ஆர் யூ ஓகே பேபி சினிமா விமர்சனம் : ஆர் யூ ஓகே பேபி தத்தெடுக்கும் நினைக்கும் தம்பதிகள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான படம் | ரேட்டிங்: 3/5

0
368

ஆர் யூ ஓகே பேபி சினிமா விமர்சனம் : ஆர் யூ ஓகே பேபி தத்தெடுக்கும் நினைக்கும் தம்பதிகள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான படம் | ரேட்டிங்: 3/5

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்குனர் விஜய் வழங்கும் ஆர் யூ ஓகே பேபி திரைப்படம்.
நடிகர்கள்
சமுத்திரக்கனி
அபிராமி
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
மிஸ்கின்
ஆடுகளம் நரேன்
பாவல் நவநீதன்
முல்லையரசி
ரோபோ சங்கர்
அசோக்
அனுபமா குமார்
வினோதினி வைத்தியநாதன்,
தொழில்நுட்ப வல்லுநர்கள்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்
டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இசை: ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா
ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர் டி.எஸ்
எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார்
ஆடியோகிராபி: தபஸ் நாயக்
வண்ணம்: ராஜசேகரன் கே.எஸ்
ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் கே விஜய் பாண்டி – தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு
மக்கள் தொடர்பு AIM

