Netflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்!

0
8

Netflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்!

மனிதனின் அக உணர்வுகளை முன்னிறுத்தி சொல்லப்படும், 9 வெவ்வேறு வித்தியாசமான கதைகள் அடங்கிய, ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தை, சமீபத்தில் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழில் உருவாகியிருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை, மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு 9 வித்தியாசமான கதைகளங்களுல், இது வரை பார்த்திராத கோணத்தில், அழகான கதைகளை சொல்கிறது. இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் கதையின் ஆழத்தை வெளிபடுத்துவதில், கதை சொல்லலின் அடுத்த நிலைக்கு இப்படத்தை எடுத்து செல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

“நவரசா” திரைப்படத்தில் 9 கதைகளிலும் பெண் கதாப்பத்திரங்கள் ஆச்சர்யப்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

எதிரி (கருணை) கதையில் ரேவதி கதாப்பாத்திரமான “சாவித்திரி”

“சாவித்திரி” பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் முதிர்வு பெற்று காட்சிக்கு காட்சி மாறிக்கொண்டிருக்கும், ரசிகர்கள் பார்க்க ஏங்கும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். சாவித்திரி ஒரு மங்களகரமான பக்தி கொண்ட பெண் கதாப்பாத்திரம். படத்தில் துக்கத்திற்கும் அறத்திற்கும் இடையில் தவித்து, சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பாத்திரம் ஆகும்.

இண்மை ( பயம் ) கதையில் பார்வதி கதாப்பாத்திரமான “வஹிதா’

நடிகை பார்வதி இந்திய சினிமாவில் பல மாறுபட்ட துணிச்சலான பாத்திரங்களில் நடித்தன் மூலம், உலக அளவில் புகழை குவித்தவர். இப்படத்தில் ஒரு எளிமையான குடும்பத்திலிருந்து வந்து, பணத்திற்காககவும் சொத்திற்காகவும், வயதான பணக்காரரை திருமணம் செய்து கொண்ட பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல உண்மைகளைக் தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கை அவரது செயல்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

கிடார் கம்பி மெலே நின்று (காதல்) கதையில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாப்பாத்திரமான “நேத்ரா”

நேத்ரா ஒரு மிகச்சிறந்த பாடகி நவநாகரீக பெண். தனக்கு சரியென பட்டதை துணிந்து செய்யும் கதாப்பாத்திரம். தனக்கு வேண்டியதை தேடி அடையும் பெண். சுந்தந்திரமாக இயங்கும் அனைவரும் விரும்பும் மாடர்ன் பெண்.

பாயாசம் (வெறுப்பு) கதையில் அதிதி பாலன் கதாப்பாத்திரமான “பாக்யலட்சுமி”

மிக இளம் வயதில் விதவையானதால், சமூகம் அவளிடம் பாராபட்ச காட்டும் நடவடிக்கைகளால், மனதளவில் அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண். அவள் நேர்மறை எண்ணங்களால், அவள் முன் உள்ள தடைகளை கடந்து, நம் அனைவருக்கும் முன்னுதாரண பெண்ணாக, நம் கண்களில் நீர் பொங்கும் கடின வாழ்க்கையை கடந்து, சாதித்து காட்டும் “பாக்யலட்சுமி” கதாப்பாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார்.

பாயாசம் (வெறுப்பு) கதையில் ரோகிணி கதாப்பாத்திரமான “வாலம்பா”

இறந்த முதிய கணவனான சமந்து உடைய மனைவி கதப்பாத்திரம் தான் வாலம்பா. அறத்தின்நெறியில் நின்று வாழும் பெண். சரி தவறுகளை தன் வாழ்வில் தான் நம்பும் அறத்தின் வழி முடிவு செய்யும் பெண். இந்த கதாப்பாத்திரத்தில் ரோகிணி நடித்துள்ளார்.

ரௌத்திரம் ( கோபம் ) கதையில் ரித்விகா கதாப்பாத்திரமான “அன்புக்கரசி”

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் அட்டகாச நடிப்பை தந்த ரித்விகா, இக்கதையில் “அன்புக்கரசி” பாத்திரத்தில் நடித்துள்ளார். முற்போக்கு எண்ணம் கொண்ட படித்த பெண்ணாக, தன் வாழ்வில் உயர் சாதனைகளை நோக்கி பயணப்படும் பெண் கதாப்பாத்திரத்தில், அருளின் சகோதரியாக நடித்துள்ளார்

துணிந்த பின் (தைரியம்) கதையில் அஞ்சலி கதாப்பாத்திரமான “முத்துலட்சுமி”

தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில், ஒவ்வொன்றிலும் மிகசிறப்பான நடிப்பை தரும் அஞ்சலி,தொலைந்து போன வெற்றியின் காதல் மனைவியாக நடித்துள்ளார். தனது காதல் கணவனின் வருகைக்காக ஏங்கும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை ) கதையில் ரம்யா நம்பீசன் கதாப்பாத்திரமான “லக்ஷ்மி”

குழந்தை நட்சத்திரமாக இருந்து 60 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை ) கதையில் ஒரு ஆசிரியராக மிகச்சிறந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மாணவர்களின் நன்மைக்காக உழைக்கும் அன்பான ஆசிரியராகவும், நாய்களின் காதலராகவும் நடித்துள்ளார்

தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனதை உருக வைக்கும் காதலில் தொடங்கி அருவருப்பு வரை மனித உணர்வுகளின் அனைத்து நிலைகளையும் காட்சிப்படுத்தும் அட்டகாசமான கதைகளின் ஒருங்கிணைப்பாக இத்திரைபடம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆச்சர்யம் தரும் வகையில் முன்னனி நட்சத்திரங்கள் சூர்யா,அர்விந்த் சுவாமி, வியஜ் சேதுபதி, ரேவதி, , பார்வதி, ரோகிணி, அதிதி பாலன், ரித்விகா, பிரகாஷ் ராஜ், சித்தார்த், அதர்வா, பிரசன்னா ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.