பூமி விமர்சனம்

0
6

பூமி விமர்சனம்

சொந்த ஊருக்கு தன் தாயுடன் வருகிறார் நாசா விஞ்ஞானி ஜெயம் ரவி. விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் படும் துன்பங்களை பார்த்து. அவர்களுக்காக தன் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் பல புதுமைகளை செய்து லாபம் பார்க்கிறார். அவற்றை பல விவசாயிகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்.இதனால் கோபமடையும் கார்ப்பரேட் நிறுவனம் ஜெயம் ரவியை மிரட்டிபணிய வைக்க முயல்கிறது. ஆனால் அதை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி எப்படி தன்னுடைய சாதுர்யத்தால் சமாளித்து வெற்றி கண்டார்? என்பதே மீதிக்கதை.
விஞ்ஞானியிலிருந்து விவசாயி என்று தன் நிலைபாட்டை தெளிவாக மாற்றிக்கொண்டு அதை சொந்த கிராமத்து மக்களுக்காக பல விதங்களில் செயலாற்றி உதவி செய்து முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும், விவசாய மக்களுக்கும் வழிகாட்டியாக விளங்கி சாதனை நாயகனாகவும், நல்ல குடிமகனாகவும் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
நிதி அகர்வால், தம்பி ராமையா, ராதாரவி, கலெக்டராக ஜான் விஜய், மாரிமுத்து, நண்பன் சதீஷ், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் வில்லன் ரோனித் ராய் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு.
இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் எழுச்சியோடு கொடுத்திருக்கிறார்.
டுட்லியின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற காட்சிகளை தன் காமிரா கோணங்களில் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கார்ப்பரேட் முதலாளிக்கும் விவசாயிக்கும் நடக்கும் மோதலில் இறுதியில் யார் ஜெயித்தார்கள்? என்பதை பலவித யுத்திகளோடு, நாட்டுப்பற்றை கலந்து, பல நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து யதார்த்தமாக கொடுத்திருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும். எனினும் இயக்குனர் ;லஷ்மணின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
பசுமையான பூமி செழிக்கும்.