எங்க வீட்ல பார்ட்டி சினிமா விமர்சனம் : எங்க வீட்ல பார்ட்டி இன்றைய இளைஞர்களின் லூட்டி கலந்த மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்

0
157

எங்க வீட்ல பார்ட்டி சினிமா விமர்சனம் : எங்க வீட்ல பார்ட்டி இன்றைய இளைஞர்களின் லூட்டி கலந்த மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்

ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன் சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் எங்க வீட்ல பார்ட்டி.
நடிகர்கள் :
சிவப்பிரகாஷ், யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன்.​
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு -ஆர்.பாலா இசை-வி.கோபி ஸ்ரீ
பின்னணி இசை – சுரேஷ் சர்மா
பாடல்கள்- சுரேஷ் நாராயணன், தளபதி ராம்குமார்
எடிட்டிங் – பாலாஜி
நடனம் – ஆர்.கே சரவணன்
இணை தயாரிப்பு – சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார்
தயாரிப்பு – சிவபிரகாஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.சுரேஷ் கண்ணா
மக்கள் தொடர்பு – வெங்கட்
ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த முகநூல் நண்பர்கள், ஒரு வருட முகநூல் நட்பை பகிர்ந்து கொண்டாடும் விதமாக அவர்கள் அனைவரும் நண்பர் ஒருவர் வீட்டில் சரக்கு பார்ட்டியுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாடுகிறார்கள். பார்ட்டி முடியும் போது இரவு நேரம் ஆகி விடுகிறது. நான்கு நண்பர்கள் உடன் வந்த நண்பர் வீட்டில் இரவு தங்க முடிவு செய்து நண்பனின் காரில் ஏறும் போது, பார்ட்டிக்கு வந்த தோழிகள் இரவு வீட்டுக்கு செல்ல பஸ் இல்லாததால், உடன் வந்த ஐந்து நண்பர்களுடன் தங்க இருவரும் செல்கிறார்கள். மறுநாள் காலை விடியும் போது நண்பன் ஒருவன் குளியல் அறைக்கு செல்லும் போது அங்கு தோழி ஒருத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். உடனே பார்த்த சம்பவத்தை மற்ற நண்பர்களுடன் தெரிவிக்கிறான். அதிர்ச்சியில் இருக்கும் 5 நண்பர்களும் ஒருவரை ஒருவர் கொலை செய்ததாக சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள். இந்நிலையில் கண்விழித்த மற்றொரு தோழி குளியல் அறையில் தன்னுடன் வந்த தோழி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுகிறாள்.அதன் பின் அவள் ஐந்து பேரையும் பார்த்து உங்களில் யார் கொலை செய்தது என்று சத்தம் போட்டு போலீசுக்கு தகவல் சொல்லலாம் என்கிறாள். நண்பர்கள் ஐந்து பேரும் போலீஸக்கு போனால் அனைவரும் மாட்டுவோம் என்று கூறுகிறார்கள். அதனால் எப்படியாவது சடலத்தை அப்புறப்படுத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவளை யார் எதற்காக கொலை செய்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு எங்க வீட்ல பார்ட்டி பதில் சொல்லும்.
துப்பறியும் போலீஸ் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் மற்றும் இளைஞர்கள் புதுமுக நடிகர்கள் யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் என்ற பெயரில் குடியும் கும்மாளமும் காலத்தையும் நேரத்தையும் சரியான பாதைக்கு செல்லும் வகையில் பயன் படுத்தாமல் எப்படி சீரழிகிறார்கள் என்பதை தாங்கள் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி துடிப்பான நடிப்பு வழங்க முயற்சித்துள்ளார்கள்.
சுரேஷ் நாராயணன், தளபதி ராம்குமார் பாடல் வரிகளுக்கு வி.கோபி ஸ்ரீ இசை மற்றும் சுரேஷ் சர்மாவின் பின்னணி இசை ஓகே.
பெரும்பகுதி காட்சிகள் வீட்டுக்குள்ளேயே நகர்கிறது. இரண்டு அறை மற்றும் ஒரு குளியல் அறை, இவைகளைக் கொண்டு 90 சதவீதம் கதை நகர்த்தும் சவாலான பணியை முடிந்த அளவுக்கு கதைக்கு தேவையான காட்சி கோணத்தில் திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.பாலா
சிறப்பான எடிட்டிங் மூலம் இன்னும் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம் எடிட்டர் பாலாஜி.
முகநூல் மற்றும் அனைத்து சமூக வலைதளங்களால் பல நன்மை தரும் வகையில் பயன்படுத்த உதவும். அதே போல் தவறாக பயன்படுத்தினால் சீர் அழிந்து போகவும் முடியும். அந்த வகையில் நட்பு என்ற பெயரில் இன்றைய இளைஞர்களின் சீர் அழிக்கும் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கை பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு படைத்திருக்கிறார் இயக்குனர் கே.சுரேஷ் கண்ணா. திரைக்கதையில் கூடுதலாக கவனம் செலுத்தி விறுவிறுப்பாக படைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன் சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ள எங்க வீட்ல பார்ட்டி இன்றைய இளைஞர்களின் லூட்டி கலந்த மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்.