பூசாண்டி வரான் விமர்சனம்: பூசாண்டி வரான் சஸ்பென்ஸ், த்ரில்லிங், திகில் நிறைந்த விறுவிறுப்பும், வித்தியாசமும், சுவாரஸ்யம் நிறைந்த படம் RATING – 3 STAR

0
118

பூசாண்டி வரான் விமர்சனம்: பூசாண்டி வரான் சஸ்பென்ஸ், த்ரில்லிங், திகில் நிறைந்த விறுவிறுப்பும், வித்தியாசமும், சுவாரஸ்யம் நிறைந்த படம்

RATING – 3 STAR

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்து மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேஷிணீ ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள படம் பூசாண்டி வரான். ஜே.கே.விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் ஜே.கே.விக்கியே செய்துள்ளார். பி.ஆர்.ஒ- பி.ஸ்ரீவெங்கடேஷ்.

ஆமானுஷ்ய சக்திகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதும் நிருபர் முருகன் மலேசியாவில் நடந்த சம்பவத்தை பற்றி தெரிந்து கொள்ள அங்கே செல்கிறார். ஷங்கர், அன்பு, குரு மூன்று பேரும் உயிர் நண்பர்கள். தொல்பொருட்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி அன்பு வீட்டில் மற்ற இருவரும் வசிக்கின்றனர். போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் மூவரும் ஸ்பீட் ஆஃப் தி காய்ன் என்ற பேயுடன் விளையாட்டை ஆட ஆரம்பிக்கின்றனர். மல்லிகா என்று சொல்லும் பேய் இவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய மனித உடலை கேட்க, அந்த விளையாட்டு விளையாடுவதை தவிர்க்கின்றனர். மறுநாள் குரு வீட்டில் இறந்து கிடக்க, மற்ற நண்பர்கள் ஷங்கர், அன்பு இருவரும் நிருபர் முருகனிடம் தெரிவிக்க, அந்த நாணயத்தை விற்ற நபரை தேடி செல்கின்றனர். அங்கே திடுக்கிடும் உண்மையாக மல்லிகா உயிரோடு இருப்பதை பார்க்கின்றனர். மல்லிகா மூலம் நாணயத்தால் ஏற்பட்ட விபரீத சம்பவங்களை தெரிந்து கொண்டு, அதை எடுத்த இடத்தை தேடி செல்கின்றனர். அங்கே என்ன நடந்தது? தேடிச் சென்றவர்கள் உயிரோடு திரும்பினார்களா? குருவை கொன்றவர் யார்? நண்பர்களின் ஆசை இறுதியில் பூர்த்தியானதா? என்பதே மீதிக்கதை.

மிர்ச்சி ரமணா நிருபராக வந்து உண்மைகளை கண்டறிந்து பின்னணி கதையை சொல்லி புரிய வைத்து அதற்கான தேடலில் பெரும் பங்கு வகித்து சிறப்பாக செய்துள்ளார். நண்பர்களாக தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்து கை தட்டல் பெறுகின்றனர். மல்லிகாவாக ஹம்சனி பெருமாள் இவரைச் சுற்றி கதைகளம் அமைந்திருக்க அதை செவ்வென செய்துள்ளார். வினோத் மோகன சுந்தரம், தினேஷிணீ மற்றும் பலர் படத்தின் இயல்பு மாறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
ஒளிப்பதிவு-அசலிஷம் பின் முஹம்மத் அலி, இசை-டஸ்டின் றிடுங் ஷ், ஒலி வடிவமைப்பு-ஜேசன் அனைவருமே படத்தின் வெற்றிக்கு பஞ்சம் வைக்காமல் சிறப்பாக கொடுத்துள்ளனர்.

மலேசியாவில் நடக்கும் ஆமானுஷ்ய கதைக்களத்தை சுவாரஸ்யமாகவும், நன்பகத்தன்மையோடும் வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து திரைக்கதையமைத்து, நட்புடன் த்ரில்லரை கலந்து கொடுத்து அசத்தியிள்ளார் ஜே.கே.விக்கி. மலேசிய படங்களை இனி பார்க்க தூண்டும் அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திருப்புமுனை படமாக கொடுத்திருப்பதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். டைட்டில் பிரச்னையால் அதனை மாற்றாமல் பூசாண்டி வரான் என்று பெயரிட்டுள்ளது படத்திற்கு மேலும் ப்ளஸ். பொருத்தமான டைட்டில், புதுமுகங்கள் என்றாலும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என்று அத்தனையிலும் முத்திரை பதித்து சிறந்த படைப்பை கொடுத்துள்ளனர். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்திருக்கும் பூசாண்டி வரான் சஸ்பென்ஸ், த்ரில்லிங், திகில் நிறைந்த விறுவிறுப்பும், வித்தியாசமும், சுவாரஸ்யம் நிறைந்த படத்தை அனைவரும் பார்க்கலாம், ரசிக்கலாம்.