சபரி சினிமா விமர்சனம் : சபரி வலு இழந்த ஒரு உளவியல் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
230

நடிகர்கள் :
சஞ்சனாவாக வரலட்சுமி சரத்குமார்
சூர்யாவாக மைம் கோபி
அரவிந்தாக கணேஷ் வெங்கட்ராமன்
ராகுலாக ஷஷாங்க்
ரியாவாக பேபி நிவேக்ஷா
ஏசிபி ரமேஷ் – மதுநந்தன்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பாளர் – மகேந்திர நாத் கோண்ட்லா
இயக்குனர் – அனில் காட்ஸ்
எடிட்டர் – தர்மேந்திர ககரலா
இசை – கோபி சுந்தர்
ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவ்
மக்கள் தொடர்பு – டிஒன்

சபரியின் கதை ஒரு ஒற்றைத் தாய் சஞ்சனா (வரலட்சுமி சரத்குமார்) தன் சுய மரியாதைக்காக எல்லா முரண்பாடுகளுக்கு எதிராக தனித்து தன் மகள் ரியாவை (பேபி நிவேக்ஷா) வளர்க்க போராடுவதோடு, தன் மகளைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்கிறாள்.சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால், தாய் பாசத்திற்காக ஏங்கி தவிக்கிறார் சஞ்சனா (வரலட்சுமி சரத்குமார்). காலப்போக்கில் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து மும்பையில் வசிக்கிறார். இவர்களுக்கு பெண் குழந்தை ரியா (பேபி நிவேக்ஷா) பிறக்கிறது. வருடங்கள் செல்ல, கணேஷ் வெங்கட்ராமன் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது வரலக்ஷ்மி நேரில் காண்கிறாள். இதனால், இருவரும் பிரிந்து விடுகிறார்கள். சஞ்சனா மும்பையில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவங்களைத் தொடர்ந்து தனது மகள் ரியாவுடன் (பேபி நிவேக்ஷா) விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். சஞ்சனா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவள், அதனால் அவளுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிறது. சஞ்சனா தனது வழக்கறிஞர் நண்பர் ராகுல் (ஷஷாங்க்) உதவியுடன் ஒரு வேலையைப் பெறுகிறார், ஆனால், ரியாவின் உயிருக்கு ஆபத்து என்று தெரிய வருவதால் அவளுக்கு மேலும் சிக்கல் காத்திருக்கிறது. அதாவது மனநல காப்பகத்தில் இருந்து தப்பிக்கும் சூர்யா (மைம் கோபி) குழந்தை ரியாவை தேடி அலைந்து திரிந்து கடைசியாக விசாகப்பட்டினத்திற்கு வந்து ரியாவை கடத்த முற்படும் போது சஞ்சனா மற்றும் ரியாவின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதுடன் அவளுடைய கணவர் அரவிந்த் (கணேஷ் வெங்கட்ராம்), அவளுடைய நண்பர், வழக்கறிஞர் ராகுல் (சஷாங்க் சித்தம்செட்டி), ஏசிபி ரமேஷ் (மதுநந்தன்), சைக்கோ சூர்யா (மைம் கோபி) ஆகியோர் எப்படி இணைக்கப்படுகிறார்கள் என்பதே மீதிக்கதை.

வரலட்சுமி சரத்குமார், சஞ்சனா கதாபாத்திரத்தில் மகளின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படும் ஒரு தாயாக தனித்து போராடுவதோடு, தன் மகளைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவள் என்பதை நேர்த்தியான நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார்.

சூர்யாவாக மைம் கோபி, அரவிந்தாக கணேஷ் வெங்கட்ராமன், ராகுலாக சஷாங்க், ரியாவாக பேபி நிவேக்ஷா, ஏசிபி ரமேஷாக  மதுநந்தன் ஆகியோர் முடிந்த அளவு நடிப்பை வழங்கி உள்ளனர்.

கோபி சுந்தர் இசை மற்றும் பின்னணி இசையும் பெரிதாக இல்லை. ராகுல் ஸ்ரீவஸ்தவ் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. எடிட்டர்  தர்மேந்திர ககரலா இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடிட் செய்து இருக்கலாம்.

இயக்குனர் அனில் காட்ஸ் ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள மாறாத பிணைப்பைக் தேர்ந்தெடுத்து அதை ஒரு சுவாரசியமான கதையை தன்னால் இயன்றவரை சொல்ல முயற்சி செய்துள்ளார். திரைக்கதையில் அவர் கூடுதல் அக்கறை எடுத்திருந்தால், ரிசல்ட் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்திருக்கும் சபரி வலு இழந்த ஒரு உளவியல் த்ரில்லர்.