3.33 விமர்சனம்: 3.33 படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரில்லர் மற்றும் இன்ட்ரஸ்டிங் அனுபவம்

0
27

3.33 விமர்சனம்: 3.33 படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரில்லர் மற்றும் இன்ட்ரஸ்டிங் அனுபவம்

அம்மா ரமா, அக்கா ரேஷ்மா, அவரின் மகள், சாண்டி என்று அனைவருமே ஒன்றாக வீட்டில் வசிக்கிறார்கள். சாண்டி பிறந்த நேரமான 3.33 மணி ஆனவுடன் வித்தியாசமான கனவுகள், பயமுறுத்தல்கள் நிகழ்கின்றன. இதனால் அம்மா, அக்கா, குழந்தை ஆகியோர் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். சாண்டியும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட இதற்கு காரணம் என்ன என்று அறிய முற்படுகிறார்.இவர்களின் பிரச்னைகளுக்கு விடிவு கிடைத்ததா? சாண்டிக்கு நேர்ந்த சிக்கல்கள் என்ன? எதனால் இவ்வாறு நடக்கிறது? இதிலிருந்து சாண்டி மீண்டாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
இதில் பிரபல  நடன இயக்குனர் சாண்டி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ருதி செல்வம், ரேஷ்மா, மைம் கோபி, சரவணன், ரமா ஆகியோர் நடித்திருக்க இதில் சில கதாபாத்திரங்கள் குறைவாக காட்சிகளில் தோன்றினாலும் நிறைவாக அனைவருமே செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரனின் காட்சிக்கோணங்கள் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிரட்டலான இசையில் பயமுறுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு காட்சிகள் புரிகிற மாதிரி முடிந்த வரை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

முதல் முறையாக டைமை மையமாக கொண்ட முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர்; படமாக  தந்திருக்கிறார் இயக்குனர் நம்பிக்கை சந்துரு.இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும் வீட்டில் அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. பாடல், காமெடி மிஸ்ஸிங் என்றாலும் அது கதைக்கு தேவைப்படாததால் ஒன்றும் பாதிப்பில்லை.

மொத்தத்தில்  பேம்பூ ட்ரீஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் டி. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில்  3.33 படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரில்லர் மற்றும் இன்ட்ரஸ்டிங் அனுபவத்தைக் கொடுக்கும்.