யுகபாரதி ரூ ளு.ரு.அருண் குமார்
ஒலி வடிவமைப்பு – வினோத் தணிகாசலம்
சண்டைப் பயிற்சி – டேஞ்சர் மணி
தயாரிப்பு – சித்தார்த்
மக்கள் தொடர்பு : டிஒன்

பழனி அருகே ஈசு என்கிற ஈஸ்வரன் (சித்தார்த்) சிறுவயதிலேயே குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை. அவரது மூத்த சகோதரரின் திடீர் மரணத்தால் அவருக்கு துப்புரவுத் துறையில் அரசு வேலை கிடைத்து அவரது அண்ணி (அஞ்சலி நாயர்) மற்றும் சுந்தரி என்கிற சேட்டை (சஹஸ்ர ஸ்ரீ), ஆகியோரின் பராமரிப்பாளராக இருக்கிறார். சித்தப்பா ஈஸ்வரன் உண்மையில் சேட்டைக்கு ஒரு தந்தை மாதிரி. அவளைக் குளிப்பாட்டி, தலைமுடியை சீவி, பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் அக்கறையாக பார்த்துக் கொள்கிறார். சமீபத்தில் கணவனை இழந்த அண்ணிக்கும் பேருதவியாக இருக்கிறார். தனது பள்ளித் தோழியும், இப்போது சக ஊழியருமான சக்தி (நிமிஷா சஜயன்) உடனான தொலைந்த காதலை மீண்டும் புதுப்பிக்கிறார் சித்தா. அவர்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ச்சியான கடத்தல்கள் குறிப்பாக சிறுமிகள் மற்றும் கற்பழிப்புகள் அடிக்கடி புகாரளிக்கப்படுகின்றன. இந்நிலையில், தன் அண்ணன் மகளின் பள்ளி தோழி பொன்னியின் (ஆபியா தஸ்னீம்) யாரோ ஒருவர் ஏற்படுத்தும் பாலியல் வன்கொடுமை பாதிப்பால் எதிர்பாராத சூழலால் சித்தப்பா ஈஸ்வரன் மீது அந்தப் பழி விழுந்துவிடுகிறது. அந்தப் பழியிலிருந்து மீண்டும் வரும் நேரத்தில், தன் அண்ணன் மகள் சுந்தரி காணாமல் போகும் சம்பவம் அவரை நிலைகுலையச் செய்கின்றன. சித்தாவும் அவனது நண்பர்களும் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் சேர்ந்து சைக்கோ கொலையாளியைப் பிடிக்க முயல்கின்றனர். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘சித்தா’ படத்தின் மீதிக்கதை.

தன்னுடைய வழக்கமான பாணியை ஓரம் கட்டி விட்டு முற்றிலும் புதிய அவதாரத்தில் சித்தார்த் நடித்துள்ளார். அண்ணன் மகள் சுந்தரி மீது சித்தார்த் வைத்திருக்கும் பாசத்தை உணர்த்தி மிக இயல்பான ஒரு நடுத்தர வர்க்க இளைஞனாக மனதில் ஆழமாக பதியும் வகையில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள் இரண்டு குழந்தை நட்சத்திரங்களான சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம். சிறுவயதில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்குப் பிறகு இந்த இரண்டு குழந்தை நட்சத்திரங்களான அனைத்து உணர்ச்சிகரமான தருணங்களையும் அழகாக முன்வைத்துள்ள காட்சிகளில் நம்மை கலங்க வைக்கின்றனர். குறிப்பாக சஹஸ்ர ஸ்ரீ, பாதிக்கப்பட்டவரின் காயம், பயமுறும் சமயங்களில் ஆழமாக பாதிக்கும் விதத்தில் வெளிப்படுத்துகிறார். சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் ஆகிய இந்த இரண்டு குழந்தைகளும் விருதுக்கு தகுதியான நடிப்பை வழங்கியுள்ளனர். சித்தார்த், சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் இவர்கள் மூவரும் தான் முழுபடத்தையும் தாங்கி பிடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்து வெற்றி பாதையில் பயணிக்க வைத்துள்ளனர்.

அஞ்சலி நாயர், குழந்தையின் தாயாகவும், கணவனை இழந்தவராகவும், தன்னை வெளிப்படுத்தும் பணியை அற்புதமாக செய்துள்ளார்.

நிமிஷா விஜயன், சித்தார்த்தின் நண்பர்களாக வருபவர்கள், பெண் இன்ஸ்பெக்டராக வருபவர் என அனைவரும் அவ்வளவு இயல்பான நடிப்பை வழங்கி வியக்க வைக்கின்றனர்.

திபு நினன் தாமஸின் இசையும் மற்றும் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும்,  சுரேஷ் ஏ பிரசாத்தின் படத்தொகுப்பும், சி.எஸ். பாலச்சந்தரரின் கலை ஆகிய டெக்னிஷியன்கள் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்து படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்திருப்பது காணமுடிகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி ‘சித்தா’ ஒரு திடமான செய்தியுடன், ஸ்கிரிப்ட் குடும்ப உறவுகள், நட்பு மற்றும் காதல் ஆகியவற்றை கலந்து ஒரு பெண் குழந்தைக்கும் அவளது சித்தப்பாவுக்கும் இடையே இருக்கும் அழகான உறவில் எதிர்பாராத சம்பவத்தால் ஏற்படும்; நெருக்கடியின் போது குடும்பத்தினர் பலர் உடைந்து போகும்போது எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை மையமாகக் திரைக்கதை அமைத்து சமூக பொறுப்புள்ள திரைப்படைப்பாக படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.யு.அருண் குமார்.

மொத்தத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள சித்தா அனைவரின் தூக்கத்தை கலைத்து மனதைக் கவரும் குடும்பத் த்ரில்லர்.