கேரளாவில் வாழும் வித்யா (அபிராமி) மற்றும் பாலன் (சமுத்திரக்கனி) தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. அதே நேரத்தில் சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் ஷோபா (முல்லையரசி) மற்றும் அசோக். ஷோபா ஐந்தாவது முறையாக கருவை கலைக்க ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது, கருவுற்று நான்கு மாதம் ஆகிவிட்டது கருவை கலைக்க முடியாது என்று கூறுகிறார்கள். தன் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க வகை தேடியும் முடியாமல் அதை என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கும் அந்த ஷோபாவிடம் அங்கே வேலை பார்க்கும் நர்ஸ் வினோதினி வைத்தியநாதன் ஏற்கனவே முல்லையரசிக்கு தெரிந்தவள் என்பதால் அவளின் அந்த சூழலையும் அவளின் வறுமை  நிலைமையையும் அறிந்து, அவளிடம் உன்னால் இச்சூழலில் குழந்தையை பெற்று சரியாக வளர்க்க முடியாது, ஆதனால் அந்த குழந்தையை தத்து கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று கூறுகிறாள். லிவிங் டு கெதர் வாழும் ஷோபா மற்றும் அசோக் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வினோதினி வைத்தியநாதன் மூலம் இந்த குழந்தையை, கேரளாவில் வாழும் வித்யா (அபிராமி) மற்றும் பாலன் (சமுத்திரக்கனி) தம்பதிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்துக் கொடுக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டு தத்து கொடுத்து விடுகிறார்கள். வருடம் குழந்தை பாக்கியம் இல்லாத வருத்தத்தை இந்த குழந்தை நிவர்த்தி செய்த சந்தோசத்தில் குழந்தைக்கு தேவையான அனைத்தும் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதே வேளையில் ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த ஷோபாவுக்கு தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக மிஷ்கினையும், நீதிமன்றத்தையும் அணுகுகிறார். அதற்கான முயற்சிகள் பல செய்து பார்த்து கடைசியாக குடும்ப பிரச்சனைகளுக்கு தனது “சொல்லாததும் உண்மை”  என்ற தொலைக்காட்சி லைவ் ஷோ மூலம் நியாயம் வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அணுகுகிறார். “சொல்லாததும் உண்மை” என்கிற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முல்லையரசி, தன்னுடைய குழந்தையை யாரோ பணம் கொடுத்து பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனது குழந்தையை தனக்கு மீட்டுத் தர வேண்டும் என்றும் அந்த கோரிக்கை வைக்கிறாள். இந்த குழந்தையின் தாயை வைத்து நிகழ்ச்சியை மிக எமோஷனலாக கொண்டு செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண அந்த ஷோபாவின் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் கேரளாவில் வாழும் வித்யா மற்றும் பாலன் தம்பதியருக்கு நிகழ்ச்சியில் இருந்து போன் செய்கிறார்கள்.  அவர்களிடம் போன் செய்து பேசும் லஷ்மி ராமகிருஷ்ணன், நீங்கள் முறையான வகையில் தத்து எடுக்காததால் குழந்தையை  நீங்கள் அந்த இளம்பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே வேளையில் காவல்துறை இந்த விஷயத்தை குழந்தை கடத்தல் என்று பதிவு செய்து விசாரிக்கிறார்கள். காவல் துறை குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது  வழக்கு பதிவு செய்து, குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பாகத்தில் சேர்த்து விடுகிறது. நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி கையாளுகிறது? குழந்தைகள் தத்தெடுக்கும் பொழுதும் தத்தெடுத்த பின்னர் ஏற்படும்  சட்ட ரீதியான பிரச்சனைகள் என்ன? இந்தச் சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது? மீடியாக்கள் அதை எந்தக் கண்ணோட்டத்தோடு கொண்டு போறாங்க..? காப்பாகத்தில் செர்க்கப்பட்ட குழந்தையின் நிலை என்ன? கேரள தம்பதிகளுக்கு குழந்தை கிடைத்ததா? அல்லது பெற்ற தாய்க்கு மீண்டும் குழந்தை கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு ஆர் யூ ஓகே பேபி பதில் சொல்லும்.
குழந்தையை தத்து கொடுத்துவிட்டு தவிக்கும் ஷோபா கதாபாத்திரத்தில் முல்லையரசி உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார்.
சமுத்திரக்கனியும் சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆதரவற்ற தந்தையாக சமுத்திரக்கனி, வளர்ப்பு தாயின் பாசப்போராட்டத்தை அபிராமி, ஜோடியின் நடிப்பு தத்ருபமாக வும் அற்புதமாகவும் திரையில் காண்பித்துள்ளனர். அபிராமி ஒரு சில காட்சியில் கண்கலங்க வைக்கிறார். குறிப்பாக நீதிமன்றத்தில் முல்லையரசி மற்றும் அபிராமியின் நடிப்பு ஒருவித நம்பகத்தன்மையை சேர்க்கிறது.
லஷ்மி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி அப்படியே தன் படத்தில் ‘சொல்லாததும் உண்மை’ என்கிற பெயரில் எந்த ஒரு சமரசம் இல்லாமல் இக்கதையில் அற்புதமாக பிரதிபலிக்கிறார்.
பாவல் நவகீதன், வினோதினி வைத்தியநாதன், மிஸ்கின், அனுபமா குமார், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், அசோக், உதய் மகேஷ் என அனைவரும் அந்த அந்த கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இளையராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அவரின் பின்னணி இசை கதையோடு நம்மை ஒன்ற வைத்துள்ளது.
கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு மற்றும் சி.எஸ்.பிரேம்குமார் படத்தொகுப்பு விறுவிறுப்பான திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
நிஜ வாழ்க்கை கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு, தத்தெடுப்பு பற்றி இதயத்தைத் துளைக்கும் கதையின் அடிப்படையில், வளர்ப்பு பெற்றோர் மற்றும் உயிரியல் தாய், இந்த இரண்டு தாய்மார்கள் ஒருவருக்கொருவர் குழந்தைக்காக போராடும் போது அதனால் ஏற்படும் சட்டப் போராட்டத்தையும், ஊடகத் தலையீட்டால் சட்டரீதியான விளைவுகளுக்கு சிக்கலை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன். முறையான வகையில் குழந்தை தத்தெடுக்கும் பொழுதும், தத்தெடுத்த பின்னர் ஏற்படும் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை பற்றி தற்பொழுது உள்ள சமூகத்திற்கு திறம்பட சுட்டிக்காட்டியுள்ளார். அதே போல் டிஆர்பி ரேட்டிங் கிக்காகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பாவிகளின் நிலைமையை, பணம் பார்ப்பதற்காக அவர்களின் உணர்வுகளை பயன்படுத்தி அறம் தவறும் தொலைக்காட்சிகளையும் தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டி சாடியிருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரித்துள்ள ஆர் யூ ஓகே பேபி தத்தெடுக்கும் நினைக்கும் தம்பதிகள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான படம்.