டிக்கிலோனா விமர்சனம்

0
10

டிக்கிலோனா விமர்சனம்

2020ல் திருமணம் செய்து கொள்ளும் சந்தானம் ஹாக்கி வீரர் ஆகமுடியாமல் மின்சார லைன்மேனாக வேலை செய்கிறார். தன் வாழ்நாள் ஆசை நிறைவேறாத கவலை, மனைவி, மாமனாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் விரக்தியில் இருக்கிறார். 2027ல் டைம் டிராவல் மிஷினை கண்டு, அதன் மூலம் தன் கடந்த காலமான 2020ல் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்த முயல்கிறார். அங்கே சென்ற பிறகு திருமணத்தையும் தடுத்து நிறுத்தி வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு ஹாக்கி விரராக ஆகிறார். ஆனால் ஆசை மட்டுமே நிறைவேற குடும்ப வாழ்க்கை மனைவியின் பணக்கார திமிரால் அல்லோலப்படுகிறது. இதனால் வெறுப்படையும் சந்தானம் மீண்டும் நிறுத்திய முதல் திருமணத்தை நடத்த முயற்சி செய்கிறார். இதனால் ஏற்படும் விபரீதங்கள், சந்தானத்தின் நிலை என்ன? இறுதியில் எடுக்கும் முடிவு என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

சந்தானம் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு, தன்னுடைய பஞ்ச் டயலாக், ரைமிங்; காமெடி, சரவெடியோடு கலகலக்க வைத்து விடுகிறார்.
அனகா, ஷ்ரின் கான்ச்வாலா என இரண்டு நாயகிகள் முடிந்தவரை செய்துள்ளனர்.
மற்றும் அருண் அலெக்சாண்டர், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆனந்த்ராஜ், மூனீஷ்காந்த், ஷாரா, சித்ரா லட்சுமணன் இவர்களுடன் ஹர்பஜன் சிங் சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார்.

அர்வியின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தனித்துவமிக்க இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் இணைந்துள்ளனர்.

துன்பத்துடன் கடந்த காலத்தை மாற்ற நினைக்கும் எவருக்கும் மாறினால் இருக்கிற வாழ்க்கையும் கேள்விக்குறிதான் என்பதை டைம் டிராவல் கதை மூலம் காமெடி கலந்து நகைச்சுவையுடன் கொடுக்க நினைத்திருக்கும் இயக்குனர் கார்த்திக் யோகியின் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ், சோல்ஜர்ஸ் பாக்டரி சார்பில் கொட்டப்பாடி ஜே. ராஜேஷ் மற்றும் கே.எஸ். சினிஷ் தயாரிப்பில் வந்திருக்கும் டிக்கிலோனா கலகலப்பான லாஜிக் இல்லா பயணம்.