பழகிய நாட்கள் விமர்சனம்

0
18

பழகிய நாட்கள் விமர்சனம்

பள்ளியில் ஒன்றாக படிக்கும் மீரான்- மேகனா நண்பர்களாக பழகுகிறார்கள். இவர்;கள் பழகுவதை தடுத்து நிறுத்த நினைத்து மேகனாவை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றாலாகி போய்விடுகின்றனர். இதனால் மீரான் மனமுடைந்து கெட்ட பழக்கவழங்கங்களுக்கு அடிமையாகிறார். ஆனால் மேகனாவோ நன்றாக படித்து டாக்டராகிறார். பின்னர் சொந்த ஊருக்கு வரும் மேகனா மீரானின் நிலைமையை கண்டு அதிர்ச்சியாகிறார்.மீரான் மேகனாவை சந்தித்து பேச வரும்போது வெறுத்து ஒதுக்குகிறார். இதனால் மீரான் மேகனாவை ஒதுக்கினாரா? மேகனா  மீரானிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்? என்பதே க்ளைமேக்ஸ்.

மீரான், மேகனா, பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், சாய் ராதிகா, ஹீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ் ஆகிய அனைவருவே கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

ஜான் ஏ. அலெக்ஸ்,ரூபேஷ், ஷேக் மீரா ஆகியோரின் இசையும், பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவும், துர்காஷின் எடிட்டிங், எடிசனின் நடனம் ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக நிறைவு செய்தூள்ளனர்.
பள்ளிப் பருவக் காதலால் வரும் ஈர்ப்பை விட  பக்குவப்பட்ட காதல் தான் சிறந்தது என்பதை புரிய வைக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை தெளிவாக சொல்ல எடுத்த முயற்சிகளில் தன்னால் முடிந்த வரை சிறப்பாக சொல்லி தெளிய வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ்.

ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில்; இளம் காதலர்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிய வைக்கும் படம் பழகிய நாட்கள்.