குரங்கு பெடல் விமர்சனம் : குரங்கு பெடல் அனைவருக்கும் இது ஒரு அற்புதமான மலரும் நினைவுகள் | ரேட்டிங்: 3.5/5

0
317

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கமலக்கண்ணன்.

இதில் காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரதீஷ், பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பு-சஞ்சய் ஜெயகுமார், கலையரசு, இசை-ஜிப்ரான் வைபோதா, ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பி. ஜெயரூபன், ஒளிப்பதிவு-சுமீ பாஸ்கரன், எடிட்டர்-சிவநந்தீஸ்வரன், திரைக்கதை-கமலக்கண்ணன், பிரபாகர் சண்முகம், வசனம் -பிரபாகர் சண்முகம், பாடல்கள்-இயக்குனர் பிரம்மா, போ.மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார், கலை- சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி, குழந்தைகள் நடிப்பு பயிற்சி- நந்தகுமார், கலரிஸ்ட்-பாலாஜி, படக்கலவை-சிவகுமார், டிசைன்ஸ்- லோகேஷ் கந்தசாமி, பி ஆர் ஒ  – சுரேஷ்சந்திரா டிஒன்.

1980 களின் காலகட்டத்தில் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரை ஒட்டியிருக்கும் கொமராபாளையத்தில் உள்ள கத்தேரி கிராமத்தில் நெசவு தொழிலாளி கந்தசாமி (காளி வெங்கட்) மனைவி, திருமணமான மகள், மகன் என்று அளவான குடும்பம். கந்தசாமிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதால் அவரை ஊர் மக்கள் ‘நடராஜா சர்வீஸ்’ என்று பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள். கந்தசாமியின் மகன் மாரியப்பனுக்கு (சந்தோஷ் வேல்முருகன்) ஊர் மக்கள் தன் தந்தையை பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது பிடிக்காது. இந்நிலையில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட, கந்தசாமியின் மகன் மாரியப்பன் (சந்தோஷ் வேல்முருகன்) தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்கிறான். அந்த கிராமத்தில் ஒரே ஒரு சைக்கிள் வாடகைக் கடை உள்ளது, கிராமத்தில் மிலிட்டரி (பிரசன்னா) என மக்கள் அழைக்கும் நபர் மட்டுமே வாடகை சைக்கிள் கடை வைத்திருக்கிறார். மாரியப்பன் தனது தந்தை கந்தசாமிக்கு தெரியாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்வதற்காக வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் அளவுக்குச் செல்கிறார். அவர் தனது சைக்கிள் ஓட்டும் திறமையை தனது நண்பர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக மட்டும் அல்லாமல், அவரை ஊர் மக்கள் தன் அப்பாவை ‘நடராஜா சர்வீஸ்’ என்று பட்ட பெயர் வைத்து அழைப்பதை நிறுத்தி தன் அப்பாவின் பெயரை காப்பாற்றவும் இதைச் செய்கிறான். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் அவர்களின் கேங்கில், வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த நீதி மாணிக்கம் (ராகவன்) புது சைக்கிள் வாங்கிவிடுகிறான். இந்நிலையில் மாரியப்பனுக்கும் நீதி மாணிக்கத்துக்கும் சண்டை வர, யார் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற போட்டி ஏற்படுகிறது. மாரியப்பன் மட்டும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து தனியாக ஒட்ட முயற்சி செய்கிறான். முதலில் இரண்டு பெடல்களின் நடுவே காலை வைத்து ஒட்டும் குரங்கு பெடல் மிதித்து நன்றாக ஒட்ட கற்றுக்கொள்கிறான். ஒரு நாள் வாடகை சைக்கிளை திருப்பி தரும் நேரம் முடிந்து விட அதற்கான காசு புரட்டுவதற்கு பல முயற்சிகள் செய்கிறான். வீட்டை விட்டு வெளியே செல்லும் மகன் திரும்பி வராததால், மிலிட்டரியின் சைக்கிள் திரும்பி வராததால் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்படுகிறது. அனைவரும் சேர்ந்து மாரியப்பனை தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் ரதீஷ், பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் கிராமத்து மண் மனம் மாறாமல் உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் ஒன்று சேர்த்து யதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் இவர்கள் அனைவரும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக  ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலசந்திரன் காம்போ பிரமாதம்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜிப்ரான் வைபோதா, ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பி. ஜெயரூபன், ஒளிப்பதிவு-சுமீ பாஸ்கரன், எடிட்டர்-சிவநந்தீஸ்வரன், வசனம் -பிரபாகர் சண்முகம், பாடல்கள்-இயக்குனர் பிரம்மா, போ.மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார், கலை- சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி, குழந்தைகள் நடிப்பு பயிற்சி- நந்தகுமார், கலரிஸ்ட்-பாலாஜி, படக்கலவை-சிவகுமார், டிசைன்ஸ்- லோகேஷ் கந்தசாமி, ஆகியோர் தொழில்நுட்பத்தில் குறையேதும் இல்லாமல் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர பெரும் பங்களிப்பு அளித்துள்ளனர். குறிப்பாக கலை இயக்குனர் சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி ஆகியோரின் அற்புதமான உழைப்பு தனியாக தெரிகிறது.

இயக்குநரும் எழுத்தாளருமான ராசி.அழகப்பன் எழுதிய “சைக்கிள்” என்ற சிறுகதையை மையமாக வைத்து ஐந்து சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக முன் வைத்து திரைக்கதை அமைத்து நுணுக்கமான பாத்திர சித்தரிப்புடன் உருவாக்கியுள்ளார் இயக்குனர் கமலக்கண்ணன்.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள குரங்கு பெடல் அனைவருக்கும் இது ஒரு மலரும் நினைவுகள்.