அங்காரகன் திரைப்பட விமர்சனம் : அங்காரகன் ஏமாற்றமே ​| ரேட்டிங்: 2/5

0
237

அங்காரகன் திரைப்பட விமர்சனம் : அங்காரகன் ஏமாற்றமே | ரேட்டிங்: 2/5

ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. சத்யராஜ், ஸ்ரீபதி, நியா, மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர் விவரம் :
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் : மோகன் டச்சு
திரைக்கதை மற்றும்  இயக்கம் (கிரியேடிவ்) ஸ்ரீபதி
ஒளிப்பதிவாளர் (2வது) – மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன்
வசனம் – கருந்தேள் நாகராஜ்
படத்தொகுப்பு –  மதுரை வளர் பாண்டியன்
சண்டை காட்சிகள் – ஜாக்கி ஜான்சன்
நடனம் – வாசு நவநீதன்
கலை இயக்குனர் – கே மாதவன்
நிர்வாக தயாரிப்பாளர் – கிறிஸ்டி
தயாரிப்பு வடிவமைப்பு – விவேக்
மக்கள் தொடர்பு – A.ஜான்

1900 வருடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறிஞ்சி மலையில் அங்காரகன் தலைமையில் பழங்குடியின மக்கள் இயற்கை வளங்களை பாதுகாத்து வந்தனர். குறிஞ்சி மலைக் காட்டுப் பகுதியில் வாழும் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பயப்படாமல் அவர்களை எதிர்த்து அவர்களை ஊருக்கு வர விடாமல் விரட்டுகின்றனர். இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெருத்த நஷ்டங்களும் ஏற்படுகிறது. இந்த மக்களை கட்டுப்படுத்தவும், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணி ரெனிடா மார்ட்டின் அந்த குறிஞ்சி மலை கிராமத்திற்கு வருகிறார். ராணி ரெனிடா மார்ட்டின் சூழ்ச்சியை அறியாத அங்காரகன் தலைமையில் கூடும் கிராம மக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த ராணி எரிக்கப்படுகிறார். இந்நிலையில் 2023 காலகட்டத்தில் குறிஞ்சி மலையில் அந்த ராணி வாழ்ந்த கட்டிடத்தை ஒரு ரெஸார்ட் ஆக மாற்றி, அதனை ஒரு குடும்பம் நடத்தி கொண்டு வருகிறது. தற்போது வாடிக்கையாளர் யாருமின்றி  மூடும் நிலைக்கு செல்கிறது. அதற்கு மேனேஜர் பொறுப்பு ஏற்று நிர்வகிக்கிறார்  சிவா (மகேஷ்). சில வாடிக்கையாளர்கள் வருகின்றனர். கொண்டாட்டம் ஒன்றுக்காக மூடப்பட்டிருந்த ராணி அறை திறக்கப்படுகிறது. அதன் பிறகு அமானுஷ்யங்கள் நடக்கின்றது.
அப்போது மர்மமான முறையில் இரண்டு பெண்கள் காணாமல் போகின்றனர். அதை விசாரிக்க அதிவீரபாண்டியன் (சத்யராஜ்) வருகிறார். இறுதியில் எதிர்பாராத திருப்பம் நடைபெறுகிறது. கடைசியில் அந்த பெண்களை சத்யராஜ் தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? அந்த எதிர்பாராத திருப்பம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் படத்தில் இருக்கார் ஆனால் இல்லை என்பது போல் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவரது பங்களிப்பு இந்த படத்தில் வேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபதி, நியா, அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் தெளிவு மற்றும் விறுவிறுப்பு இல்லாத கதைகளத்தில் அவர்கள் நடிப்பு நாடகத்தன்மையாக இருந்தது.

படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு பெருசா ஒன்றும் இல்லை. அதற்கு காரணம் மோசமான திரைக்கதை.

மலைப்பகுதி ஹோட்டல் ரிசார்ட் கதை என்றாலே திகில் கலந்த திரில் அனுபவத்தை தரும். ஆனால் மோகன் டச்சு மற்றும் ஸ்ரீபதி இருவரும் சேர்ந்து, காதல், கள்ளக்காதல், ஆவிகள், அமானுஷ்ய சக்திகள், பீரியாடிக் கதை என  அனைத்தையும் ஒன்றிணைத்து தடுமாற்றத்துடன் தெளிவில்லாமல் திரைக்கதையை அமைத்து பார்வையாளர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளனர்.

மொத்தத்தில் ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் தயாரித்துள்ள அங்காரகன் ஏமாற்றமே.